1972ல் முதல்பதிப்பு வந்துள்ளது. அதற்கு முன்னரே கண்ணதாசன் இதழில் தொடராக வந்துள்ளது இந்த ‘சினிமாவுக்குப் போன சித்தாளு’. அரசியல் ரீதியான ஒரு நூலாகவோ, சினிமா என்கிற மாயை வெள்ளந்தி உழைப்பாளிகளைச் சுரண்டும் நூலாகவோ பல விமர்சனங்கள் இந்த நூலுக்கு இருக்கிறது. ஆம் இது சினிமா நினைப்பால் வாழ்வை அழித்துக்கொள்ளக்கூடாது என்று எழுதப்பட்டிருக்கும் ஒரு curtain raiser ஆக இருந்திருக்கலாம். அல்லது அப்போதைய சினிமா சூழல் கருதி சக பெண்களையும் அவர்தம் குடும்பங்களையும் காக்கும் ஒரு நாவலாக எழுதியிருக்கலாம். ஆனால் அது எல்லாம் இந்த குறுநாவலின் ஒரு பகுதிதான். முதல் பக்கமும் முதல் கடைசிப் பக்கம் வரை இந்த நூலில் இருப்பது செல்லமுத்து என்கிற ரிக்ஷா காரன் தன் மனைவி மீது வைத்திருக்கும் அபரிமிதமான அன்பு மற்றும் காதல்.
சினிமாவுக்குப் போன சித்தாளு
ஆசிரியர்: ஜெயகாந்தன்
பதிப்பு: மீனாட்சி புத்தக நிலையம், மதுரை – ஒன்பதாம் பதிப்பு 2012
பிரிவு: புனைவு, நாடகம்
விக்கி: –
ISBN: –
அப்போதைக்கு எம்ஜிஆரைத் தாக்குவதாக சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது இந்த குறுநாவல். உண்மையைச் சொன்னால் சர்ச்சை எழுவது இயல்புதானே.
வாத்தியாரை நினைத்துக்கொண்டு தன்னிடம் வாழும் மனைவியை நினைத்து மனம் வெதும்பும்போதும் சரி, மனைவியைக் காணோம் என்று பதறும் போதும் சரி, சேராத இடம் சேர்ந்து மனைவி சீரழியலாகாது என்று மீட்கத் துடிக்கும் இடத்திலும் சரி – செல்லமுத்து – வெல்லவே முடியாத முத்து!
கம்சலை – செல்லமுத்துவின் மனைவி. கிராமத்துக்காரி. சென்னைக்கு வந்து சினிமாப் பைத்தியம் பிடித்து சேராத இடம் சேர்ந்தவள்.
இவர்கள் இருவரையும் விடுத்து இன்னும் ஒருவர் குறுகிய நேரம் வந்து இந்நாவலில் குறிப்பிட்ட இடம் பிடிக்கிறார் – அவர் மனோமணி – ஏரியா விபச்சார விடுதி ஓனர்!!
கற்பு தொடர்பான வாசகர் கேள்விக்குப் பதில் கூறும் எழுத்தாளர் இந்த நாவலை மேற்கோள் காட்டுகிறார்
ஜெயகாந்தனின் சினிமாவுக்குப் போன சித்தாளு கதையில் வரும் சித்தாள். கணவனுடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தாலும், வேறொருவன் சொன்ன ஆசை வார்த்தைகளை நம்பியும் அவள் படி தாண்டுகிறாள். கதையை முடிக்கும்போது ஜெயகாந்தன் நம்முன் வைக்கும் கேள்வி அவள் இன்னமும் கற்புள்ளவள்தானா என்பது. விவரம் தெரியாத வெகுளி ஒருத்தி ஆழம் தெரியாமல் காலை விட்டதற்குத் தண்டனை கொடுப்பது நியாயம் என்று எனக்குத் தோன்றவில்லை.
–கற்பு என்பது – எழுத்தாளர் ஜெயமோகன் http://www.jeyamohan.in/?p=35556
ஒரு ஆக்கத்தைப் படித்துவிட ஒரு சில மணிநேரங்களே ஆகின்றன. ஆனால் அதைப் பற்றி விவாதிக்கும்தோறும் வெவ்வேறு பார்வைகள் அப்படைப்பின் ஆழத்ததைத் தருகின்றன.
ஒரு சில பார்வைகள் –
சமூகத்தில் நல்ல நிலையிலிருக்கும் சிங்காரம், கம்சலையை விபச்சாரத்தில் தள்ளுகிறான். சமூகத்தில் கீழ்நிலை மக்களின் பிரதிநிதியாகத் தோன்றும் விபச்சார விடுதி ஓனரான மனோமணியோ கம்சலையை மீட்டுச்செல்ல வரும் செல்லமுத்துவைப் பார்த்து மனம் இரங்குகிறாள்.
தன்னைப் பழையசோறு என்று சொல்லிவிட்டாளே என்று மனம் மருகும் செல்லமுத்து, கம்சலை காணாமல் போய்விட்டாள் என்று தெரிந்தபோது, எதுவும் தேவையில்லை. அவள் உடன் இருந்தால் போதும் என்று ஏங்குகிறான்.
சில நேரங்களில் சில மனிதர்கள்!
பலவீனங்கள்
இது ஒரு ஓரங்க நாடகம். கலப்பு மனம் செய்து, பிறகு கணவன் இறந்ததால் காலத்தாலும், உறவினராலும் கைவிடப்படும் ஒருத்தி மதுவிற்கு அடிமையாகி பிறகு வாழ்வில் பிரள்வதையும் காட்டும் ஒரு நாடகம். பிம்ப் வேலை பார்ப்பவனிடம், “ஸ்டெல்லா ஒரு ஏஞ்சல் அவளை நன்றாகப் பார்த்துக்கோ” என்று பார்த்தசாரதி சொல்வதுதான் எனக்கு இன்னும் புரியலை. மானை சிறுத்தையிடம் விட்டு நல்லாப் பார்த்துக்கோ என்று சொல்வது மாதிரி.
ஜெய்ஹிந்த்
வெகுநாட்களுக்குப்பிறகு வருகிறேன் உங்கள் பக்கத்துக்கு. ஜெயகாந்தனின் சினிமாவுக்குப்போன சித்தாளு பற்றி எழுதியிருந்ததைப்படித்தேன். தன் காலத்தில் வாசகர்களிடையே பெரும் சிந்தனைத்தாக்கத்தைத் தன் எழுத்தின் மூலம் உண்டாக்கியவர் ஜெயகாந்தன். சராசரி தமிழ் வாசகனைத் தன் படைப்புகளின் மூலம் தரமான வாசிப்பு, உயர் சிந்தனை என்கிற தளங்களுக்கு உயர்த்திய உன்னதமான படைப்பாளி அவர்.
வாங்க சார். வருகைக்கு நன்றி. ஜெயகாந்தனின் படைப்புகளின் தொகுப்பு ஆ.விகடன் புதிதாகப் பதிப்பித்துள்ளதாக அறிகிறேன். வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.