இன்னொரு சிறந்த சிறுகதைத் தொகுப்பைப் பற்றி எழுதுவேன் என்று சென்ற வார பதிவிலேயே மிரட்டியிருந்தேன்.
இதோ! ஜெயமோகனின் சிறந்த தொகுப்புகளைக் கொண்டிருக்கும் நூல் – ஆயிரங்கால் மண்டபம். பல களங்களில் எழுதப்பட்டிருக்கும் சிறுகதைகள் இந்நூலில் உள்ளன. எவை எப்படி இருந்தாலும், எளிய கதையமைப்பைக் கொண்ட ‘ஆயிரங்கால் மண்டபம்’, ‘தேவகிச் சித்தியின் டைரி’, ‘நைனிடால்’, ‘தாண்டவம்’ சிறுகதைகள் எனக்குப் பிடித்திருந்தன. நாகம், வெள்ளம், ஒன்றுமில்லை போன்ற சிறுகதைகள் ஏற்படுத்தும் மன எழுச்சியைத் தவிர்க்க முடியாது.
ஆயிரங்கால் மண்டபம்
ஆசிரியர் – ஜெயமோகன்
பதிப்பு – அகரம் பதிப்பகம், கும்பகோணம் முதல்பதிப்பு- டிசம்பர் 1999
நூலக முன்பதிவு (கன்னிமாரா) – http://connemara.tnopac.gov.in/cgi-bin/koha/opac-detail.pl?biblionumber=323578
நூலக முன்பதிவு (NLB) – http://catalogue.nlb.gov.sg/cgi-bin/spydus.exe/ENQ/EXPNOS/BIBENQ/10983955?QRY=CTIBIB%3C%20IRN%282705409%29&QRYTEXT=A%CC%84yiram%20ka%CC%84l%20man%CC%A3t%CC%A3apam
மொத்தம் 15 சிறுகதைகள் இந்த நூலில் உள்ளன. இவை அனைத்துமே ஜெயமோகன் சிறுகதைகள் தொகுப்பு நூலில் உள்ளன. பார்க்க ஜெயமோகன் சிறுகதைகள்
இவற்றைப் பற்றி ஏற்கனவே பார்த்துவிட்டதனால் சிறு குறிப்புகள் மட்டும்.
ஆயிரம் கால் மண்டபம்
‘உனக்கு வயித்து வலியா சித்துட்டி?’
‘இல்லடா’ என்றபடி சித்திக்குட்டி அவள் தோளில் கை போட்டு அணைத்துக் கொண்டாள். ‘அதோ பாத்தியா? அந்தத் தூணிலே செலை இல்லை. உடஞ்சு போயிருக்கு. அதான் சித்தி அழுதேன்.’
எளிதில் யாருக்குமே பிடித்துவிடும் ஒரு சிறுகதை.
நாகம்
நாகம் நா பறக்க அவளைப் பார்த்தது. ‘உஸ்ஸ்’ என்று சீறியது.
‘உனக்கு என்ன வேணும் இப்பம்? சொல்லிப்போடும். குடுத்துக்களிச்சிடுதோம். நீரு சாமியில்லை. எங்கிளுக்க கொலத்துக்கு விழுந்த சாபம்…..’
தேவகிச் சித்தியின் டைரி
அம்மா உள்ளே எட்டிப்பார்த்தாள். ‘கரிதான் மிச்சம். கைகாரி’ என்றாள்.
சித்தி மூச்சு வாங்கினாள். கண்ணீர் உலர்ந்த முகத்தில் இமையின் மயிர் ஒன்று ஒட்டியிருந்தது. அமைதியாக இருந்தாள். வாந்தி எடுத்து முடித்துவிட்டவள் போலத் தெரிந்தாள்.
மூன்று சரித்திரக் கதைகள்
- மாபெரும் கம்பளம் பற்றிய கனவு (பழைய குமரி மாவட்ட, கேரளக் கதை பிண்ணனி)
- சவக்கோட்டை மர்மம் (பழைய குமரி மாவட்ட, கேரளக் கதை பிண்ணனி)
- பதிமூன்று விதங்களில் சொல்லப்பட வேண்டிய கதை (இந்தக் கதையும் ஜெயமோகன் குறுநாவல்கள் நூலில் உள்ள பரிணாமம் நெடுங்கதையும் தொடர்புடையவை)
குறுகிய சுவையான (உண்மை & புனைவு?)கதைகள்
வெள்ளம்
‘லேய் எட்டாண், இந்தப் புளுத்தானை ஏம்பிலே கூட்டிட்டு வந்தே?’ என்றான் ஒருவன்.
‘பாத்தா பன்னிக்குட்டி மாதிரி இருக்குதான்.’ மற்றவர்கள் திரும்பிப் பார்த்துச் சிரித்தார்கள்.
ஒருவன் கிண்டலுடன் ‘சாமி குளிக்கவா வந்தீய? செம்பு எங்கே?’ என்றான். அத்தனை பேரும் உரக்கச் சிரித்தார்கள்.
ஒன்றுமில்லை
‘ஒன்றுமில்லை. நன்றாக இருக்கிறார்கள்’ என்றார்.
‘என்ன ஆயிற்று டாக்டர்?’ என்றேன்.
நைனிடால்
படகோட்டி ஊகித்தவனாக ‘ஆழத்தைப் பார்க்கக்கூடாது மேம் சாப். மனம் கலங்கிவிடும். மனம் கலங்கி தினம் ஒருவராவது இதில் பாய்ந்து உயிரை விடுகிறார்கள்’ என்றான்.
மயக்கமா கலக்கமா கதை
கரிய பறவையின் குரல்
‘நீ மடையன். பொய்யன்’ என்று வீரிட்டேன். ‘உன் விஞ்ஞானம் கொல்லன் உலைக்குத்தான் லாயக்கு. உனக்கு என்ன தெரியும் மனித உடல் பற்றி? டேய் முட்டாள், மனித உயிர் எல்லையற்ற சதை வடிவங்கள் வழியாகப் பயணம் செய்யும் ஒரு முடிவின்மை. முட்டாள், நீ ஒருபோதும் அதைப் புரிந்து கொள்ளமுடியாது.’
டாக்டர் என் கோபத்தை எதிர்பார்க்கவில்லை. ‘டாக்டர்’ என்று பதறியபடி நர்ஸ் ஓடிவந்தாள்.
‘கிடைத்ததா?’ என்றார் டாக்டர்.
‘காம்போஸ்தான் கிடைத்தது. டைசோபாம்’ என்றாள் நர்ஸ்.
‘மூன்று சி.சி போடு.’
வாள்
‘உங்கள் ஐயங்கள் என்ன என்று கூற முடியுமா?’
‘திட்டவட்டமாகக் கூறுவது சிரமம். பொதுவாக ஒரு சந்தேக நிலை எனலாம்.’
‘அதாவது..’
‘நான் எல்லாவற்றையும் சந்தேகிக்கிறேன்.’
‘எல்லாவற்றையுமா? எந்த அடிப்படையில்?’
‘எல்லாவற்றையும் சந்தேகிக்கவேண்டும் என்ற அடிப்படையில்தான்’
முகம்
‘ராஜப்பாவா? யார் அவர்?’
‘உன்னைக் கொண்டு வந்துவிட்டாரே அவர்தான்.’
‘வந்து …. அது ரோபோ இல்லையா?’
அறிவியல் புனைவு. பெரிதாக ரசிக்கவில்லை! சாரி!
வாரிக்குழி
அது மிகக் கவனமாக அஞ்சியஞ்சிக் காலெடுத்து வைக்கக்கூடியது. இப்போது சகஜமாக சதுப்புச் சேற்றில் நடந்தது. அதைப் பார்க்கப் பார்க்க அதை உண்ணி லட்சுமி என்று எண்ணுவது சையதுக்குக் கஷ்டமாக இருந்தது. அது வேறு ஏதாவது காட்டு யானையோ, தவறாகப் பின்தொடர்கிறோமோ என்று ஐயம் ஏற்பட்டது.
ஆணை தேடல்
பாடலிபுத்திரம்
பதறிய குரலில் ஏதோ புலம்பியபடி அஜாத சத்ரு விழித்துக்கொண்டான். அந்தப்புரத்து அறைகள் வழியாக ஓடினான். தன் மகனைத் தனக்குக் காட்டும்படி கெஞ்சினான். பெண் முகங்கள் எல்லாம் சதைப் பதுமைகளாக மாறின. சுவர்கள் உறைந்திருந்தன.
கலைந்த கனவு!
ரதம்
சூரியனார் ரதத்தினூடே உளவும் கலைஞனின் பார்வை
அன்னை
எதிரே புதரின் கீழே ஈரச் சொ தசொதப்பில் ஒரு கரிய காட்டுப்பன்றி உட்கார்ந்திருந்தது. அதன் வயிற்றுக்குக் கீழே முண்டியடித்தபடி மென்மையான பன்றிக் குழவிகள் பால் குடித்தன. அதன் வால் சேற்றில் பாம்புபோல நெளிந்தது. அதன் வாய் சிவப்பாக இருந்தது. அது தன் குட்டிகளிலொன்றை மென்று தின்று கொண்டிருந்தது
கெட்ட கனவு போன்ற ஒரு சிறுகதை!!
தாண்டவம்
‘நாயீட மோனே’ என்று குழறிய குரலில் கூவியபடி துரட்டியை வீசினான். அடி துதிக்கை மீது பட்டது. யானை சட்டென்று உடலை நிமிர்த்தி, துதிக்கையை தேலே தூக்கிப் பிளிறியது. யானையின் குரல் அல்ல அது. அவன் அதுவரை கேட்டறியாத ஏதோ மிருகத்தின் ஒலி.
யானை கதை
சிறப்பான நூல். ஆனால் இப்போது அச்சில் இல்லை போல. தேடியபோது கிடைக்கவில்லை.
இன்னுமொரு பதிவில் சந்திப்போம் நண்பர்களே.
வெல்க பாரதம்
வாழ்த்துக்கள்
எனக்கா. எழுதினவருக்கல்லவா சொல்லனும். 🙂
வருகைக்கும் பதிலுரைக்கும் நன்றி.
அன்புள்ள பாண்டியன்,
உங்களுக்கு ஓர் விருது பரிந்துரைத்திருக்கிறேன். தயவு செய்து, வந்து பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுகிறேன். இணைப்பு இதோ:
http://wp.me/p244Wx-HR
நன்றி,
அன்புடன்,
ரஞ்சனி
ஒரு கணம் பொறி கலங்கிவிட்டது.
நினைவுகளே கோடி பெறும். அங்கீகாரம் கோடி பெறும்.
மிக்க நன்றி அம்மா.
எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய நூல்களை இணையத்தில் ஆர்டர் செய்ய: http://udumalai.com/?name=Jeyamohan&auth_id=26