குடை நிழல் – தெளிவத்தை ஜோசப்


கடவுளால் சபிக்கப்பட்ட இடங்கள் நாம் நிறைய கண்டுள்ளோம். அங்கே திறமைக்கோ நேர்மைக்கோ விசுவாசம் இருக்காது. கொஞ்சம் அரசு எந்திரத்தில் வாய்ஸ் உள்ளது என்றால் கொள்ளை அடிக்கலாம், செய்த கொலையை மறைக்கலாம், வேண்டாதவரை வஞ்சம் தீர்க்கலாம். அந்தக் கதைதான் குடை நிழல். ஈழப் பிரச்சினையில் இந்திய உளவுத்துறையின் விளையாடலாக வெளி வந்த புனைவுதான் எழுத்தாளர் ஜெயமோகனின் உலோகம் (பார்க்க உலோகம்). இந்த குடை நிழல் தமிழர் வாழ்வில் சிங்களரின் விளையாட்டு.

குடை நிழல்
ஆசிரியர் : தெளிவத்தை ஜோசப்
பிரிவு: புனைவு – குறுநாவல்
பதிப்பு: எழுத்து – முதல்பதிப்பு 2013
நூலக முன்பதிவு (கன்னிமாரா): –
நூலக முன்பதிவு (NLB) : http://catalogue.nlb.gov.sg/cgi-bin/spydus.exe/FULL/EXPNOS/BIBENQ/4071192/76768291,1

குடை நிழல்

சாதாரண தனியார் நிறுவன பணியாளன் தன் கதையைச் சொல்வதாக அமைந்துள்ள இந்தப் புத்தகம் முழுக்க மிக மிக எளிய சொற்களால் ஆன, சாதாரணமாக நீங்களும் நானும் பேசுவது போன்று அமைந்த சரளமான மொழிநடை, ஆனால் மிக அழுத்தமாக, பழுக்க வைத்த குண்டூசியை சதையில் ஏற்றுவது போல இலங்கையில் தமிழர் நிலையைக் காட்சிப் படுத்தும் ஒரு குறுநாவல் இது.

சாதாரண பணியாளனிடம் நயந்து பேசி, வீட்டுக்கு அட்வான்ஸ் வாங்குகிறான் ஒரு சிங்களன். வாங்கிய கையோடு இன்னொருவனுக்கு விற்றும் விடுகிறான். கொடுத்த அட்வான்ஸ் தொகையைக் கேட்கப்போக, பொய் புகார் (புலிப் புகார்) கட்டி உள்ளே தள்ளிவிடுகிறார்கள் சிங்கள காவல்காரர்கள். இதுதான் கதை!

கதவைத் திறக்க இரும்புத் தடியுடன் நிற்கும் ஒருவனைத் தீவிரவாதி என்பதும், சமைக்க வாங்கிய மீன் குடலில் இருந்து நகச்சாயம் பூசப்பட்ட ஒரு பெண்ணின் விரல் வந்து விழுவதும், சிங்களப் பள்ளியில் படிக்கும் தமிழ் மாணவன், இந்திய பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்சில் கூட பாகிஸ்தானை ஆதரிப்பதும், கங்காணி வீட்டுப் பையன், தோட்ட வேலை செய்யும் ஒருவரின் வீட்டிற்குப் போவதற்காக அவன் தந்தை அடித்து உதைப்பதும், தமிழர் ‘பாரம்பரிய’ குடும்ப வன்முறையும் காட்டுமிடங்களில் உண்மை நிகழ்வுகள் கண் முன்னே நனவாவதைத் தவிர்க்க முடியாது. திடுக்கிட வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

சித்திரவதைச் சிறையில் அடைக்கப்பட்ட கதாநாயகன் சாந்த சொரூபிக்கு போலீஸ்காரன் றவூப் உதவி செய்கிறான்.

‘தூக்கம் வரலையா’ தமிழில் (றவூப்) கேட்டான். எனக்குத் தூக்கி வாறிப்போட்டது.

‘நீங்கள் தமிழா’

‘இல்லை. முஸ்லீம். ‘

ஒற்றைப் பெரு எதிரியான சிங்களனின் ஒடுக்குமுறையை, நலிந்த நிலையிலிருந்தும் சிதறிக்கிடக்கும் தமிழினத்தின் நிலையை சக ஈழவரின் பார்வையிலிருந்து எளிய தமிழில் கூறும் நூல் இது.

குடை நிழல்

பார்க்க –
தெளிவத்தை ஜோசப்புக்கு விஷ்ணுபுரம் விருது.

Advertisement

2 thoughts on “குடை நிழல் – தெளிவத்தை ஜோசப்

  1. சிறிய ஆனால்
    தென்புலத்தில் வாழும் தமிழர்களின் குரலாக ஒலிக்கும் நாவல்
    உங்கள் கருத்துரை மகிழ வைக்கிறது

    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மருத்துவரே. தெற்கிலிருந்து வடக்கு நோக்கி ஏகியதுதானே தமிழ்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s