சதுரங்கக் குதிரை – நாஞ்சில் நாடன்


சதுரங்கத்தில் குதிரைகள் மிக முக்கிய பங்கு வகிப்பதை வைத்து இந்தப் பெயரை வைத்தாரா அல்லது இலக்குகள் இல்லாமல் இங்கும் அங்கும் தாவுவதைக் குறிக்க இந்தத் தலைப்பை வைத்தாரா என்று புரிந்து கொள்ளும் அளவிற்கு நமக்கு ஞானமில்லை. திருமணமாகாத, உறவுகளோடு ஒட்டாத, சொந்த ஊர் பக்கம் ஒதுங்காத, தாய் தந்தை இழந்த..... ஒரு பரிதாபப்பட்ட ஜீவன் நாராயணன். கதை முழுக்க முழுக்க மும்பை மற்றும் மஹராஷ்ட்ரா பக்கம் நடக்கிறது. பிளாஷ்பேக்கில் நாகர்கோயில் வந்து போகிறது. தனியான பேச்சிலர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை [...]

புத்தனாவது சுலபம் – எஸ் ராமகிருஷ்ணன்


சிறந்த சிறுகதைகளின் தொகுப்பு. முன்னரே வாசித்திருந்தாலும் இப்பொழுதுதான் எழுத முடிந்திருக்கிறது. புத்தனாவது சுலபம் பதிப்பு : உயிர்மை பதிப்பகம் ஆசிரியர் - எஸ் ராமகிருஷ்ணன் முதல் பதிப்பு - டிச 2011 கன்னிமாரா நூலக முன்பதிவு - http://connemara.tnopac.gov.in/cgi-bin/koha/opac-detail.pl?biblionumber=7367151 தேசீய நூலக முன்பதிவு - http://www.nlb.gov.sg/newarrivals/item_holding.aspx?bid=14298998     இரண்டு குமிழ்கள் "ஏட்டம்மா.. இந்த ஆளு தொப்பையைப் பாருங்க. கஞ்சிப் பானை மாதிரி எப்படியிருக்கு. பாவம் இவன் பொண்டாட்டி" என்று சொல்லிச் சிரித்தாள். வாயை மூடிக்கொண்டு வரமாட்டாளா [...]

வெண்முரசு – பிரயாகை முன்பதிவு


குழந்தைகளுக்கான இரண்டு நூல்கள்


குழந்தைகளுக்கான இரண்டு நூல்களை அறிமுகப்படுத்துவதில் கடைசி பெஞ்ச் அர்ப்பாட்டமும் ஆணவமும் எல்லையில்லா மகிழ்ச்சியும் அடைகிறது. My Mother's Sari எங்க பேட்டை நூலகத்தில் Just returned பிரிவில் பொதுவாக விதவிதமான ஆங்கிலப்புத்தகங்கள் இருக்கும். நமக்கும் ஆங்கிலத்திற்கும் உள்ள உறவை நம்மிடம் ஆங்கிலம் பேசும் எவரும் அறிந்து கொள்ளமுடியும். இந்த காரணத்தால் ஆங்கிலப் புத்தகங்கள் பக்கம் தலை வைத்துப் படுப்பதில்லை. என்னவோ இந்திய ஆசிரியர் போன்று தெரிகிறதே என்று ஒரு குழந்தைகள் புத்தகத்தை எடுத்தப் பார்க்கையில், உடனே புன்னகையை [...]

9/11 சூழ்ச்சி வீழ்ச்சி மீட்சி – பா. ராகவன்


9/11 விசாரணை அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நூல். 1998ல் கோயமுத்தூர் குண்டு வெடிப்பு இதே நாளில்தான் நிகழ்ந்தது. அதே நாளில் இந்த நூலைப் பற்றி எழுதியிருப்பது தற்செயலாக அமைந்த ஒரு ஒற்றுமை. ஆசிரியரின் சீனிவெடிப் பட்டாசான எழுத்து நடையிலிருந்து சற்றே மாறுபட்டு, கொஞ்சம் ஃபார்மலான எழுத்து நடையில் இருந்தாலும், பல உண்மைகளைத் தமிழில் தருவதால் இந்த நூல் முக்கியத்துவம் பெறுகிறது. 9/11 சூழ்ச்சி-வீழ்ச்சி-மீட்சி ஆசிரியர்- பா. ராகவன் பதிப்பு - மதி நிலையம் நூலக முன்பதிவு [...]