திரில்லர்

கன்னிநிலம் – ஜெயமோகன்


விரைவான வாசிப்பிற்கான திகில் கதை என்கிறது இந்த நாவலைப் பற்றிய ஆசிரியரின் அறிமுகம். உண்மைதான். பின் மதியத்தில் தொடங்கினேன். இடையில் உணவு இடைவேளை தவிற நூலைக் கீழே வைக்கவே மனது வரவில்லை.

கன்னிநிலம்
ஆசிரியர்: ஜெயமோகன்
பிரிவு: புனைவு
பதிப்பு: கவின் கயல் புக்ஸ், சென்னை – முதல்பதிப்பு டிசம்பர் 2013
ISBN: – http://ta.wikipedia.org/s/3cje
விக்கி –
இணையத்தில் வாசிக்க: http://www.jeyamohan.in/?p=3566

கன்னிநிலம்
கன்னிநிலம்

மணிப்பூரில் இராணுவ கேம்பில் வாழும் திருநெல்வேலியைச் சேர்ந்த லெப்டினெண்ட் நெல்லையப்பன் ஒரு ராணுவ நடவடிக்கையின்போது மணிப்பூர் போராளிக்குழுத் தலைவரின் மகளான ஜ்வாலாமுகியைக் கைது செய்யவேண்டி வருகிறது. ஒரு குறிப்பிட்ட நிகழ்வில் காதலில் விழுந்து, இராணுவ சந்தேகக் கண்களில் விழுகிறார். தொடர்ந்து கதை புல்லட் ரயில் வேகத்தில் போகிறது.

விரைவான வாசிப்பிற்கான இந்த நாவலில் இராணுவ தகவல்கள், மியான்மர் மற்றும் சீன அரசின் கைப்பாவைகளான மணிப்பூர் விடுதலைப் போராட்ட இயக்கக்குழு தகவல்கள் தவிற நெல்லையப்பன் மற்றும் ஜ்வாலாவின் காதலோ கா…தல்!

எப்படியாவது இவர்களின் காதல் கனிந்து விடாதா என்று ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஏங்கிக்கொண்டிருப்பதைத் தவிர்க்கமுடியவில்லை. புத்த பௌர்ணமி வெளிச்சத்தில் மலைச்சரிவில் மதூக மலர்வனங்களில் மகிழ்ந்திருக்கும் காட்சியை மனதில் நிரப்பியிருப்பார் ஜெயமோகன்.

கன்னிநிலம் - நூல் அறிமுகம்
கன்னிநிலம் – நூல் அறிமுகம்

பல சமயத்தில் இராணுவ அதிகாரிகளின் பால் கோபம் வந்தாலும், இத்தகு சூழல்கள் புரிந்து கொள்ளப்படவேண்டியவையே. இறுதியில் எப்படியாவது நெல்லையப்பனுக்கு உதவவேண்டும் என்று சக பணியாளர்களும், மேலதிகாரிகளும் முயற்சி செய்யும் அத்தியாயத்தை ரசித்தேன்.

விரைவான வாசிப்புகளுக்குரிய நாவல் ஆனதால், ஆழ்ந்து பொருள்கொள்ளக்கூடிய அளவில் இருக்கும் ஏனைய ஜெயமோகன் ஆக்கங்களிலிருந்து இது சற்று மாறுபட்டது என்று படுகிறது.

ஜ்வாலாவைப் பற்றிய வர்ணனைகளில் எழுத்தாளருக்கு ஒரு வாவ்!!

சிறிய குருவி போலிருந்தாள். கச்சிதமாக, முற்றிலும் புதிதாக, எக்கணமும் விருட் என்று சிறகடித்துப் எழுந்துவிடுவதைப்போல! – ப61

இத்தணை காதல் மற்றும் பால் மயக்கங்களுக்கு ஊடேவும் ஒரு போராளித்தனம் வந்து கொண்டேதான் உள்ளது

“நான் (நெல்லையப்பன்) எந்த இறைச்சியும் சாப்பிடுவதில்லை”
“ஏன்?”
“எங்கள் வழக்கம்”
“மீன்?”
“மீன், முட்டை, இறைச்சி எதுவும்”
“ஏன்?”
“உயிர்களைக் கொன்று தின்பது பாவம்”
“மணிப்புரிகளைக் கொன்றால் மட்டும் பாவமில்லையா?”
“இது போர். என் நாட்டுக்காக இதைசெய்கிறேன்”
”இது உங்கள் நாடு இல்லை. இது மணிப்புரி மக்களின் நாடு”
”இது இந்தியா”
“அதை நீங்கள் சொல்லக்கூடாது.நாங்கள் சொல்லவேண்டும்”அவள் முகம் சீறிச்சினந்தது.
“ஸாரி….நான் ராணுவ ஆள். எனக்கு சொல்லப்பட்டதுதான் எனக்குத்தெரியும்”
“நீங்கள் பயிற்சியளிக்கப்பட்ட வேட்டை நாய்கள்”
“நீங்கள்? மாலை போட்டு அனுப்பபடும் பலியாடுகளா?”
“ஷட் அப்!”
“ஸாரி”
அவள் மெல்ல மூச்சிரைத்து தணிந்தாள். ”இட் இஸ் ஓக்கே” என்றாள்

தவிற ஆயுதம் மற்றும் இராணுவத்தீர்வு சார்பான காரமான எழுத்தாளர் பார்வைகளும் கதை மாந்தர்கள் உடாக வெளிப்படுகிறது.

மணிப்பூர் பிரிவினையைப் வாக்குவாதம் எழும் இடம் இது.

“சரி நான் உன்னைக் கேட்கிறேன். புரிந்துகொள்ளவில்லை என்கிறாயே. உண்மையிலேயே புரியவில்லை. ஏன் உங்களுக்குள் இத்தனை சண்டைகள்? குக்கி நேஷனல் அசெம்ப்ளிக்கு முதல் எதிரி குல்மி நேஷனல் யூனியன் என்கிறார்கள் . நாகாக்கள் மிஜோக்களைக் கொல்கிறார்கள். மீய்த்திகள் மற்ற அத்தனைபேரையும் கொல்கிறார்கள்…  இதற்கும் நாங்கள்தான் காரணமா?”

“எங்களுக்கும் இன்னும் அதிகாரச் சமநிலை உருவாகவில்லை . உருவாக நீங்கள் விடவில்லை. எங்களுக்கு அதிகாரமே இன்னும் கிடைக்கவில்லை. உங்கள் உளவுத்துறை எங்களுக்குள் சண்டை மூட்டிவிடுகிறது” அவள் சற்று வலு குறைந்த மொழியில் சொன்னாள். ”ஆனால் மணிப்புரிகள் ஒன்றுபடுவார்கள். ஒருங்கிணைந்த மணிப்புர் அமையும்.”

”ஒருங்கிணைந்த மணிப்பூர்? ”இகழ்ச்சியுடன் சிரித்தேன். என் கை ஓங்குவதை உணர்ந்தேன். ” பர்மாவிலிருந்தும் உங்கள் பங்கை பெறப்போகிறீர்களா? அதற்காகத்தான் பர்மாவிலிருந்து ஆயுதமும் பணமும் பயிற்சியும் பெற்று போராடுகிறீர்கள் இல்லையா? ”

“எங்கள் முதல் எதிரி இந்தியா. முதலில் இங்கே எங்கள் மண் அமையட்டும். எதிரியை பிறகு பார்த்துக் கொள்வோம்” அவள் குரல் திடமாக இருந்தாலும் கண்கள் தாழ்ந்தன.

அது எனக்கு வேகமூட்டியது” நீ£ படித்தவள்தானே? இந்தமாதிரி கதைகளை நம்ப உனக்கு வெட்கமாக இல்லையா? இது நடக்கிற காரியமா? உங்களை அப்படி விடுவதற்கு பர்மா என்ன முட்டாள்களின் நாடா? யாருக்காக இந்தப்போர்? இத்தனை மரணங்கள்?”

இந்திய பர்மிய எல்லையில் உள்ள மதூகவனம் இதுதான் என்று நினைக்கிறேன் Image (c) http://kimicolney01.wordpress.com/2014/01/17/the-forgotten-states-of-india/
இந்திய பர்மிய எல்லையில் உள்ள மதூகவனம் இதுதான் என்று நினைக்கிறேன் Image (c) http://kimicolney01.wordpress.com/2014/01/17/the-forgotten-states-of-india/

ஒரு போராளி அமைதிக்கான தன் ஆவலை வெளிப்படுத்தும் இடம்.

”நானும் (ஜ்வாலா) நினைப்பேன் .போரே இல்லாத இடம் உண்டா என்று. பயமே இல்லாமல் வாழக்கூடிய இடம்….”

”இருக்கிறது. நமக்கு இந்த ஆயுதங்களை உருவாக்கி விற்கக்கூடிய நாடுகள். பார்த்தாயா பெரெட்டா. அமெரிக்க கம்பெனி. இந்தக் கம்பெனியில் ஷேர் வாங்கியவர்களெல்லாம் நிம்மதியாக இருப்பார்கள். ஹாலிடேக்கு மியான்மாருக்கும் இந்தியாவுக்கும் வந்து கலைப்பொருட்கள் வாங்குவார்கள்…” நான் (நெல்லையப்பன்) உரக்கச் சிரித்தேன்.

”எனக்கு இதெல்லாம் பிடிக்கவேயில்லை. ஆனால் வேண்டியவர்களின் இறப்பு மேலும் மேலும் வெறியை ஏற்றுகிறது. அம்மாவின் பிணத்தின் முன் வைத்து நான் முடிந்தவரை இந்திய ராணுவத்தினரைக் கொல்ல சபதம் எடுத்தேன். மனம் சோர்வுறும்போதெல்லாம் அம்மாவை நினைத்தால் எனக்கு வேகம் ஏறும். உண்மையில் எங்கள் யூனிட்டில் எல்லாருக்குமே இப்படி தனிப்பட்ட கோபமும் வெறுயும்தான் இருக்கிறது. இந்திய ராணுவம் எங்களைக் கொல்லக் கொல்ல எங்களுக்கு போராடும் வேகம் ஏறுகிறது……”

இராணுவம், போராளிக்கூட்டம், கொள்கைப் பிரச்சாரம், அந்நியர்களின் நடமாட்டம் – இதையெல்லாம் தாண்டி வாழ்க்கை என்ற ஒன்று இருக்கிறது என்பது ஜ்வாலாவிற்கு ஏக்கமாக உள்ளதை பல இடங்களில் காணலாம். உதாரணமாக ஜ்வாலா நகப்பாலீஷ் போட்டிருப்பதை நெல்லையப்பன் சுட்டிக்காட்டும் இடம்.

“இது போர். என் நாட்டுக்காக இதைசெய்கிறேன்”
”இது உங்கள் நாடு இல்லை. இது மணிப்புரி மக்களின் நாடு”
”இது இந்தியா”
“அதை நீங்கள் சொல்லக்கூடாது.நாங்கள் சொல்லவேண்டும்”அவள் முகம் சீறிச்சினந்தது.
“ஸாரி….நான் ராணுவ ஆள். எனக்கு சொல்லப்பட்டதுதான் எனக்குத்தெரியும்”
“நீங்கள் பயிற்சியளிக்கப்பட்ட வேட்டை நாய்கள்”
“நீங்கள்? மாலை போட்டு அனுப்பபடும் பலியாடுகளா?”
“ஷட் அப்!”
“ஸாரி”
அவள் மெல்ல மூச்சிரைத்து தணிந்தாள். ”இட் இஸ் ஓக்கே” என்றாள்

முதலில் மனிதன். பிறகுதானே பிற கச்சாத்துகள்!

விரு விரு… நாவல்!

வேறொரு நூல் அனுபவத்தில் சந்திப்போம் நண்பர்களே!

ஜெய் ஹிந்த்!

Advertisements

2 thoughts on “கன்னிநிலம் – ஜெயமோகன்”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s