இந்தியாவும் இந்தோனேசியாவும் – 2


ஜகார்த்தாவைக் கண்டுணர்தல்

ஜகார்த்தாவிற்கு நான் குடி பெயர்ந்தது திட்டமிடப்பட்ட ஒன்றாக இல்லாமல் இயல்பான ஒன்றாக இருந்தது. என் கணவர் ஜுலியோவிற்கு, ப்ரஸ்ஸல்ஸில் 3 வருட பணிக்குப் பிறகு ஜகார்த்தாவில் ஐரோப்பிய யூனியன் குழுவில் வேலை கொடுக்கப்பட்டது. நாங்கள் அதைப்பற்றி பேசி ஒத்துக்கொண்டோம், ஏனென்றால் இந்தோனேசியாவைப் பற்றி நாங்கள் கொஞ்சம் அறிந்திருந்தோம். இது ஒரு நல்ல வாய்ப்பாக எங்களுக்குத் தோன்றியது.  அது இஸ்லாமியர்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட நாடு. அந்த நாடு சர்வதேச அளவில் ஒப்புக்கொள்ளப்பட்டதை விட முக்கியமானதாகவும் ஆர்வத்தைத் தூண்டும் வகையிலும் அமையும் என்று எங்களது உள்ளுணர்வு சொல்லிக்கொண்டிருந்தது. கடற்கரை சொர்க்கமான பாலி தீவு, இந்தியாவிற்கு வெளியே இந்து மதம் தழைத்தோங்கியிருக்கும் இடங்களில் ஒன்று என்பதையும் நான் அறிந்திருந்தேன். இந்தோனேசியாவைப் பற்றிய இந்த அற்ப அறிதலுடன் எனது அறிவு வரண்டுவிட்டது.

கட்டுரைத் தொடர்
இந்தியாவும் இந்தோனேசியாவும் – 1
இந்தியாவும் இந்தோனேசியாவும் – 2
இந்தியாவும் இந்தோனேசியாவும் – 3

எங்களது மூட்டை முடிச்சுகள், பூனைகள், குழந்தைகளுடன் பாதி உலகத்தைக் கடந்து 18 மணிநேரப் பயணம் செய்து, ஒரு புழுக்கம் நிறைந்த ஆகஸ்ட் பின்மாத மாலையில் ஜகார்த்தாவில் இறங்கினோம். வருடாந்திர லெபரான் (ஈத் பண்டிகை) பண்டிகைக்கான விடுமுறை ஒரு மாத கால நோன்பினை முடிவிற்குக் கொண்டிருந்தது. நகரம் திரும்ப தனது ட்ராபிக் ஜாமில் குமுறிக்கொண்டிருக்கும் வாழ்க்கைக்குள் மீண்டு கொண்டிருந்தது.

Jakarta-Soekarno-Hatta-International-Airport2

ஜகார்த்தாவில் எனது முதல் சில வாரங்கள் ஏற்றத்தாழ்வு கொண்டதாகவே இருந்தது. ஒரு கசகசப்பான தாற்காலிகக் குடியிருப்பில் எனது ஒரு ஜெட்லாக் பாதிப்பு கொண்ட 15 மாதக் குழந்தையுடனும், வாய் ஓயாத ஒரு நான்கு வயது குழந்தையுடனும், மனம் கலைந்த பூனைகளுடனும்…. ஒன்றும் சொல்லிக்கொல்கிறமாதிரி இல்லை. ஜுலியோ அலுவலகத்திற்குள்ளும், வயது வந்தவர்களுக்கான வாழ்க்கைக்குள்ளும் மறைந்துவிட, நான் விளையாட்டுக்குழுக்களையும், பள்ளிகளையும், வீட்டுப் பணியாளர்களையும் மற்றும் ஒரு நிலையான வீட்டையும் தீவிரமாகத் தேடிக்கொண்டிருந்தேன்

அந்த நாட்டைப் பற்றி வாசித்துணர எனக்கு மிகக் குறைந்த நேரமே செலவிட முடிந்தது. அழுகும் குழந்தையை சாந்தப்படுத்தவும், டயனோசரின் வகைகளைப் பற்றிய முடிவில்லாக் கேள்விகளுக்குப் பதில் சொல்லவும் வேண்டியிருந்ததால், என் வழியில் நகரத்தை ஆராய மிகக் குறைந்த வாய்ப்புகளே அமைந்தன. ஆகவே நான் கண்டவை சிதறியிருந்த புதிர்பாகங்கள் போல இருந்தன. அவற்றையே ஒன்று கோர்த்து பிற்பகுதியில் தந்திருக்கிறேன்.

முதன்முதலில் என்னை அறிந்தது, பல்வேறு மதங்களை, கலாச்சாரத்தை அடைந்ததற்கான அடையாளமாக உள்ள மனிதர்களின் வெவ்வேறு பெயர்கள். எந்த ஒரு நாளின் செய்தித்தாளைப் புரட்டினாலும், வகை வகையான சாண்ட்விச்களைப் பிரித்து வைத்தார் போல இருக்கும், வேறெங்கும் காண வாய்ப்பே இல்லாத பெயர்கள் அல்லது புனைப் பெயர்கள் – டெடி அன்வர், விஸ்ணு அலி, வெரோணிகா கொலோண்டம், லியனார்டஸ் நியோமேன், ஜியோநவன் முகம்மது.

இந்த பெயர் வைக்கும் கலை அங்கே வளர்ப்பிக்கப்டுகிறது. நாட்டின் தேசீயவாதிகளின் சின்னமாக மோனாஸ் (டெல்லியின் இந்தியா கேட் போல) என்கிற வானில் 100 மீட்டர் உயர்ந்த ஒரு சதுர ஸ்தூபி மத்திய ஜகார்த்தாவில் ஜனாதிபதி மாளிகையின் அருகில் பிராண்டமானதாக இருக்கிறது (பார்க்க விக்கி – மோனாஸ்).  இந்தோனேசியாவின் அதிகார அடையாளத்தைத் தெளிவாகச் சொல்லும் இதயத்துடிப்புபோல அமைந்துள்ளது.

monas

ஒரு வாரநாளின் காலைப்பொழுதில் நான் மோனாஸைச் சுற்றிப் பார்த்தேன் (குழந்தை புதிதாக பணியமர்த்தப்பட்டிருந்து ஆயாவிடம் கொடுக்கப்பட்டிருந்தது). இந்த நினைவுச் சின்னத்தின் தென்மேற்கு மூலையில் ஹிந்து கடவுளான கிருஷ்ணன் ஒரு மிகப்பெரிய சிலையாக இருந்து ஆதிக்கம் செய்து கொண்டிருந்தார், பாண்டவ இளவலான அர்ஜுனனை தேரில் அழைத்துக்கொண்டு, விரையும் குதிரைகளுடன் போருக்குச் செல்வது போல! அதற்கு நேர் எதிரில் ஜகார்த்தாவின் பெரிய மசூதி, இஸ்திக்லாலின் ஸ்தூபி (பார்க்க விக்கி – இஸ்திக்லால் மசூதி) மற்றும் நகரின் கத்தோலிக்க தேவாலயத்தின் உருக்கு இரும்பால் செய்யப்பட்ட சர்ச் டவரும் வான்வெளியைக் கூட்டாகப் பகிர்ந்திருந்தன.

chariot_monas_jakarta_indonesia

அந்த பின்மதியத்தில் நான் வசிக்கக்கூடிய வீடுகளைக் காட்டுவதற்கு வீடு புரோக்கரைச் சந்திக்கவேண்டியிருந்தது. அவள் பெயர் Dewi (தேவி) என்ற பெயருடைய ஒல்லியான இளம் இஸ்லாமியப் பெண் – மேற்கத்திய பாணியில் உடை, பாவனையுடன் சாடின் கவுன் அணிந்திருந்தாள்.  அப்போதுதான் ஒரு திருமணத்திற்குப் போய் திரும்பியிருப்பதாகச் சொன்னாள். நாங்கள் வீடுக்காக அலைந்து கொண்டிருந்த போது ஒரு பாழடைந்த வீட்டைக் கடந்தோம். அந்த வீட்டில் பேய் குடிகொண்டுள்ளதாக தேவி சொன்னாள். ஒரு இஸ்லாமியப் பெண் – ஹிந்துப் பெயர் வைத்திருக்கிறாள் – ஐரோப்பிய உடை அணிந்திருக்கிறாள் – பேய்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறாள். ஒரு வினோத மனச்சிதைவாகத் தோன்றலாம். ஆனால் அது மாதிரி ஏதும் கிடையாது. தேவி (Dewi) ஏனைய இந்தோனேசியர்களைப்போன்றே தானும் ஒரு முரண்பாடாக இருக்கிறோம் என்றே அறியாதவள்!

(தொடரும்..)

2 thoughts on “இந்தியாவும் இந்தோனேசியாவும் – 2

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s