சதுரங்கக் குதிரை – நாஞ்சில் நாடன்


சதுரங்கத்தில் குதிரைகள் மிக முக்கிய பங்கு வகிப்பதை வைத்து இந்தப் பெயரை வைத்தாரா அல்லது இலக்குகள் இல்லாமல் இங்கும் அங்கும் தாவுவதைக் குறிக்க இந்தத் தலைப்பை வைத்தாரா என்று புரிந்து கொள்ளும் அளவிற்கு நமக்கு ஞானமில்லை.

திருமணமாகாத, உறவுகளோடு ஒட்டாத, சொந்த ஊர் பக்கம் ஒதுங்காத, தாய் தந்தை இழந்த….. ஒரு பரிதாபப்பட்ட ஜீவன் நாராயணன்.

கதை முழுக்க முழுக்க மும்பை மற்றும் மஹராஷ்ட்ரா பக்கம் நடக்கிறது. பிளாஷ்பேக்கில் நாகர்கோயில் வந்து போகிறது.

தனியான பேச்சிலர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை போல தனிமையை உணர்த்துவது வேறில்லை. அதுவும் வயது கடந்த பேச்சலர்களுக்கு…? அது போன்று நாவல் முழுக்க தனிமை. உறவுகள் தூரம் போகும் வெறுமை. விதவைகளை மறுமணம் செய்யவோ, விவாகரத்து செய்த பெண்களை மறு திருமணம் செய்யவோ மனம் வராத கொடுமை. அனுசரணையான அலுவலக சகாக்கள் என்று போகிறது கதை.

தாயார் இறப்பிற்கு சொந்த ஊர் போவதும் சரி, தொழில் தொடர்பாக மராட்டியத்தில் அங்கங்கு செல்லும் பயணமும் சரி. காட்சிகளை கண் முன்னே விரிப்பவை. அந்த வகையில் இந்த நூல் ஒரு நல்ல அனுபவம்.

சதுரங்கக் குதிரை
ஆசிரியர்
– நாஞ்சில் நாடன்
பதிப்பு – ஐந்தாம் பதிப்பு – விஜயா பதிப்பகம், கோவை
பிரிவு – புனைவு
NLB முன்பதிவுசதுரங்கக் குதிரை
கன்னிமாரா முன்பதிவு – nil

இணையத்தில் PDF கோப்பு உள்ளது. ஆனால் இதைத் தருவது சரியானதா என்று எனக்குத் தெரியாது! http://www.padippakam.com/document/M_Books/m000495.pdf

குட்டினோ சொல்வான்: “உனக்கிப்போது நாற்பத்தி ஐந்துதானே ஆகிறது. இன்னும் சில ஆண்டுகள் ஆகட்டும். சித்ரவதை மேலும் கம்பீரமாக இருக்கும்” என்று

2 thoughts on “சதுரங்கக் குதிரை – நாஞ்சில் நாடன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s