தமிழில் சில நுட்பம் சார்ந்த பதிவுகளை ஊக்கப்படுத்தும் வகையில்…


தொடர்ந்த ஊக்குவிப்பை வழங்கி வரும் மதிப்பிற்குரிய சக பதிவர் திருமதி ரஞ்சனி நாராயணன் அவர்கள் கடைசி பெஞ்ச் வலைப்பதிவிற்கு versatile blogger என்கிற பதிவுலக விருது வழங்கியிருக்கிறார். பார்க்க - http://ranjaninarayanan.wordpress.com/2014/09/08/%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81/ அவருக்கு நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். விருது தந்தவர் பதிவு முகவரியைக் கொடுக்கவேண்டும் என்பது ஒரு விதி - சென்ட்ரல் ஸ்டேஷன் பக்கத்தில் கட்-அவுட்டே வைக்கலாம். இருந்தாலும் மாநகராட்சி அனுமதி தராது என்கிற ஒரே காரணத்திற்காக கீழே மட்டும் முகவரியைக் கொடுத்திருக்கிறேன்! http://ranjaninarayanan.wordpress.com என்னைப் பற்றி [...]

குஷ்வந்த் சிங் – வாழ்வெல்லாம் புன்னகை | என். சொக்கன்


குஷ்வந்த் சிங் யார்? ஏன் அவரைச் சுற்றி இத்தணை சர்ச்சைகள்? அவர் ஒரு ஹாஸ்ய எழுத்தாளரா? செக்ஸ் எழுத்தாளரா? மெய்யாலுமே அந்தாளு அப்படித்தானோ? அப்டி என்னதான் எழுதறாருன்னு அவர் புத்தகம் இந்தப் போடு போடுது..? இந்த வினாக்களுக்கெல்லாம் பதில் சொல்வது மாதிரி தமிழ் வாசகர்களுக்குக் கிடைத்திருக்கும் curtain raiser இந்த நூல். குஷ்வந்த் சிங் இறந்ததற்கு இரங்கல் பதிவு போட்டிருந்தார் மதிப்பிற்குரிய பதிவர் ரஞ்சனி நாராயணன் அவர்கள் தன் பதிலுரைகளில் குஷ்வந்த் சிங்கின் Train to Pakistan [...]

அஞ்சலி. சு கிருஷ்ணமூர்த்தி


ஐயா சு. கிருஷ்ணமூர்த்தி அவர்களை 2000த்தின் ஆரம்பத்தில் புதுகையில் சந்தித்தேன். பழக இனிமையானவர். எளிமையானவர்.  தன் குறை கருதாது மிகப்பெரிய பணிகளை வாழ்வின் இறுதி வரை செய்தவர். பலன்கள் எதிர்பாராது தனிநபராக பல பெங்காளி நாவல்களை தமிழுக்கு மொழி பெயர்த்தவர். கடைசி பெஞ்சின் அஞ்சலி. கிருஷ்ணமூர்த்தி - விக்கிபீடியா - http://en.wikipedia.org/wiki/Subramanian_Krishnamoorthy அஞ்சலி. சு கிருஷ்ணமூர்த்தி - http://www.jeyamohan.in/?p=61342   https://www.facebook.com/badriseshadri/posts/922184101132327 https://www.facebook.com/permalink.php?story_fbid=949710741712705&id=189102654440188

ஆயிரங்கால் மண்டபம் – ஜெயமோகன்


இன்னொரு சிறந்த சிறுகதைத் தொகுப்பைப் பற்றி எழுதுவேன் என்று சென்ற வார பதிவிலேயே மிரட்டியிருந்தேன். இதோ! ஜெயமோகனின் சிறந்த தொகுப்புகளைக் கொண்டிருக்கும் நூல் - ஆயிரங்கால் மண்டபம். பல களங்களில் எழுதப்பட்டிருக்கும் சிறுகதைகள் இந்நூலில் உள்ளன. எவை எப்படி இருந்தாலும், எளிய கதையமைப்பைக் கொண்ட 'ஆயிரங்கால் மண்டபம்', 'தேவகிச் சித்தியின் டைரி', 'நைனிடால்', 'தாண்டவம்' சிறுகதைகள் எனக்குப் பிடித்திருந்தன. நாகம், வெள்ளம், ஒன்றுமில்லை போன்ற சிறுகதைகள் ஏற்படுத்தும் மன எழுச்சியைத் தவிர்க்க முடியாது. ஆயிரங்கால் மண்டபம் ஆசிரியர் [...]