கோடை கால பயணமும் விமான அரசியலும்


கடந்த கோடைகாலப் பயணத்தின் இனிய நினைவுகளைச் சுமந்தவாறே இந்த வருட தாய்நாட்டுப் பயணம் தொடங்கியது. வெறுமனே பயணக்கதையைச் சொல்வதால் உங்களுக்கு என்ன ஆகப்போகிறது. எனவே நான் அறிந்த இன்னொரு செய்தியையும் உங்கள் காதில் போட்டு வைக்கிறேன். 2014க்கான எனது பயணத்தைப் பதியவே இல்லை. சரி போகட்டும். 2013க்கான பயண ஒளிப்படங்கள் இங்கு உள்ளன அழகிய பள்ளி வருடா வருடம் இந்தப் பயணம்தான் மனதை கார்ப்பரேட் உலகில் இருந்து மனிதர் உலகிற்கு மாற்றிவிடுகிறது. சற்றேனும் தளிர் இலைகள் வந்தால்தானே [...]

பஷீரின் சிறுகதைகள் – 1


ஜெ.சைதன்யா கதை சொல்லுவாள். ”..அப்றமா அந்த திவிடன் மாமா திவிடிக்கிட்டு ஓடினாங்களாம். அப்போ போலீஸ் மாமா தொப்பி போட்டுக்கிட்டு வேகமா அவங்களை தொரத்தினாங்களாம். போலீஸ் மாமா டேய் நில்லுடா திவிடான்னு சத்தம் போட்டாங்களாம்… திவிடன்மாமா நிக்க மாட்டேன் நீ என்னைய அடிப்பேன்னு சொல்லிட்டே ஓடினாங்களாம்…” போலீசும் திருடனும் மாமாக்களாக மாறி உற்சாகமாகத் தங்கள் கடமைகளைச் செய்யும் ஜெ.சைதன்யாவின் உலகில் வன்முறைக்கு இடமில்லை. எல்லாமே விளையாட்டுகள் மட்டுமே. 🙂 தன் நாற்பதுவயது வரை ‘அனல் கக்கும்’ இலக்கியங்களையே எழுதிவந்ததாகவும் [...]

அஞ்சலை – கண்மணி குணசேகரன்


உங்களைப்போன்ற ஒரு நண்பர் பரிந்துரைத்த நூல் இது. விழுப்புரம் சுத்துபத்து கிராமத்தில் நடக்கும் வெகு இயல்பான, ஆனால் துணிச்சலான சமூக சுயவிமர்சன நாவல் இது. நண்பர் ஒருவர் இந்த நாவலைக் கையில் வைத்துத் திணித்துவிட்டுச் சென்றார். கதை நெடுக, வெறுப்படைந்திருக்கிறேன், கண் கலங்கியிருக்கிறேன். இப்போது திளைத்து இதை எழுதிக்கொண்டிருக்கிறேன அஞ்சலை கண்மணி குணசேகரன் தமிழினி கன்னிமாராவில் இரவல் வாங்க - (காணவில்லை) NLBயில் இரவல் வாங்க - http://catalogue.nlb.gov.sg/cgi-bin/spydus.exe/FULL/EXPNOS/BIBENQ/1953674/81657825,2 படாச்சிகள் கோலோச்சும் கார்குடல் ஊரில், தாழ்த்தப்பட்ட வகுப்பில் [...]

வெண்முகில் நகரம் நிறைவு


வெண்முகில் நகரம் - இன்றுடன் முடிந்திருக்கிறது. பரம எதிரிகளாக ஆகவிருக்கும் சாத்யகியும், பூரசிரவஸும் தங்கள் இனிய சந்திப்பை நிகழ்த்தியதோடு முடிந்துள்ளது. அடுத்தடுத்த நூல்கள் இன்னும் அகவிரைவு கொள்ளச்செய்யும் என்பதன் அறிகுறி இது. புலோமையின் கதையுடன் தொடங்கிய கதை, திரௌபதியின் மங்கள இரவுகள், பாண்டவர்களின் பிற மண நிகழ்வுகள், துரியோதனன் மற்றும் பிற கௌரவர்களின் மண நிகழ்வுகள், பானுமதி, தேவிகை, விஜயை என்ற மூன்று இளவரசிகள்; சாத்யகி, பூரிசிரவஸ் என்ற இரண்டாம் கட்ட ஆளுமைகள் என்ற வர்ணக் கலவையாக [...]