குஷ்வந்த் சிங் – வாழ்வெல்லாம் புன்னகை | என். சொக்கன்


குஷ்வந்த் சிங் யார்? ஏன் அவரைச் சுற்றி இத்தணை சர்ச்சைகள்? அவர் ஒரு ஹாஸ்ய எழுத்தாளரா? செக்ஸ் எழுத்தாளரா? மெய்யாலுமே அந்தாளு அப்படித்தானோ? அப்டி என்னதான் எழுதறாருன்னு அவர் புத்தகம் இந்தப் போடு போடுது..?

இந்த வினாக்களுக்கெல்லாம் பதில் சொல்வது மாதிரி தமிழ் வாசகர்களுக்குக் கிடைத்திருக்கும் curtain raiser இந்த நூல்.

குஷ்வந்த் சிங் இறந்ததற்கு இரங்கல் பதிவு போட்டிருந்தார் மதிப்பிற்குரிய பதிவர் ரஞ்சனி நாராயணன் அவர்கள் தன் பதிலுரைகளில் குஷ்வந்த் சிங்கின் Train to Pakistan நூலைப் பரிந்துரைத்திருந்தார். இந்த நூலை கிழக்கு பதிப்பகத்தார் தமிழில் வெளியிட்டிருந்தனர். நூலகத்தில் கிடைக்கிறதா என்று அலசிய போது, ம்ஹூம். ஆனால் இந்த நூல் சிக்கியது.

குஷ்வந்த் சிங் – வாழ்வெல்லாம் புன்னகை
ஆசிரியர் – என் சொக்கன்
பதிப்பு – கிழக்கு பதிப்பகம்
கன்னிமாரா – http://connemara.tnopac.gov.in/cgi-bin/koha/opac-detail.pl?biblionumber=339067
NLB – http://eservice.nlb.gov.sg/item_holding_s.aspx?bid=12758068

khushwant singh
குஷ்வந்த் சிங் – வாழ்வெல்லாம் புன்னகை

சிறிய நூல் என்றாலும், குஷ்வந்த் சிங் பற்றிய விரிவான பார்வையை இந்த புத்தகம் முன் வைக்கிறது. எழுத்துப் பணி, பத்திரிகை ஆசிரியர் பணி, அரசியல் பிரவேசம், நல்லது கெட்டதுகள் இன்னவற்றுடன் அவரது புகழ் பெற்ற படைப்புகள் ஒவ்வொன்றைப் பற்றியும் சுருக்கமான விமர்சனம் என்று சொல்ல மாட்டேன், ஒரு அறிமுகத்தைத் தருகிறது.

எல்லாம் கலந்து 15 கட்டுரைகள் உள்ளன.

எழுத வேண்டும் என்கிற விருப்பம் உள்ளவர்களும் வாசிக்க வேண்டிய நூல்.  குஷ்வந்த் சிங் தரும் டிப்ஸ் உள்ளே இருக்கிறது.

khushwant singh

ஜெய்ஹிந்த்
Posted from WordPress for Android

Advertisement

2 thoughts on “குஷ்வந்த் சிங் – வாழ்வெல்லாம் புன்னகை | என். சொக்கன்

  1. குஷ்வந்த் சிங்கின் எழுத்தில் குஷி வந்த ஒரு சிங்கத்தையையே பார்க்கமுடியும் !

    1. வருக திரு பகவான்ஜி. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s