எங்கள் கடல் செந்நீராகிறது – ஈழத்தின் உண்மைக் கதைகள்


நூறு சத ஈழப் பிரச்சாரக் கதை. புலிகள் ஆதரவு புத்தகம். மேற்கொண்டு சொல்வதற்கில்லை

எங்கள் கடல் செந்நீராகிறது – ஈழத்தின் உண்மைக் கதைகள்
தொகுப்பு – கரிகாலன்
பதிப்பு – தோழமை பதிப்பகம், சென்னை. முதல் பதிப்பு 2011

முழுநீள இந்திய எதிர்ப்புக் காவியம். அதென்ன உண்மைக் கதைகள்.  சொல்ல வருவது உண்மையா, கதையா?

wpid-imag1109_1.jpg

இவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை இந்தப் புத்தகத்தின் அட்டையிலேயே காணலாம். மறைமுகமாகப் புலப்படும் உண்மைகள்

  • புலிகள் பொது மக்களுடன் கலந்திருந்தார்கள்
  • அவர்களை ஆதரிப்பவர்களுக்கு இந்தப் பிரச்சாரக் கதைகளில் புகழாரம் செய்கின்றனர். மீதிப்பேர் துரோகிகள்
    சாப்பாட்டுப் பொட்டலம் போட்ட இந்திய விமானம் பிறகு போரில் இறங்குகிறது. அதற்கு என்ன காரணம் என்று சத்தியமாய் இவர்களுக்குத் தெரியாது.
  • மக்களுடன் கலந்திருந்த புலிகள், மக்களைக் கேடயமாகப் பயன்படுத்தியது உண்மைதான் போல என எண்ண வைக்கிறது. இத்தகு வேளைகளில் இராணுவத்தின் செயல்பாடுகள், புலிகளின் புனைவுகள் என இருப்பது இடியப்பச் சிக்கலாகிறது.

இந்தப் பிரச்சார கதைகள் அனைவரையும் திட்டுகின்றன. சிங்களனைத் திட்டுகின்றன. ராஜீவ் அரசை கொட்டேசன் போட்டுத் திட்டுகின்றன. ஜெயகாந்தனைத் திட்டுகின்றன. இந்திய இராணுவத்தைத் திட்டோ திட்டென்று திட்டுகின்றன.

‘பாரத் மாதா கி ஜெய்’ என்று சொல்லி மனைவியை பேறு காலத்திற்கு அழைத்துச் செல்லும் கணவனை இந்திய ராணுவம் உதைக்கிறது.

அவனுடைய மனைவியை மானபங்கப் படுத்தி இறந்த பிறகு தீ வைக்கும் பொழுது இந்திய சிப்பாய்கள் தேசீய கீதத்தைப் பாடுவதாக வருகிறது. ‘ஜன கன மன …’ பாடல் அடிகள் வருவது ஒன்னாம் நம்பர் அயோக்கியத்தனம், மக்கள் மனத்தில் எதிர்ப்புணர்வு கனன்று கொண்டேயிருக்க செய்யப்பட்டு பகிரங்கமான முயற்சி. கடுகளவேனும் தங்கள் கட்டுப்பாட்டை மீறி மக்கள் போய்விடக்கூடாது என்கிற பிரச்சார உத்தி.

தேசீய வாதிகளும், சொல்லும் சொல்லின் உண்மை என்ன என்று உணர்பவரும் மட்டும் இந்த நூலைப் படித்தால் போதும். இந்திய எதிர்ப்பாளர்கள் தங்களைச் சொறிந்து கொள்ளவும் படிச்சுக்கலாம்!

இந்த நூலைப் பதிப்பித்தவர் சென்னைக்காரர். தனித் தமிழ் ஈழ உணர்வால் ‘மட்டுமே’ இதைப் படிப்பித்திருப்பார் என்று நம்புவோமாக!.

ஜெய்ஹிந்த்
Posted from WordPress for Android

2 thoughts on “எங்கள் கடல் செந்நீராகிறது – ஈழத்தின் உண்மைக் கதைகள்

    1. பதிலுரைக்கு நன்றி பாவாணன் அவர்களே. பிரச்சார நெடி அடித்ததால் சற்று அதிருப்தியில் பதிந்திருந்தேன். புரிந்துகொண்டமைக்கு நன்றி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s