எங்கள் கடல் செந்நீராகிறது – ஈழத்தின் உண்மைக் கதைகள்


நூறு சத ஈழப் பிரச்சாரக் கதை. புலிகள் ஆதரவு புத்தகம். மேற்கொண்டு சொல்வதற்கில்லை எங்கள் கடல் செந்நீராகிறது - ஈழத்தின் உண்மைக் கதைகள் தொகுப்பு - கரிகாலன் பதிப்பு - தோழமை பதிப்பகம், சென்னை. முதல் பதிப்பு 2011 முழுநீள இந்திய எதிர்ப்புக் காவியம். அதென்ன உண்மைக் கதைகள்.  சொல்ல வருவது உண்மையா, கதையா? இவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை இந்தப் புத்தகத்தின் அட்டையிலேயே காணலாம். மறைமுகமாகப் புலப்படும் உண்மைகள் புலிகள் பொது மக்களுடன் கலந்திருந்தார்கள் [...]

தீபாவளி வாழ்த்துக்கள்


அன்பின் பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள். பட்டாசு குறைப்போமாக! விளக்கை அதிகப்படுத்துவோமாக! சிலபேர் சொல்றாங்க. தீபாவளி தமிழர் பண்டிகை இல்லை அதனால கொண்டாடக்கூடாதுன்னு. பொங்கலுக்குக்கூட வீட்டுக்கு வெள்ளை அடிக்காத பசங்கள கண்டுக்காதீங்க. அவங்க வீட்ட இருட்டா போட்டுக்கட்டும். தீபாவளி வாழ்த்துக்கள்.     photos (c) respective photographers! 🙂

அருவருப்பான விவகாரம் – ஃபியோதர் தாஸ்தயேவ்ஸ்கி


சில வாரங்களுக்கு முந்தி நூலகம் சென்றபோது கண்ணில் பட்டு கண்ணில் சிக்கியது இந்த 'அருவருப்பான விவகாரம்'. கொஞ்சம் கலவரத்தோடுதான் எடுத்தேன். எடுத்தவுடனே ரஷ்யா.. மிலிட்டரி ... ஆபீசர்.. ஆனால் 5 பக்கங்கள்தான். அதன் பிறகு கதை சூடு வைத்த சென்னை ஆட்டோ மீட்டர் கணக்காக என்னைப் பற்றிக்கொண்டது. சிறிய புத்தகங்கள் என்றாலும், விருவிருவிருப்பாக..... முடிந்துவிட்டது! அருவருப்பான விவகாரம் ஆசிரியர் - ஃபியோதர் தாஸ்தயேவ்ஸ்கி மொழிபெயர்ப்பு - ரா. கிருஷ்ணையா பதிப்பு - NCBH, முதல் பதிப்பு, ஜூலை [...]

வெளியில் ஒருவன் – எஸ். ராமகிருஷ்ணன்


இதைத் தன் முதல் சிறுகதைத் தொகுப்பு என்கிறார் ஆசிரியர். எளிய கதைக்களங்கள். மிக எளிய தமிழில் இனிய சிறுகதைகள். வெளியில் ஒருவன் ஆசிரியர் - எஸ் ராமகிருஷ்ணன் பிரிவு - புனைவு - சிறுகதைத் தொகுப்பு பதிப்பு - நற்றிணை பதிப்பகம் முதல் பதிப்பு டிச 2013 கன்னிமாரா நூலக முன்பதிவு - http://connemara.tnopac.gov.in/cgi-bin/koha/opac-detail.pl?biblionumber=9501501 NLB நூலக முன்பதிவு - http://catalogue.nlb.gov.sg/cgi-bin/spydus.exe/FULL/EXPNOS/BIBENQ/20120937/77784322,59 மொத்தம் 13 சிறுகதைகள். இவற்றுடன் உள்ள மின்நூலுக்கான தொடுப்பு தருவது சட்டப்பூர்வமானதா என்று தெரியலை. [...]

[மீள்பதிவு] The Portrait of a Lady! – குஷ்வந்த் சிங்


ஒரு பெண்மணியின் பிரதிபிம்பம்! - குஷ்வந்த் சிங் (மொழி பெயர்ப்பு ஆசிரியரின் விபரம் இப்பதிவின் இறுதியில் உள்ளது) என்னுடைய பாட்டி எல்லோரையும் போல ஒரு வயதான பெண் தான். அவருடைய மூப்பும் முகச் சுருக்கங்களும் எனக்கு இருபது வருடங்களாகப் பரிச்சயம். சிறு வயதில் அவர் மிகவும் அழகாக இருந்ததாகவும் அவருக்கு ஒரு கம்பீரமான கணவர் உண்டு என்றும் பலர் கூறக்  கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படி இருக்கமுடியுமா?  என்ற கேள்வி எனக்குள் எழும் போதெல்லாம் சிரிப்புத்தான் வரும். நம்ப முடியவில்லை. [...]