சிறந்த சிறுகதைகளின் தொகுப்பு. முன்னரே வாசித்திருந்தாலும் இப்பொழுதுதான் எழுத முடிந்திருக்கிறது.
புத்தனாவது சுலபம்
பதிப்பு : உயிர்மை பதிப்பகம்
ஆசிரியர் – எஸ் ராமகிருஷ்ணன்
முதல் பதிப்பு – டிச 2011
கன்னிமாரா நூலக முன்பதிவு – http://connemara.tnopac.gov.in/cgi-bin/koha/opac-detail.pl?biblionumber=7367151
தேசீய நூலக முன்பதிவு – http://www.nlb.gov.sg/newarrivals/item_holding.aspx?bid=14298998
இரண்டு குமிழ்கள்
“ஏட்டம்மா.. இந்த ஆளு தொப்பையைப் பாருங்க. கஞ்சிப் பானை மாதிரி எப்படியிருக்கு. பாவம் இவன் பொண்டாட்டி” என்று சொல்லிச் சிரித்தாள். வாயை மூடிக்கொண்டு வரமாட்டாளா என்று ஆத்திரமாக வந்தது நிர்மலாவிற்கு.
“ஏட்டம்மா, உங்களுக்குக் கல்யாணம் ஆகிருச்சா?” என்று கேட்டாள் சபீனா.
“மாப்பிள்ளை பாத்துக்கிட்டு இருக்காங்க” என்றாள் நிர்மலா தேவி.
“பொம்பளை போலீஸைக் கட்டிக்கிட நிறைய பேரு பயப்படுவாங்க. மாப்பிள்ளை லேசில் கிடைக்காது”
புத்தனாவது சுலபம்
(இணையத்தில் – http://www.sramakrishnan.com/?p=2269)
அவனது அம்மாவிற்கு அருண் பைக் ஓட்டுவது பிடித்திருக்கிறது. அவள் பல நேரங்களில் அருண் பின்னால் ஏறி உட்கார்ந்து கொண்டு கோவிலுக்குப் போகிறாள். ஒயர்கூடை பின்னும் பொருள் வாங்கப் போகிறாள். அவர்கள் இருவரும் சிரித்துக்கொண்டே போகிறார்கள். ஆனால் என்னால் அப்படி பைக்கில் போக முடியாது. ஒருநாள் என்னை அலுவலகத்திற்கு பைக்கில் கொண்டுவந்து விட்ட போதுகூட அவன் இயல்பாக பைக் ஓட்டவில்லை என்றே பட்டது.
பெண் என்று எவருமில்லை
ஆம் புருனோ, அவர்கள் குற்றவாளிகளே
ஜியோர்டினோ புருனோ இத்தாலியைச் சேர்ந்த விஞ்ஞானி, கணிதவியலாளர். தத்துவவாதி. விஞ்ஞானக் கொள்கைகளைப் பற்றிப் பேசுகிறார் என்று 1600ம் வருடம் மதவாதிகளால் உயிரோடு எரித்துக் கொள்ளப்பட்டார்.
சொர்ணத்து ஆச்சிக்கு மன்மோகன்சிங்கைப் பிடிக்காது
அந்த மனுஷன் கஷ்டப் படுவது இவனுக்கு ஏன் கேலியாக இருக்கிறது. அவருக்குக் குடும்பம் இருக்காதா, எப்போது வீட்டிறகுப் போவார். எவ்வளவு நேரம் தூங்குவார். தலையில் எப்போதும் தலைப்பாகை கட்டியிருக்கிறாரே, அது சூட்டை உண்டு பண்ணிவிடாதா, ஒழுங்காகத் தலைக்கு எண்ணெய் வைத்துக் கொள்வாரா… இப்படி அவரைப் பற்றி நிறைய யோசித்துக் கொண்டேயிருப்பாள்
இவை தவிர பின்வரும் கதைகள் அனைத்தும் சிறந்தவையே.
- சீட்டாட்டம்
- ஜன்னலைத் தட்டாதே அஷ்ரப்
- பொய்தொண்டை
- நடுவில் உள்ளவள்
- ஜெயந்திக்கு ஞாயிற்றுக்கிழமை பிடிப்பதில்லை
- யட்சன் தனித்திருக்கிறான்
- பேசும் கற்கள்
- சிறுமீன் (குறுங்கதை)
- சொந்தக்குரல்
- சிற்றறிவு
- கோகிலவாணியை யாருக்கும் நினைவிருக்காது
ஜெய்ஹிந்த்
Posted from WordPress for Android