கொசுவத்தி

டாப்ளட் – ஐபேட், ஆண்ட்ராய்ட், விண்டோஸ் – அலுவலகப் பயன்பாட்டிற்கு எது உகந்தது?


பொழுதுபோக்குடன் கூடிய தினசரி வேலைக்கு Windows டாப்ளட்டுகள் ஒரு ரவுண்டு வரும் நான் நம்பக் காரணங்கள் என்ன?

ஐபேடு கவர்ச்சியானது. மின்னஞ்சல், பேஸ்புக் மற்றும் RSS போன்ற இலகு ரக பொழுது போக்கு அம்சத்திற்கு வசதியானது. தற்போதுள்ள குறைகளை ஐபேடு சரிசெய்யாவிட்டால் தினசரி வேலைக்கு இது ஒத்துவரப்போவதில்லை.

அப்படி என்ன பிரச்சினை ஐபேடில? வருச காலமா பயன்படுத்திட்டுத்தானே இருக்கோம் அப்டின்னு ஐபேடு ரசிகர்கள் எதிர்வாதம் செய்யலாம்.

IPad_2_Smart_Cover_at_unveiling_crop
ஒரே பதில்தான் – உங்கள் ஐபேடு அல்லது ஆண்ட்ராய்டு டாப்ளட்டு உங்கள் மடிக்கணிணியை replace செய்ய இயலுமா என்பதே.

முடியாது என்பதற்கான காரணங்கள்.
ஐபேடில் mouse வேலை செய்யாது. பாயிண்டர் என்றொரு concept-ஏ அதில் கிடையாது. தொட்டது தொன்னூறுக்கும் தொட்டு தொட்டுப் பேசவேண்டும். அவர்கள் தரும் ஊனமுற்ற கீபோர்டு வைத்து அனைத்தையும் செய்ய இயலாது. தவிற Office செயலி வகையராக்களுக்கு பிறரைச் சார்ந்திருக்கவேண்டும். அப்படியே Microsoft Word ஐபேடு ஆப்பு வாங்கி வெச்சாலும் தொட்டுத் தொட்டும், ஊனமுற்ற கீபோர்டை மட்டும் வைத்து உறவாடவேண்டும். ஒரு வாரத்துக்கு மேல் நீங்கள் உறவாடினால் நீங்கள் தெய்வத்தின் தெய்வம்.

ஐபேடு அளவிற்கு ஆண்ட்ராய்டு டாப்ளட்டுகள் மோசமில்லை. mouse மற்றும் ரெகுலர் கீபோர்டுகள் வேலை செய்கின்றன. தினசரி வேலைக்கு ஐபேடை ஒப்பிடுகையில் ஆண்ட்ராய்டு டேப்ளட்டுகள் அதிக வசதியைத் தருகின்றன.

htc-flyer-tablet-unveild

ஒன்று சொன்னார்போல, கீபோர்டு மூலம் தமிழில் தட்டச்ச இரண்டிலுமே முடிவதில்லை. திரையில் உள்ள கீபோர்டில் மட்டும்தான் தமிழ் வரும். தவிற தினசரி வேலைகளில் வரும் பல்வேறு செயலிகள் (உதா. remote desktop client, ftp client, ssh client) ஐபேடு மற்றும் ஆண்ட்ராய்டில் இருந்தாலும் தினசரி வேலையில் செய்து பார்த்தால்தான் அதன் பிருஷ்ட வலி (பெயின் இன்த ஆசு) தெரியும்.

ஏன் விண்டோசு டாப்ளட்? (விண்டோஸ் RT டாப்ளட்டுகளை நான் ஆதரிக்கவில்லை)

surfacepro3

பதில் பின்வருவன.

1. அது உங்கள் மடிக்கணினியை replace செய்யும்.
2. லேப்டாப் 3 கிலோ. அடாப்டர் முக்கால் கிலோ தூக்க வேண்டியதில்லை
3. லாப்டாப்பை 4 மணிநேரம் பாட்டரியின்றி இயக்கலாம். டாப்ளட் 7 அல்லது 8 மணிநேரம் வரலாம்.
3A. குறைவான booting நேரம்.
4. ஐபேடுக்கு வாங்கவேண்டிய உதிரி பாகங்களை விட (HDMI கேபிள், VGA கேபிள், நெட்ஒர்க் அடாப்டர்) விண்டோஸ் மற்றும் ஆண்ட்ராய்டுக்கு விலை குறைவு.
5. கணினி போலவே இயங்கும் என்பதால் தமிழில் இப்போது உள்ளது போலவே இயங்கும்.
6. கீபோர்டு மவுஸ் வைத்து மடிக்கணினியாகவும் பயன்படுத்த முடிகிறது. அத்தணையையும் கழற்றி எறிந்துவிட்டு டாப்ளட்டாகவும் பயன்படுத்த முடிகிறது.
7. சார்ஜ் செய்ய உங்கள் micro usb மொபைல் சார்ஜர் போதும்.

கண்ணில் படும் சில விண்டோஸ் டாப்ளட்டுகள்
சர்பேஸ் புரோ 3 (இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ளது. சர்பேஸ் புரோ 2 வாங்கினால் உங்களுக்குச் சனி பிடித்திருக்கிறதென்று பொருள்)
ஆசுஸ் ட்ரான்ஸ்பார்மர்
டெல் வென்யூ புரோ
HP split

Advertisements

2 thoughts on “டாப்ளட் – ஐபேட், ஆண்ட்ராய்ட், விண்டோஸ் – அலுவலகப் பயன்பாட்டிற்கு எது உகந்தது?”

  1. தமிழ்மணத்தில் நுழைந்தவுடன் டேப்லெட், ஐ பேட் என்றெல்லாம் கண்ணில் பட்டவுடன், புதிய தொழில் நுட்பத்தில் சிறுவயது முதலே ஆர்வம் இருந்ததாலோ என்னவோ மௌஸ் என்னையறியாமல் கிளிக்கி உங்கள் வலைப்பூவில் கொண்டுவது சேர்த்தது.
    தாங்கள் சொல்வது போல Windows டாப்ளட்டுகள் ஒரு ரவுண்டு வரும் என நானும் நம்புகிறேன்:)
    வித்தியாசமான வலைப்பூ நிறைய எழுதுங்கள், வாழ்த்துக்கள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s