“There are many people who leave an inerasable stamp on history, But there are very few who actually create history. Quaid-e-Azam Mohammed Ali Jinnah was one such rare individual.”
பாகிஸ்தானிற்குச் சென்ற அத்வானி இவ்வாறு கூறி, இந்தியாவில் சர்ச்சையைக் கிளப்பினார்.
இந்தியர்களில் ஜின்னாவைத் தூற்றாத ஆள் கிடையாது. தீவிர மதவாதியாக சித்தரிக்கப்பட்டவர். இந்தியா உடைய ஆங்கிலேயர்களுடன் சேர்ந்து இயங்கிய கோடறிக் காம்பு..
பாகிஸ்தான் என்பது நடைமுறை வாழ்வில் ஒத்து வராத ஒரு கருத்து. நாட்டின் இரு பாதிகளுக்கிடையில் ஒரு பகை நாடு. இந்த ஒரு அறிவு கூடவா ஒரு நாட்டின் கவர்னர் ஜெனரலுக்கு இல்லாது போயிருக்கும்?
இது போன்ற கேள்விகளுக்கு ஜின்னாவின் பார்வையிலிருந்து (அவ்வப்போது இந்தியாவைத் துதி பாடினாலும்) பதில் பேசும் ஒரு எளிய நூல்தான் இது.
ஜின்னா தேசியவாதியா? பிரிவினைவாதியா?
ச. ராசமாணிக்கம்
பதிப்பு – சந்தியா பதிப்பகம்
பிரிவு – அரசியல்
நூலக முன்பதிவு கன்னிமாரா: இல்லை
நூலக முன்பதிவு NLB: http://catalogue.nlb.gov.sg/cgi-bin/spydus.exe/FULL/EXPNOS/BIBENQ/39040912/11606708,2
நண்பர்களே,
ஏற்கனவே பாகிஸ்தான் அரசியல் வரலாறு பற்றிப் பேசும்போது பா. ராகவன் பயன்படுத்திய ஒரு சொல் தொடர் இது.
இன்றைக்கு இரண்டு -இரண்டரை மாதங்களுக்குள் ஒரு வீடு பிடித்துக்கொண்டு குடி போகமுடியுமா? அன்று ஒருநாடு பிரித்துக் குடிபோனார்கள்!
பார்க்க – பாகிஸ்தான் அரசியல் வரலாறு – பா.ராகவன்
உண்மையில் பாகிஸ்தான் பிரிவு என்பது எத்தன்மை வாய்ந்தது என்பதை இத்தணை ரத்தினச் சுருக்கமாகச் சொல்ல இயலாது.
காந்தி, நேருவுக்கு முந்தியே ஜின்னா இந்திய விடுதலைப் போரில் தீவிரமாக இயங்குகிறார். ஆனால் காந்தி என்கிற சுனாமியில் அடித்துச் செல்லப்பட்டவர்களில் ஒருவராகிறார். தன்னை ஒருத்தனும், அவர் யாருக்காகப் போராடினாரோ அந்த இந்திய மக்களும் சரி, அவர் எந்த வகுப்பினரைச் சேர்ந்தவரோ அந்த முஸ்லீம்களும் சரி, யாரும் ஆதரிக்கவில்லை.. பொருட்படுத்தவில்லை என்று நொந்து போய் லண்டன் போய் குறியேறி விடுகிறார்.
திறமையான காங்கிரஸ்காரர். அற்புதமான வாத்த்திறமை வாய்ந்தவர். தான் ஒரு தேசீயவாதியாகக் காட்டிக் கொள்ள விளைந்தாரே ஒழிய முஸ்லீம் முல்லாவாக அல்ல என்று இந்த நூல் மட்டுமல்ல. கீழே நான் கொடுத்துள்ள ஆவணப் படமும் சொல்கிறது.
மதக் கடமைகளைச் செய்பவர் அல்ல. க்ளீன் ஷேவ் செய்பவர். ரமஸான் காலத்திலும் மேலை நாட்டு உணவுகளை உண்பவர், முஸ்லீம் தனித்தொகுதியை எதிர்த்தவர், கிலாபத் இயக்கத்திற்கு ஆதரவளிக்காதவர் என்றெல்லாம் இருந்தவர், அனைத்திலும் பிரண்டு எதிர்மறை அரசியல் செய்தது காலத்தின் கட்டாயமே தவிர வேறில்லை.
ஆனால் அப்படி நியாயப் படுத்தலாகாது. பொது வாழ்வில் தன்னலம் வரும்போது அதன் விளைவுகள் எப்படி இருக்கும். தற்போதைய பாகிஸ்தான்தான் உதாரணம்.
ஆனால், தனி பாகிஸ்தான் என்று அவர் கேட்டது காங்கிரஸைக் கார்னர் செய்து வேண்டியதைச் சாதிக்கவே. துரதிருஷ்டவசமாக தான் விரித்த வலையில் தானே சிக்கிக் கொண்டார். புலி வாலைப் பிடித்தவன் கதைதான் ஜின்னா கதை என்று பதிவு செய்கிறார் ஆசிரியர்.
அவர் சொல்வதைப் போல்தான் ஜின்னாவின் முதல் உரை அமைந்திருக்கிறது. “Pakistan has been the biggest mistake of my life” என்று அவர் வாழ்க்கை முடிந்திருக்கிறது. ஒன்றுமே செய்ய இயலாத நிலையில் நோய்வாய்பட்டு இறந்து போகிறார்.
பாகிஸ்தானுக்கு அவர் மட்டும்தான் காரணமா? இல்லை 1937 தேர்தலிலேயே இந்தப் பிரச்சினை தொடங்கிவிட்டது. காங்கிரஸ்கார்ர்கள் முஸ்லீம் லீகை அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளாதது அவர்களை இந்த நிலைக்குத் தள்ளிவிட்டது. எனவே இது காங்கிரஸின் பதவி மோகம் என்று ஒரு சாரார்.
ஜின்னா தொல்லை விட்டால் போதும் என படேலும் நேருவும் நினைத்ததாக ஒரு சாரார்.
பெடரல் சிஸ்டம் (கூட்டாட்சி அமைப்பு) பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது, அதில் ஈடுபடாது, ஆங்கிலேயர்களுடன் சேர்ந்து காந்தியப் போராட்டங்களை நீர்த்துப் போகச் செய்வதிலும், தன் நிலையிலிருந்து யு டர்ன் அடித்து எதிர்மறைப் பிரச்சாரம் செய்தார் என்று ஒரு சாரார்.
எது எப்படியோ, நேரு + காந்தி கூட்டணியை வென்று காட்டினார். ஆனால் பாகிஸ்தான்தான் அதற்கு விலை கொடுக்கிறது. ஆபரேஷன் சக்ஸஸ். பேஷண்ட்….!
இந்தியாவை ஒரு இயக்கம் வழி நடத்தியது. பாகிஸ்தான் ஒரு தனி நபர் வசம் தன்னை ஒப்படைத்தது. ஒரு நேருவோ, பட்டேலோ, ராஜேந்திர பிரசாத்தோ தன்பக்கம் இல்லையே என்று வருந்தியதாகவும், தன்னைச் சுற்றி திருடர்களும், பொறுக்கிகளும் நிறைந்திருப்பதாகவும் கூறியதாக பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர்.

குறிப்பிட வேண்டிய ஒரு தகவல் ஜின்னாவின் மறுமணம் பற்றியது. அதீத வயது வித்தியாசத்தில் ஒரு பார்ஸி மைனர் பெண்ணை விரும்பியிருக்கிறார். அவளுக்கு 18 வயது ஆனவுடன் பெற்றோர் எதிர்ப்பை மீறி மதமாற்றம் செய்து மணந்து கொள்கிறார். உடல் நிலை மோச மடையத் தொடங்கிய நாட்களில் தெரியாத காரணங்களாால் அவளைப் பிரிகிறார். அடுத்த 2 ஆண்டுகளில் அவள் இறந்தும் போகிறாள். இறுதி பயணத்தில் ஜின்னா கதறுகிறார். பாகிஸ்தான் கிளம்பத் தயாராகிறார். அவரது ஒரே மகள் டினா பாகிஸ்தான் வர சம்மதிக்கவில்லை. அவர் மட்டும் போகிறார். திரும்பி வர இயலாத இடத்திற்கு.
பார்த்துப் பார்த்து கட்டிய மும்பை மலபார் ஹில்ஸ் வீடு. மஸகானில் காதல் மனைவி சமாதி. கிறித்தவரை மணந்து இந்தியாவிலேயே இருக்கும் மகள். தானே விரித்த பாகிஸ்தான் வரையில் தானே விழிந்திருக்கும் கவலை. நம்பி வந்த இடத்தில் தன்னை கவனிக்கக் கூட யாருமில்லையே என்கிற தனிமை.
-இந்தியப் பிரிவினைக்குப் ஈடாக ஜின்னா கொடுத்தவை இவை.
வெல்க பாரதம்
இன்றைய வலைச்சரத்தில் உங்கள் தளம் சிறப்பிக்கப்பட்டுள்ளது. நேரம் கிடைக்கும்போது வந்து பார்க்கவும்.