வெளியில் ஒருவன் – எஸ். ராமகிருஷ்ணன்


இதைத் தன் முதல் சிறுகதைத் தொகுப்பு என்கிறார் ஆசிரியர். எளிய கதைக்களங்கள். மிக எளிய தமிழில் இனிய சிறுகதைகள்.

வெளியில் ஒருவன்
ஆசிரியர் – எஸ் ராமகிருஷ்ணன்
பிரிவு – புனைவு – சிறுகதைத் தொகுப்பு
பதிப்பு – நற்றிணை பதிப்பகம் முதல் பதிப்பு டிச 2013
கன்னிமாரா நூலக முன்பதிவு – http://connemara.tnopac.gov.in/cgi-bin/koha/opac-detail.pl?biblionumber=9501501
NLB நூலக முன்பதிவு – http://catalogue.nlb.gov.sg/cgi-bin/spydus.exe/FULL/EXPNOS/BIBENQ/20120937/77784322,59

wpid-imag1137_1.jpg

மொத்தம் 13 சிறுகதைகள். இவற்றுடன் உள்ள மின்நூலுக்கான தொடுப்பு தருவது சட்டப்பூர்வமானதா என்று தெரியலை. பிழை என்றால் பின்னூட்டத்தில் தெரியப்படுத்தவும்.

 1. உறவும் பிரிவும் இன்றி – இணையத்தில் படிக்க http://www.openreadingroom.com/wp-content/uploads/2013/05/Uravum-Pirivum-Inri.pdf
 2. காற்று மரங்கள் –
 3. வெளியில் ஒருவன் – இணையத்தில் படிக்க http://www.openreadingroom.com/wp-content/uploads/2013/05/Veliyil-Oruvan.pdf
 4. கல்யாணி இருந்த வீடு – இணையத்தில் படிக்க http://www.openreadingroom.com/wp-content/uploads/2013/05/Kalyani-Irundha-Veedu.pdf
 5. ஆறு யானைகள் – இணையத்தில் படிக்க http://www.openreadingroom.com/wp-content/uploads/2013/05/Aaru-Yanaigal.pdf
 6. தெரிந்தவர்கள் – இணையத்தில் படிக்க http://www.openreadingroom.com/wp-content/uploads/2013/05/Therinthavargal.pdf
 7. போய்கொண்டிருப்பவள்
 8. தொலைந்து போதல் – இணையத்தில் படிக்க http://www.openreadingroom.com/wp-content/uploads/2013/05/Tholainthu-Pothal.pdf
 9. பழைய தண்டவாளம் – இணையத்தில் படிக்க http://www.openreadingroom.com/wp-content/uploads/2013/05/Pazhaya-Thandavalam.pdf
 10. இடம் பெயர்தல் – இணையத்தில் படிக்க http://www.openreadingroom.com/wp-content/uploads/2013/05/Idam-Peyarthal.pdf
 11. வீடு – வெளி – இணையத்தில் படிக்க http://www.openreadingroom.com/wp-content/uploads/2013/05/Veedu-Veli.pdf
 12. அம்மா – இணையத்தில் படிக்க http://www.openreadingroom.com/wp-content/uploads/2013/05/Amma.pdf
 13. நிகழ்காலத்தின் சுவர்கள்

மனஎழுச்சியை உருவாக்கக்கூடிய கதைகள் இவை அல்ல. பெரும்பாலான சிறுகதைகள் பரிதாப உணர்வையே தூண்டுகின்றன. எளிய வாசிப்புக்கு உகந்தது.  அதிகாலை பல்லவன்ல புதுக்கோட்டையில் எடுத்தால் விழுப்புரத்தில் முடித்துவிடலாம்!

wpid-imag1138_1.jpg

ஆறு யானைகள்

யானை என்பது இந்திய இலக்கியத்தில் பெரிய படிமம் என்று படைப்பாளிகள் கூறுவார்கள். பார்த்த மாத்திரத்தில் ஒரு பிரம்மிப்பை உருவாக்கும் யானைகளைப் பற்றிய சிறுவனின் பார்வை. யானையில் சவாரி செய்யும் அனுபவம் தரும் இன்பம், அதே யானைகள் வதைபடுவதைக் கண்டதும் போய்விடும்.

“எத்தணை படிக்கே…?”
“ஆறு…”
“என்ன செய்வே படிச்சு?”
“இப்படி யானை ஓட்டுவேன்” அவன் சிரித்தபடியே சொன்னான்.
“இதெல்லாம் வேணாம்… கஷ்ட ஜீவனம். பெரிய ஆபீஸரா வா… நானே யானையை வச்சிக்கிட்டு மாலை போட நிக்கேன்.”

தெரிந்தவர்கள்

பொதுவாகவே தராசில் ஒரு தட்டில் பணம், மறு தட்டில் பாசம். நீ வெளிநாடு போய் வந்திருக்கிறாயா. கொடுக்கும் வரை நல்லவன், கொடுத்ததைத் திருப்பிக் கேட்கும் வரை.

“நான் அனுப்பின ரூவா என்னாச்சு…”
பதில் சொல்லவில்லை.
“வரலையா…”
“வந்திச்சு…”
“என்ன செஞ்சே…”
“திடீர்னு கல்யாணம் பண்ண வேண்டியிருந்ததால செலவு ஆகிப்போச்சு. அப்பாவுக்கு வரவேண்டிய இடத்தில பணம் வரலே…”
“அத எனக்கு எழுதியிருக்கலாம்ல… இல்ல வீட்ல பணத்தைக் கொடுத்திட்டு கேட்டு வாங்கியிருக்கலாம்ல…”
அவன் ரோட்டைப் பார்த்தபடியே இருந்தான்.

இடம் பெயர்தல்

பணி இல்லாத கால கட்டம் கொடிது. அக்காலத்தில் உறவுகளின் தயவுகளில் வாழ்வது, அவை உடன்பிறந்த உறவுகளே ஆனாலும், கசப்பு தவிர்க்க முடியாதது.

வீட்டுக்குச் சாப்பிடப் போகும்போது அக்காவிடம் சொன்னான்: “நான் ஊருக்குப் போகலாம்னு இருக்கேன்…”
“எதுக்கு…?”
“இங்கே இருக்கப் பிடிக்கலே…”
“மாமா ஏதாவது சொன்னாரா…?”
பேசாமல் இருந்தான்.

அம்மா
பழைய புத்தகம் தரும் நினைவுகள்.

ரயிலில் நகரத்திற்கு வந்தார்கள் அம்மா. அவள் புஸ்தகங்கள் சாமி படங்களைக் கொண்டு வந்த பை ரயிலோடு போனது. பெஞ்சிற்கு அடியில் வைத்துவிட்டு இறங்கிப் போய் விட்டார்கள். கொஞ்ச நாட்களுக்குப் பின் அம்மா ஒடுங்கி விட்டாள். கடைசியில் அவளிடம் இருந்து பேச்சே வரவில்லை. ஜடாயுவின் சிறகு முறிந்து கிடக்கும் காட்சி அவனுக்கு ஞாபகம் வரும் எப்போதும்.

நிகழ்காலத்தின் சுவர்கள்

அரசு அலுவலகம், கஷ்ட ஜீவனத்திலும் ஊழல் ஜீவனம் தரும் பாடு.

“பில் கிடைச்சதா…”
“எப்படிக் கிடைக்கும்…”
“இருக்க இடம் தெரியும்… மதியத்துக்குள்ள முடிச்சிருவோம்… ஆனா மால் வெட்டனும்.”
“எவ்வளவு?”
“இரநூறுருவா…”
“எங்கிட்ட இப்ப இல்லை…”
“சம்பளம் வாங்கித் தரணும்…”

நூல் அரங்கம்

இன்னுமொரு பதிவில் சந்திப்போம் நண்பர்களே!

ஜெய்ஹிந்த்
Posted from WordPress for Android

2 thoughts on “வெளியில் ஒருவன் – எஸ். ராமகிருஷ்ணன்

 1. கடைசி பெஞ்ச் பக்கம் -அழகாக மாற்றம்.
  எஸ்.ரா வின் முதல் கவிதைத் தொகுப்பை நான் படித்ததில்லை. நல்ல அறிமுகம் தந்துள்ளீர்கள்.
  புதுக்கோட்டையிலிருந்து விழுப்புரமா? தினமுமா செல்கிறீர்கள்!

  1. புதுக்கோட்டை விழுப்புரம் எல்லாம் ஒரு பேச்சுக்கு சொன்னதுங்க. பல்லவன் பயணம் என்பது அடியேன் மனதிற்கு என்றுமே ஆனந்தம் தருவது!! அதான்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s