சிறுகதை

உள்ளமே உலகம் – தென்கச்சி கோ. சுவாமிநாதன்


அவர் ஒரு துறவி. கடுமையான விரதங்களை மேற்கொண்டிருப்பவர்.

ஆதவன் உதயமான பிறகு ஆகாரம் எதையும் தொடுவதில்லை அவர். தண்ணீர் கூடப் பருகமாட்டார்.

அவரது நெறி தவறாத தன்மையைப் போற்றும் வகையில் ஆகாயத்தில் ஒரு விண்மீண் தோன்றியது.

அதுவும் பகல் நேரத்தில்.

 

அத்தகு சிறப்பு வாய்ந்த அந்தத் துறவி ஒரு நாள் புறப்பட்டார்.

அருகில் இருந்த மலையின் உச்சிக்கு அவர் போகவேண்டியிருந்தது.

அவ்வூரில் இருந்த சிறுமி ஒருத்தி, தானும் உடன் வருவேன் என்று அடம் பிடித்தாள்.

“சரி வா…” என்று அழைத்துக்கொண்டு புறப்பட்டார்.

 

இருவரின் பயணமும் இனிதே தொடங்கியது.

கொஞ்சதூரம் போயிருப்பார்கள்.

வெயில் அதிகம் என்பதால் தாகம் எடுத்தது.

“தண்ணீர் வேண்டும்” என்றாள் சிறுமி. கொடுத்து குடிக்கச்சொன்னார் துறவி.

“நீங்க குடிச்சாத்தான் நானும் குடிப்பேன்!” என்றாள்.

“அம்மா… நான் விரதத்தில் இருக்கிறேன்… ஆதவன் உதயமான பிறகு நான் எதையும் உட்கொள்வதில்லை!”

அதைப் பற்றியெல்லாம் அந்தச் சிறுமிக்குக் கவலை இல்லை.

“அவசியம் தண்ணீர் குடித்தே ஆகவேண்டும்”  என்று அடம் பிடித்தாள்.

அவருக்கு சங்கடமாகப் போய்விட்டது.

ஒருபுறம் தம்முடைய விரதம்.

மறுபுறம் சிறுமியின் தாகம்.

எதைப் பார்ப்பது.

 

இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தார்.

எடுத்துப் பருகினார் தண்ணீரை!

குழந்தையும் பருகிற்று.

தாகம் தணிந்தது.

தலை குனிந்தபடியே துறவி நடந்தார்.

ஆகாயத்தைப் பார்க்க அவருக்குத் துணிவில்லை.

‘விரதத்தை விட்டு விட்டோம்… எனவே வானில் அந்த விண்மீனும் மறைந்து போயிருக்கும்’ என்பது அவர் எண்ணம். உச்சிக்குப் போனபிறகு தற்செயலாக ஒருமுறை தலை நிமிர்ந்தார்.

உயரே பார்த்தார்.

அங்கே –

இரண்டு விண்மீன்கள் இவருக்காக ஒளி வீசிக்கொண்டிருந்தன.

உள்ளமே உலகம்
ஆசிரியர் – தென்கச்சி கோ. சுவாமிநாதன்
பிரிவு – புனைவு – சுயமுன்னேற்ற கதைத் தொகுப்பு
பதிப்பு – வானதி பதிப்பகம், சென்னை, பத்தாம் பதிப்பு மார்ச் 2012
நூலக முன்பதிவு (கன்னிமாரா) – http://connemara.tnopac.gov.in/cgi-bin/koha/opac-detail.pl?biblionumber=322794
நூலக முன்பதிவு (NLB) – http://www.nlb.gov.sg/newarrivals/itemdetail.aspx?bid=12109587

உள்ளமே உலகம்

“ஓய்வாக இருக்கிற சமயம் பார்த்து ஒரு முறையாவது இந்தப் புத்தகத்தைக் கையில் எடுங்கள். உள்ளே போய் பாருங்கள். அங்கே ஓர் உருவம் தெரியும். அது யார் என்பதை கொஞ்சம் அக்கறையோடு கவனியுங்கள். அது நீங்கள்தான் என்பது புரியும்” என்று இந்த நூல் அறிமுகத்தில் தென்கச்சி சொல்கிறார். நானும் அதையேதான் சொல்கிறேன்.

மேலே சொன்ன துணுக்கு போல மொத்தம் 77 துணுக்குகள்/குறுங்கதைகள். 2 அல்லது 3 மணிநேரத்தில் படித்துவிடலாம்!

தென்கச்சியின் இன்று ஒரு தகவல் – நல்ல தொகுப்பு. இந்த நூலின் அனைத்து கதைகளையும் அவர் நேரில் வந்து காதில் சொல்வது போலவே உணரலாம்.

இன்னொரு நூல் அறிமுகத்தில் சந்திப்போம் நண்பர்களே.

ஜெய்ஹிந்த்

Advertisements

2 thoughts on “உள்ளமே உலகம் – தென்கச்சி கோ. சுவாமிநாதன்”

  1. எனக்குக் கூட இவரது தகவல்கள் ரொம்பவும் பிடிக்கும். இவர் குரலே இவரது பலம் என்று தோன்றும். இவர் சொல்லும் பல கதைகளை எனது வகுப்புகளில் நான் சொல்லுவேன். தொலைக்காட்சி வராத அந்தக் காலத்தில் அகில இந்திய வானொலியில் இவரது தகவல்களைக் கேட்டு ரசித்திருக்கிறேன்.

    1. வானொலி என்பது இன்னமும் எனக்குப் பிரியமான ஒரு சாதனம். துரதிருஷ்டமான வகையில் அதை உருப்படியாகக் கேட்டு பல வருடங்கள் ஆகிவிட்டன. பண்பலை வானொலியின் RJக்கள் கூச்சல் போடுகின்றனர். AIRன் RJக்களும் கூட சோடை போய்விட்டனர். ஆனால் அழுத்தம் திருத்தமாக தமிழை வாசிக்கும் தென்கச்சியார் போன்றோர், தரமான தமிழை கிராமங்களின் இல்லத்தரசியர் இலலங்களுக்கு நேரடியாகக் கொண்டு சென்றவர்கள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அம்மா.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s