கனகாம்பரத்தை மறந்திட்டீங்களா?


எனக்கு இந்த சென்னை போன்ற மெட்ரோ நகர் மக்களைப் பற்றித்தெரியாது. ஆனால் சிற்றூர்கள் தொடங்கி நகரங்கள் வரை, வீடு என்று இருந்தால் தோட்டம் என்ற ஒன்று இருக்கும். தோட்டம் ஒரு பரந்து விரிந்த இடத்திலோ அல்லது ஒரு பெயிண்ட் டப்பாவிலோ இருக்கும். அவரவர் ஆர்வத்தைப் பொறுத்தது. சிறு வயதில் பட்ரோஸ் மீது எனக்கு ஒரு பெரிய காதலே உண்டு. அதன் கவர்ச்சி ததும்பும் ரோஸ் நிற பூவின் அழகிற்கு எதைக் கொடுத்தாலும் இணையாகாது என்கிற திமிர் பிடித்த காதல் என்னது. தவிற, விதைபோட்டு வைக்கனும், அதைக் கோழி கிளராமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்கிற பிரச்சினைகள் எல்லாம் கிடையாதே, தண்டை ஒடித்து இன்னொரு இடத்தில் வைத்தால் போதும்.
kanakambaram

Image (c) The Hindu

இப்போது குரோட்டன்ஸ், மணி பிளாண்ட் (இதை வைத்தால் பணம் கொட்டும் என்று புருடா வேறு) என்று மக்கள் நாகரீகம் மற்றும் வெளிநாட்டு செடிகள் மீதான மோகத்தின் காரணமாக இலைகளை மட்டுமே தரும் செடிகளை வளர்க்கத் தொடங்கிவிட்டார்கள் என ஒரு கட்டுரை இன்றைய இந்துவில் வந்துள்ளது. அதில் குறிப்பிடப்படும் ஒரு செய்தி நியாயமானது. கானகாம்பரம், டிசம்பர் பூ, அடுக்கு செம்பருத்தி, அந்தி மந்தாரை, சங்கு புஷ்பம் போன்ற நம்மூர் பூச்செடிகள் வருடம் பூரா உங்கள் தோட்டத்தை பூக்களுடன் வைத்திருக்கும் என்பதே. ஆம், சங்க இலக்கியத்தில் எடுத்துப் பார்த்தால் ஒவ்வொரு மாதத்திற்கும் பூக்கும் அல்லது காய்க்கும் தாவரங்களின் விபரங்கள் அவ்வளவு உள்ளன. ஆனால் காலம் மாற மாற அது பத்தாம்பசலித்தனம் அல்லவா ஆகிவிடுகிறது.

sangu pushpam

Image (c) The Hindu

Remember Kanakambaram? – http://www.thehindu.com/features/homes-and-gardens/remember-kanakambaram/article6201400.ece

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s