இந்தியாவும் இந்தோனேசியாவும் – 3


படிப்படியாக நான் எனது புது வாழ்க்கையில் செட்டில் ஆனேன். தேவியின் (பார்க்க பகுதி 2) உதவியுடன் நான் ஒரு வீட்டைக் கண்டடைந்தேன். பூனை பிராண்டும் தூண் ஒன்றை பக்கத்திலிருந்த பிராணிகள் கடையிலிருந்து வாங்கினேன். வர்ணம் பூசப்பட்ட ஜாவானிய கேபினெட் ஒன்று வாங்கினேன். என் மகனை ஆங்கிலம், சீனம் மற்றும் பாஸா இந்தோனேசியா ஆகிய மொழிகளைக் கற்றுத்தரும் மும்மொழிப் பள்ளியில் சேர்த்தேன்.

கட்டுரைத் தொடர்
இந்தியாவும் இந்தோனேசியாவும் – 1
இந்தியாவும் இந்தோனேசியாவும் – 2
இந்தியாவும் இந்தோனேசியாவும் – 3

நாளடைவில் நானே பாஸா வகுப்புகளை (பார்க்க: http://en.wikipedia.org/wiki/Bahasa_Indonesia) நடத்த ஆரம்பித்தேன். இந்தோனேசியாவின் தேசீய மொழியான இது மலாய் மொழியில் ஒரு தரப்படுத்தப்பட்ட வடிவம் மற்றும் சமஸ்கிருதம், பாரசீகம், அரபி மற்றும் ஆங்கிலத்தின் ஒலியமைப்பைக் கொண்டது. Bahasa என்பதே ‘பாஷா’ என்ற சமஸ்கிருதச் சொல்லின் வழித்தோன்றலே. கடை பணியாளர்கள். நாடோடி வியாபாரிகள் தங்கள் தினசரி உரையாடல்களில் ‘மனுஷ்ய’ (மனிதன்), ‘காரண’ (காரணம்), ‘கஜா’ (யானை) போன்ற சொல்லகராதியிலிருந்து உயர்ந்த சொற்களைப் பயன்படுத்துவதைக் காணும்போது நாம் ஜகார்த்தாவில் நம்மை ஒரு பாமரனாகவே உணரவே முடியும்.

நான் பெயர்ச்சொல் மற்றும் உரிச்சொற்களை எளிதில் தொகுத்துக்கொண்டேன். ‘உத்தர’ (வடக்கு), ‘மஸ்ஜித்’ (மசூதி), ‘ரொட்டி’ (ரொட்டி பரோட்டா), ‘அஸ்லி’ (உண்மையான) மற்றும் ‘துனியா’ (உலகம்). இவையெல்லாம் இந்திய சொற்களே.  இந்தியாவும் இந்தோனேசியாவும் வெறும் சொற்களின் ஒலிகளை மட்டும் பகிர்ந்து கொள்ளவில்லை. எங்களது கலாச்சாரமும் வரலாறும் ஆழ்ந்த முறையில் பின்னிப் பிணைந்திருந்தது என்பதை நான் விரைவாக உணர்ந்துகொண்டிருந்தேன். எங்களது நாகரீகங்கள் தம்மை விசாலமானதென்றும், கலவைகளின் தாக்கங்களினாலும் ஆனதென்றும் நிருபித்துள்ளன. யாத்ரீகர்கள், வியாபாரிகள், போர்வீரர்கள், அரேபிய, பாரசீக, சீன மற்றும் ஐரோப்பிய காலனியர்கள் விட்டுச் சென்ற தடயங்கள் இருக்கும் இந்த இரு நாடுகளிலும் ஹிந்து, புத்தம், அமானுஷ்யம், இஸ்லாமியம் மற்றும் கிறித்தவ சிந்தனைகள் மற்றும் பழக்கவழக்கங்கள் அவர்களின் சிக்கலான வரலாற்றுடன் இணைந்துள்ளன. இந்தியா மற்றும் இந்தோனேசியா பெரும்பாலும் அடிப்படைவாதம் கொண்டு எதிர்ப்பைக் காட்டும் மனோபாவம் கொண்டவை. அதற்கு முரணாக, உள்நாட்டில் வெளிநாடுகளின் தாக்கத்தையும், பல மதங்களை வளர்த்தும், சகிப்புத்தன்மைப் பண்பாட்டையும் பெற்றுள்ளன.

ஜகார்த்தா நகரம் ஜாவா (பார்க்க: http://en.wikipedia.org/wiki/Java) என்கிற இந்னோசியாவின் (அல்லது உலகத்தின்) அதிக மக்கள்தொகை கொண்ட தீவில் அமைந்துள்ளது. அதுவே இந்த தேசத்தின் அரசியல் மற்றும் கலாச்சார மையமுமாகும். தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிக்கிடையேயான அதிகப்படியான வியாபாரத்தின் காரணமாக ஜாவா இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட ஹிந்து-புத்த கலாச்சாரத்தின் தாக்கத்தை அதிகமாகப் பெற்றது. கிபி 7ஆம் நூற்றாண்டில் இந்தோனேசியாவின் மேற்குத் தீவுகளில் ஹிந்து-புத்த அரசுகள் அமைந்தன.

இந்த உண்மை இந்தியர்களின் சில பிரிவுகளை மார்பு அதிர வைத்தது. என்னுடைய கட்டுரையிலோ அல்லது பல ஆண்டுகளாக பதியும் சமூகவலைப் பதிவுகளிலோ இந்தோனேசிய கலாச்சாரம் அல்லது சமூகத்தின் நற்பண்புகளைப் பற்றி எழுதும்போது, ‘இந்தோனேசியாவின் நற்பண்புகள் அனைத்தும் இந்திய தாய்நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவையே’ இந்திய தேசியவாதிகளின் ஹார்மோன் கொப்பளிக்கும் பதில்களைப் பெற்றிருக்கிறேன். ஆனால் ஜாவா மற்றும் சுமத்ராவை இந்திய கலாச்சாரத்தின் சுங்கச்சாவடிகள் என்று எண்ணுதல் தவறானது. தென்கிழக்கு ஆசிய மக்கள் தங்களுக்கென தனிப்பட்ட அம்சங்களையும், தனித்தன்மை வாய்ந்த கலாச்சாரத்தையும் பெற்றிருந்தனர். அவர்கள் முதலில் ‘ஹிந்துவாக்கப்பட்டு’ பிறகு 16ஆம் நூற்றாண்டுகளில் இஸ்லாமியர்களாக மதமாற்றப் பட்டவர்கள்.

16ஆம் நூற்றாண்டுகளில் அடுத்தடுத்த அலைகளாக ஐரோப்பியர்கள் தங்களின் வருகையை தீவுக்கூட்டத்திற்கு உணர்த்தினர். போர்த்துக்கீசியர்கள், ஸ்பானியர்கள், டச்சுக்காரர்கள் மற்றும் பிரித்தானியர்கள் என்று எல்லோரும் தங்கள் வியாபாரத்தை விரிவாக்க முயன்றனர். காலப்போக்கில் 18ஆம் நூற்றாண்டில்  டச்சின் ஒருங்கிணைந்த கிழக்கிந்திய கம்பெனி தன்னை இந்தப் பகுதியின் ஆக்கிரமிப்பு சக்தியாக்கிக் கொண்டது. 1800களில் தீவுக்கூட்டத்தில் உள்ள கம்பெனியின் சொத்துக்கள் டச்சு மணிமுடிக்குத் தாரைவார்க்கப்பட்டன – 1945ல் அவர்கள் விடுதலை ஆகும்வரை (1949ல்தான் டச்சு அதை அங்கீகரித்தது).

(தொடரும்)

ஜெய் ஹிந்த்

2 thoughts on “இந்தியாவும் இந்தோனேசியாவும் – 3

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s