அருவருப்பான விவகாரம் – ஃபியோதர் தாஸ்தயேவ்ஸ்கி


சில வாரங்களுக்கு முந்தி நூலகம் சென்றபோது கண்ணில் பட்டு கண்ணில் சிக்கியது இந்த ‘அருவருப்பான விவகாரம்’. கொஞ்சம் கலவரத்தோடுதான் எடுத்தேன். எடுத்தவுடனே ரஷ்யா.. மிலிட்டரி … ஆபீசர்.. ஆனால் 5 பக்கங்கள்தான். அதன் பிறகு கதை சூடு வைத்த சென்னை ஆட்டோ மீட்டர் கணக்காக என்னைப் பற்றிக்கொண்டது. சிறிய புத்தகங்கள் என்றாலும், விருவிருவிருப்பாக….. முடிந்துவிட்டது!

அருவருப்பான விவகாரம்
ஆசிரியர் – ஃபியோதர் தாஸ்தயேவ்ஸ்கி
மொழிபெயர்ப்பு – ரா. கிருஷ்ணையா
பதிப்பு – NCBH, முதல் பதிப்பு, ஜூலை 2013
நூலக முன்பதிவு (கன்னிமாரா) – http://connemara.tnopac.gov.in/cgi-bin/koha/opac-detail.pl?biblionumber=8291951
நூலக முன்பதிவு (NLB) – http://www.nlb.gov.sg/newarrivals/item_holding.aspx?bid=200150476

கிருஷ்ணையா மொழியாக்கத்தில் தஸ்தாயெவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகளை என் கல்லூரி நாட்களில் கூடவே வைத்திருந்து பலமுறை வாசித்திருக்கிறேன். தஸ்தாயெவ்கியின் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. பலவீனமான இதயம், அருவருப்பான விவகாரம், சூதாடி போன்ற கதைகள் அதில் உள்ளன. தஸ்தாயெவ்ஸ்கியை வாசிக்க துவங்கும் எவரும் இந்த புத்தகத்தில் இருந்தே துவங்க வேண்டும் என்று சிபாரிசு செய்வேன்.

எஸ் ராமகிருஷ்ணன் – http://www.sramakrishnan.com/?p=421

அருவருப்பான விவகாரம்

ஆபீசர்களுக்கிடையில் இருந்த ஈகோ, பணியாளர்கள் மேலாண்மையில் வாக்குவாதமாகிறது.  தன் கீழ் பணி புரியும் பணியாளர்களிடம் கண்டிப்பாக நடந்து கொள்வதா, அவர்களுடன் சரிசமமாக ‘ஜனநாயக’ முறையில் (இந்த வார்த்தை முக்கியம்!!) பழகுவதா என்று விவாதம் நடந்து கொள்கிறது. ஜனநாயக முறையில் நடந்து கொண்டால் பணியாளர்களின் இதயத்தை வெல்லலாம் என்று ஒரு உறுதி படக்கூறுகிறார் ரஷ்ய மிலிட்டரி ஆபீசரான இக்குறுநாவலின் கதாநாயகன்.

விருந்துக்கு வந்துவிட்டுத் திரும்பும்போது, அவருடைய குதிரைவண்டி ஓட்டுபவன் வண்டியோடு பக்கத்தில் நடக்கும் கல்யாணத்திற்குச் சென்றுவிடுகிறான். பேசிய ஜனநாயகத்தை மறந்துவிட்டு அவனை கருவிக்கொண்டே நடந்து வீட்டிற்குப் போகிறார். போகும் வழியில் தன் கீழ் பணிபுரியும் ஒரு கீழ்நிலை பணியாளன் ஒருவனின் திருமணம் நடக்கிறது. அவனுடன் சோசலிசமாக எப்படியெல்லாம் பழகவேண்டும், அதன் மூலமாக தனது இமேஜ் எவ்வாறெல்லாம் உயரும், தன்னுடன் வாதிட்டர்வகள் முகத்தில் கரியைப் பூசலாம் என்று 1008 கற்பனைகளுடன் அழையா விருந்தாளியாக உள்ளே நுழைகிறார் மிலிட்டரி ஆபீசர். பிறகு நடப்பதெல்லாம் நூலில் தெரிந்து கொள்ளுங்கள்.

அவர் செய்யும் அட்டகாசங்கள் எல்லாம் 100 சத அக்மார்க் முத்திரை அரிவாள் சுத்தி முத்திரை குத்தப்பட்ட வயிறுகுலுங்க சிரிக்க வைக்கும் காமெடி. அதுதான் அருவருப்பான விவகாரம்!

அருவருப்பான விவகாரம்

இன்னொரு பதிவில் சந்திப்போம் நண்பர்களே!

ஜெய்ஹிந்த்
Posted from WordPress for Android

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s