மார்கழி திருவிழா பராக் பராக்


மார்கழி திருவிழா ஆரம்பிக்க உள்ளது. வஸ்தாதுகள் வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் குதிக்க தயாராக உள்ளனர். அட்டவணைகள் வெளிவரத் தொடங்கிவிட்டன. ஆக, நாமளும் கலந்து கொண்டு திருவிழாவைச் சிறப்பிக்கலாம் என்றால் சென்னை போகமுடியாத நிலை. ஓசி டிக்கட்டுகளும் பெறமுடியாத சூழல். ஒரு மாறுதலுக்கு நாய் பிராண்டிய கட்டாந்தரையாக உள்ள ஒலிவட்டுக்களை மாற்றலாம் என்கிற உத்வேகம் வந்தது. இதெல்லாம் மூடு சரியா இருக்கப்ப செய்தால்தான் ஆச்சு. பின்வருவனவற்றை ஐடியூன்ஸ் மூலமாக தகவிறக்கம் செய்தேன். ஊத்துக்காடு பாடல்கள் - மகராஜபுரம் சந்தானம் [...]

கலா உத்சவம் – இந்திய இசை விழா [ஒலிப்பதிவு]


கலா உத்சவம் என்று இந்திய இசை விழாக்கள் ஒரு வாரமாக நடந்து வருகின்றன. நேற்று மாதி பானி இந்துஸ்தானி இசைக்குழுவின் கலப்பு இசை (fusion 🙂 ) நிகழ்வு எஸ்பிளனேட் கடலோர கலையரங்கில் நடந்தது. நல்லா இருக்கு என்றால் எதனால் நல்லா இருந்தது என்றோ, நல்லாவே இல்லை என்றால் எதனால் நல்லா இல்லை என்று சொல்லும் மதி இல்லாத காரணத்தால் அடங்களும் ஒலிப் பதிவும் மட்டும் இங்கே! நிகழ்வு - 1 - இந்துஸ்தானி https://soundcloud.com/murugapandian-ramaiah/maahibaani-singapore-2014-11-29-19-31 நிகழ்வு [...]

விபரீதக் கோட்பாடு – சுஜாதா


என்ன ஒரு குரூர சிந்தணை இந்த ஆசிரியருக்கு என்று வியக்கவேண்டி இருக்கிறது. தவிரவும் கதையின் போக்கில் இப்படித்தான் முடிவு இருக்கும் என்று ஊகிக்க முடிவதால் எனக்கு ஏன் இந்த குரூர சிந்தணை என்றும் யோசிக்க வேண்டியிருக்கிறது. விபரீதக் கோட்பாடு ஆசிரியர்: சுஜாதா பிரிவு: குறுநாவல் பதிப்பு: கிழக்கு பதிப்பகம் முதல் பதிப்பு செப் 2010 நூலக முன்பதிவு - NLB: http://www.nlb.gov.sg/newarrivals/item_holding.aspx?bid=12615860 http://www.nlb.gov.sg/newarrivals/item_holding.aspx?bid=14071054 நூலக முன்பதிவு - கன்னிமாரா: http://connemara.tnopac.gov.in/cgi-bin/koha/opac-detail.pl?biblionumber=365258 http://connemara.tnopac.gov.in/cgi-bin/koha/opac-detail.pl?biblionumber=365262 பூமி அக்னியையும் தியுலோகம் இந்திரனையும் [...]

மெலூஹாவின் அமரர்கள்


ஷிவா என்ற கதாபாத்திரத்தை அனைவரும் வணங்கும் சிவபெருமானுக்கான நடனம், மரிஜுஅனா புகைத்தல்,தீயவற்றை அழிக்கும் ஆற்றல்…. போன்ற குணங்களோடு கூட குற்ற உணர்ச்சி முதற்கொண்டு காமம், கோபம், காதல் என்று ஒரு சாதாரண மனிதனை போல உலவ விட்டிருப்பதில் வெளிப்படுகிறது அமிஷ் திரிபாதியின் அசத்தலான  கதைசொல்லும் திறமை.ஷிவாவை நீலகண்டராக ஊரே வணங்கும் போதும் அந்த போதை சற்றும் தலைக்கு ஏறாமல், நீல கழுத்தை கொண்டதாலேயே தான் கடவுளாகிவிட முடியாது என்று தன்னடக்கத்தோடு ஷிவா அமைதி காப்பதும், பல இடங்களில் [...]

ஸ்ரீரங்கத்து தேவதைகள் – சுஜாதா


எளிய வாசிப்பிற்கான ஒரு உண்மை கலந்த சிறுகதைப் புனைவுகள். இதில் வரும் குண்டு ரமணி, சின்ன ரா, எதிர் வீடு, காதல் கடிதம் போன்ற கதைகள் புன்னகையை வரவழைக்கும். பல நபர்களைப் பற்றிச் சொல்லும்போது அந்தப் பாட்டி பாத்திரம் நச்சென்று அமைந்து விடுகிறது. கடவுளுக்குக் கடிதம், ஏறக்குறைய ஜீனியஸ், மறு போன்ற சிறுகதைகள் கனமானவை. ஸ்ரீரங்கத்து தேவதைகள் ஆசிரியர்: சுஜாதா பிரிவு: சிறுகதை பதிப்பு: கிழக்கு பதிப்பகம், முதல் பதிப்பு செப் 2011 நூலக முன்பதிவு: NLB: [...]