ராஜேந்திர சோழன் 1000 – குடவாயில் பாலசுப்ரமணியன், பாலகுமாரன், தனவேல் ஒலி-ஒளிப்பதிவு


ராஜேந்திரசோழன் முடிசூடி 1000 ஆண்டுகள் நிறைவுற்றதை ஒட்டி கங்கை கொண்ட சோழபுரத்தில் விழா நடத்தினர். அந்த விழாவை ராஜேந்திரன் வென்ற நாடுகளிலெல்லாம் நடத்தவேண்டும் என்கிற விருப்பத்தில், சிங்கப்பூர் உமறுப்புலவர் தமிழ் மையத்தில் இன்று இந்த விழா நடந்தது. எதேச்சையாக ஓவியர் மாருதி இன்றைக்கு சோழனின் கடற்படை ஓவியத்தை facebookல் பகிர்ந்திருந்தார். பழம் நழுவிப் பாலில் விழுந்து, அது நழுவி வாயில் விழுந்து.... https://www.facebook.com/photo.php?fbid=777847132259166&set=a.742084212502125.1073741828.100001016603709&type=1 தமிழகத்தில் இருந்து மூவர் வந்திருந்தனர். முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்கள் - இன்றைய [...]

இன்று மாலை சிங்கையில் ராஜேந்திர சோழனுக்கு விழா


கடாரம் கொண்டான் இராசேந்திர சோழன் - அரியணை ஏறிய 1000வது ஆண்டுவிழா 18-09-2014 - ஞாயிறு மாலை 6 மணிக்கு! உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் 2 Beatty Road, Singapore 209954 (சீனிவாசப் பெருமாள் கோவிலுக்கு அருகில்) வெற்றி தந்த கலைச்செல்வங்கள் - குடவாயில் பாலசுப்ரமணியன், தென்னக முதன்மைத் தொல்லியர் ஆய்வாளர் சிறப்பித்தல் - பாலகுமாரன், ஆசிரியர் - உடையார் (நாவல்) ஆர்வம் உள்ளவர்கள் கலந்து கொள்க!  

நாகேஷ்


பாலையா : ஏண்டா பைத்தியமா அலையறே.. நாகேஷ்: அப்பா. பைத்தியமில்லைப்பா. என் வாழ்க்கை லட்சியமப்பா பாலையா: ஏண்டா என் மானத்த வாங்கறே.. நாகேஷ்: வேற என்னத்த வாங்கறது. உங்ககிட்ட இருந்து பணத்தைத்தான் வாங்க முடியலையே! (காதலுக்கு நேரமில்லை) https://twitter.com/pandianr79/status/515797508690157569 நாகேஷ் நினைவு தினம். அஞ்சலி!

உள்ளமே உலகம் – தென்கச்சி கோ. சுவாமிநாதன்


அவர் ஒரு துறவி. கடுமையான விரதங்களை மேற்கொண்டிருப்பவர். ஆதவன் உதயமான பிறகு ஆகாரம் எதையும் தொடுவதில்லை அவர். தண்ணீர் கூடப் பருகமாட்டார். அவரது நெறி தவறாத தன்மையைப் போற்றும் வகையில் ஆகாயத்தில் ஒரு விண்மீண் தோன்றியது. அதுவும் பகல் நேரத்தில்.   அத்தகு சிறப்பு வாய்ந்த அந்தத் துறவி ஒரு நாள் புறப்பட்டார். அருகில் இருந்த மலையின் உச்சிக்கு அவர் போகவேண்டியிருந்தது. அவ்வூரில் இருந்த சிறுமி ஒருத்தி, தானும் உடன் வருவேன் என்று அடம் பிடித்தாள். "சரி [...]

கன்னியாகுமரி – ஜெயமோகன்


ஆண் பெண் இருவருடைய உளவியலிலும் இரு வகையான தீமைகள் அவர்களின் இயல்பிலேயே கலந்து உள்ளன. அவர்களின் ஆக்கத்திலேயே உறைபவை அவை. ஆணின் இயல்பான தீமையை கன்னியாகுமரி நாவலில் ஓரளவு சித்தரிக்க முயன்றிருக்கிறேன். -ஜெயமோகன் - (ஒரு வாசகர் கடிதத்தில்) கிளுகிளுப்பாகத் தொடங்கியது கன்னியாகுமரி. மலையாளத் திரைப்படத்தில் ஒரு ஹிட்டு கொடுத்து அதன் பிறகு தோல்விப் படங்களைக் கொடுத்து, இன்னுமொரு வெற்றிப் படம் இல்லையென்றால் சினிமா கலை வாழ்க்கை அழிந்து போகும் என்கிற ஒரு திரைப்பட இயக்குநர் ரவிதான் [...]