சில நாட்களுக்கு முன்னர் பேஸ்புக்கில் இந்தக் கடிதத்தைக் காண நேர்ந்தது. இன்று வெண்முரசு இணையதளத்தில் ஜெயமோகன் பதிலுடன் வெளியாகியுள்ளது. மீள்பதிப்பில் மகிழ்வடைகிறேன். ஜெயமோகனே உனக்கு ஆண்டவன் ஆரோகியத்துடன் கூடிய நீண்ட ஆயுளை ஆசீர்வதிக்கட்டும். இதை எழுதும் என் வயது 77. என்னுடைய 7 8 வயதிலிருந்து புத்தகம் படிக்கும் வழக்கம் உள்ளது. அந்த வயதில் அரையணாவுக்கு அணில் டமாரம் ஜிங்லி என்று கையளவு புத்தகம் கிடைக்கும்.அதை வாங்குவதற்கும் வீட்டில் காசு தரமாட்டார்கள். ஆனால் அந்தவயது தோழிகள் வாங்குவார்கள். [...]