இந்தியாவும் இந்தோனேசியாவும் – 1


Forget China, India Should Look towards Indonesia என்று பல்லவி அய்யர் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்.

மூலக்கட்டுரை – https://in.news.yahoo.com/forget-china–india-should-look-towards-indonesia-060805127.html

கட்டுரைத் தொடர்
இந்தியாவும் இந்தோனேசியாவும் – 1
இந்தியாவும் இந்தோனேசியாவும் – 2
இந்தியாவும் இந்தோனேசியாவும் – 3

(முடிந்த வரை எளிமைப்படுத்தி உள்ளேன். பொருள் மயக்கம் இருந்தால் பின்னூட்டத்தில் தெரியப்படுத்தவும். – பாண்டியன்)

பொதுவாக இந்தியர்கள் பலரும் ஒரே கருத்தைக் கொண்டவர்கள் அல்லர். ஆனாலும் இந்தியாவின் “தனித்தன்மை” என்கிற நம்பிக்கையில் இவர்கள் காணக்கிடைக்காத ஒருமித்த நம்பிக்கை கொள்ள முயல்பவர்கள். வலது சாரிகள், இடது சாரிகள் மற்றும் சந்தர்ப்பவாதிகள் என்று அனைத்து தரப்பினரும் தழுவிக்கொண்ட ஒரு நம்பிக்கை – இந்தியா “தனித்தன்மை” வாய்ந்த வேறுபாடுகள் கொண்டது, பறவைகள் பலவிதம் என்று பாடக்கூடியது, ஒவ்வொன்றும் ஒருவிதம் என்று முரண்படக்கூடியது; பெரியது; சகிப்புத்தன்மை கொண்டது மற்றும் சிக்கலானது.

ஒரு உணர்வுப் பூர்வமான கல்வியைக் கற்ற எனக்கு, இந்தியாவின் “தனித்தன்மை” வாய்ந்த மதநல்லிணக்க வாழ்வுமுறை சொல்லித்தரப்பட்டது. பல ஆண்டுகளாக நான் பெற்ற தண்டனை இது. இந்தியாவைத் தொடர்ந்து வதைத்து வரும் ஏழ்மை, பெண் வெறுப்பு, சாதிய ஒடுக்குமுறை மற்றும் ஏனைய மனிதத் தன்மையற்ற செயல்களுக்குப் பூசப்பட்ட ஒரு வகையான மருந்து இது.

பத்தாண்டு காலம் நான் சீனாவிலும், பிறகு ஐரோப்பாவிலும் பத்திரிகையாளராகப் பணியாற்றியது இந்த நம்பிக்கையைத்தான் வளர்த்தது. Smoke and Mirrors என்கிற சீனாவைப் பற்றிய நூலில், நான் இந்தியாவையும் சீனாவையும் பல்வேறு அளவுருக்களில் ஒப்பீடு செய்திருப்பேன்.  இரு நாடுகளும் மகத்தான புவியியல் அமைப்பைக் கொண்டவை. தாராளமான மக்கள்தொகை கொண்டவை மற்றும் பழங்கால வரலாற்று நாகரீகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவை. இருந்தாலும் ஒரு இந்தியனாக என் பார்வையில் – ஒரே அதிகாரப்பூர்வ மொழி (இந்தியாவில் 23 அதிகாரப்பூர்வ மொழிகள் இருக்கின்றன), தரப்படுத்தப்பட்ட ஒரே எழுத்து வடிவம், ஒரே பெரும்பான்மை இனம், சீர்மையை அல்லது ஒரே தன்மையை திணிக்கும் அரசியல் மனோபாவம் எல்லாம் சேர்ந்து – சீனா ஒரே சீரான நிறுவனமாகத் தெரிகிறது.

அந்த நூலுக்கு நான் எழுதிய முடிவுரையில், முன் எப்போதுமில்லாத சீனாவின் பொருளாதார சாதனைகளைப் பாராட்டியும் ஆராய்ந்தும் எழுதுவதில் நேரம் செலவிட்டேன். இதில் இந்தியா வெற்றி பெற தெளிவாகத் தவறியிருந்தது. அப்படி இருந்த போதிலும், இந்தியாவின் ‘வரலாற்றுப் பூர்வமாக ஈடு இணையற்ற’ சரித்திர சாதனையையும் உலகம் அடையாளம் கண்டுகொள்ளவேண்டும் என்று வாதிட்டிருப்பேன். முரண்பாடுகளைக் கடந்து இந்தியா ஜீவித்திருப்பது – புவியியலினாலோ, மொழியினாலோ, மதம் அல்லது இனத்தினாலோ அல்ல – பன்முகத்தன்மைக்கான வாய்ப்பினாலோ அல்லது விருப்பத்தினாலோதான் என்று தேன் ஒழுக மழுப்பி எழுதியிப்பேன்.

2009ல் நான் ஐரோப்பிய யூனியனின் தலைநகரான ப்ரஸ்ஸல்சுக்கு இடம்பெயர்ந்தேன். ஐரோப்பாவிற்கான பத்திரிக்கையாளராக அடுத்த மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தேன். 19 மற்றும் 20ஆம் நூற்றாண்டுகளுக்கான வரலாறு, இப்படி அவர்களது சிக்கலான மக்கள் வேறுபாடுகளைக் கலைந்து, ஒரு மொழி, ஒரே மதம் அடிப்படையிலான நாடுகளானது என்பதைக் கண்டறிந்தேன். மக்கள் வேறுபாடுகளைக் கலைந்து எளிமையாக்கினால்தான் ஒரு அரசியல் அலகு வாழமுடியும் என்கிற கருத்திலியற்கு 1947லிருந்து வலுவான மறுப்பாக இந்தியா விளங்கி வருகிறது.

Punjabi Parmesan என்கிற எனது அடுத்த நூலில், இந்தியா ஐரோப்பிய யூனியனுக்குக் கொடுக்கவேண்டிய சிலவற்றை வைத்துள்ளது என்று முடித்திருப்பேன். வெளித்தோற்றத்தில் வேறுபட்ட பன்முகத்தன்மை கொண்டவற்றை வைத்து நன்கு இயங்கக்கூடிய, பொதுவான அடையாளத்தை வெற்றிகரமாக உருவாக்க முடியும் என்று பொருள் தரக்கூடிய வகையில், நான் இந்தியாவை முன்னோடி ஐரோப்பா என்று அழைத்தேன்.

ஆனால் 2012களின் மத்தியில் நான் ஜகார்த்தாவிற்கு இடம் பெயர்ந்த போது, உலகத்தோர் அறியாமையில் மூழ்யிருப்பதை உணர்ந்தேன் – இந்தியர்கள் உட்பட. வளர்ந்து கொண்டிருக்கும் சீனா மற்றும் பணக்கார மேலைநாடுகளின் பால் நமக்குள்ள ஆவேசம், நமது கலாச்சாரப் பங்காளி மற்றும் மக்களாட்சி அண்டை நாடான இந்தோனேசியாவை மறைத்துவிட்டது. இந்தியாவைப் போன்றே பல கோட்பாடுகளையும் தேர்ந்து எடுத்துக்கொள்கிற, கட்டுக்கடங்காத, சகிப்புத்  தன்மை வாய்ந்த, பரந்து விரிந்த சிக்கலான நம்பமுடியாத அமைப்பைக் கொண்டது இந்த நாடு. சிந்தியா என்கிற பொருத்தமற்ற கலவைக்குள் இந்தியாவும் சீனாவும் திணிக்கப்பட்டபோதும், இந்த நாடு மிக அறிதாகவே இந்தியாவுடன் தொடர்புடையதாக காட்டப்படுகிறது.

ஜகார்த்தாவைக் கண்டுணர்தல்….

Indonesia Image (c) http://www.operationworld.org
Indonesia – Image (c) http://www.operationworld.org

(தொடரும்…)

தொடர்புடைய பதிவுகள்

2 thoughts on “இந்தியாவும் இந்தோனேசியாவும் – 1

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s