மிகச் சிறந்த இரண்டு சிறுகதைத் தொகுப்புகளைப் பற்றி எழுத இருக்கிறேன். அதில் முதலாவதாக குருபீடம். உங்களைப் போன்ற வாசிப்பு ஆர்வம் மிகுந்த நண்பர் ஒருவர் பேசிக்கொண்டிருக்கையில் இந்த நூலைப் பரிந்துரைத்தார். அவர் சொல்லி சில நாட்கள் போகவில்லை. ஒரு வாசகர் வட்ட சந்திப்புக்காக நூலகம் சென்றபோது அதே நூல் கண்ணில் பட்டது - குருபீடம். இதில் சில கதைகள் மதுரை செயல்திட்டத்தில் படிக்கக் கிடைக்கிறது. பார்க்க - http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0204.html குருபீடம் ஆசிரியர்: ஜெயகாந்தன் பிரிவு: புனைவு (சிறுகதைத் [...]
Month: August 2014
காந்தியை இடதுசாரிகள் ஏன் வெறுக்கிறார்கள்?
இருபதாம் நூற்றாண்டில் இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் மற்றும் கலாசார நாயகனாக திகழ்ந்த (சிலர் மனிதகுல வரலாற்றிலேயே சிறந்த நாயகன் என்றும் சொல்வார்கள் ) மோகன்தாஸ் கரம்சந்த் ‘மகாத்மா’ காந்தி மீதான தாக்குதல்கள் இதற்கு முன் எப்பொழுதும் இல்லாத அளவுக்கு நடைபெற்று வருகிறது.வன்முறையில்லாமல் ஆங்கிலேய அரசை காந்தி எதிர்த்த போராட்ட முறை நெல்சன் மண்டேலா முதல் பராக் ஒபாமா வரை எல்லாரையும் ஊக்கப்படுத்துவதாக இருக்கிறது. நாடுகளின் எல்லைகளை கடந்து குறிப்பிடப்படுகிற கலாசார எடுத்துக்காட்டாக இருக்கிற அளவுக்கு அவர் புகழ் [...]
குடை நிழல் – தெளிவத்தை ஜோசப்
கடவுளால் சபிக்கப்பட்ட இடங்கள் நாம் நிறைய கண்டுள்ளோம். அங்கே திறமைக்கோ நேர்மைக்கோ விசுவாசம் இருக்காது. கொஞ்சம் அரசு எந்திரத்தில் வாய்ஸ் உள்ளது என்றால் கொள்ளை அடிக்கலாம், செய்த கொலையை மறைக்கலாம், வேண்டாதவரை வஞ்சம் தீர்க்கலாம். அந்தக் கதைதான் குடை நிழல். ஈழப் பிரச்சினையில் இந்திய உளவுத்துறையின் விளையாடலாக வெளி வந்த புனைவுதான் எழுத்தாளர் ஜெயமோகனின் உலோகம் (பார்க்க உலோகம்). இந்த குடை நிழல் தமிழர் வாழ்வில் சிங்களரின் விளையாட்டு.குடை நிழல் ஆசிரியர் : தெளிவத்தை ஜோசப் பிரிவு: [...]
ஜெயமோகனின் நீலம் தொடக்கம் – பல்பு எரிந்தது, மணி அடித்தது!
புவனமுழுதாளும் பெரும்பொற்புள்ளவளே, நான் தீண்டிய மலர்களே தெய்வங்களுக்கு. நான் தழுவிய பெண்களே மாமன்னர்களுக்கு. இதோ உன்னை அவனுக்காகக் கனியச்செய்கிறேன். ஊதி ஊதி பொன்னை உருக்கி நகையாக்குவதைப்போல. அவனுக்காக மலர்களை விரியவைத்து கனிகளைச் சிவக்கவைத்து நதிகளைச் சிலிர்க்கவைத்துவிட்டுத்தான் வந்திருக்கிறேன். நண்பர்களே, அனைவராலும் பெருவிருப்போடு எதிர்பார்க்கப்படும் வெண்முரசின் அடுத்த நாவல் இன்று தொடங்கிவிட்டது. அதனை வரவேற்கவே இந்தப் பதிவு. உள்ளம் மயக்கும் கள்வனும், அவன் மனதைப் பித்தாக்கும் கள்ளியும் ஆடும் ஆடலைக் காண அனைவருமே காத்திருக்கின்றனர். கள்ளியின் மனம் மயக்கும் [...]
உலோகம் – ஜெயமோகன்
தமிழினத்திடம் இந்த நாவல் நல்ல பெயரெடுத்திருக்க வாய்ப்பில்லை. தமிழினத்தின் முக்கியப் பிரச்சினையான ஈழம் பற்றி எத்தணை பேரிடம் புரிதல் இருக்கும்? எத்தணை நூல்கள் படித்தால், எத்தணை பேரிடம் உரையாடினால் சரியான புரிதல் வரும்? ஒரு அடியவர் குழாம் - அங்கு துதிகள் பாடப்படலாம், மிகைப்படுத்தப்பட்ட கதைகள் இருக்கலாம். உண்மைக்குமேலே அடர்ந்து படர்ந்த புகையை விலக்கி உண்மையைப் பார்ப்பது எப்படி? இன்னொரு ஓநாய் குழாம் - இருக்கும் இடத்தையும், அதில் உள்ள குழப்பத்தையும் பயன்படுத்தி எப்படிக் மேலும் குழப்பத்தை [...]