நாவல்

வெண்முகில் நகரம் நிறைவு


வெண்முகில் நகரம் – இன்றுடன் முடிந்திருக்கிறது. பரம எதிரிகளாக ஆகவிருக்கும் சாத்யகியும், பூரசிரவஸும் தங்கள் இனிய சந்திப்பை நிகழ்த்தியதோடு முடிந்துள்ளது. அடுத்தடுத்த நூல்கள் இன்னும் அகவிரைவு கொள்ளச்செய்யும் என்பதன் அறிகுறி இது.

புலோமையின் கதையுடன் தொடங்கிய கதை, திரௌபதியின் மங்கள இரவுகள், பாண்டவர்களின் பிற மண நிகழ்வுகள், துரியோதனன் மற்றும் பிற கௌரவர்களின் மண நிகழ்வுகள், பானுமதி, தேவிகை, விஜயை என்ற மூன்று இளவரசிகள்; சாத்யகி, பூரிசிரவஸ் என்ற இரண்டாம் கட்ட ஆளுமைகள் என்ற வர்ணக் கலவையாக நடந்து முடிந்துள்ளது.

வெண்முரசு தொடங்கி ஒன்றரை வருடங்கள் ஆனாலும் இன்னும் புது கதாபாத்திரங்கள் அறிமுகம் இன்னும் நிற்கவில்லை. ஆக, இந்த நாவல் விரியத்தொடங்கும்போது இதன் வீச்சை எளிய வாசகர் மனங்களால் தாங்கிக்கொள்ள இயலுமா என்பது கேள்விக்குறி.


முதல் சண்டை காம்பில்யத்தில் தொடங்கியருக்கிறது. கர்ணனின் படை நகர்வுத் திறனையும், துரியனின் பொருமையின்மையும் தரும் தோல்வி கூடப் பெரிதில்லை. தோல்வியின் முடிவில் ‘இது என் வெற்றி’ என்கிற வகையில் திரௌபதி தன் செந்நிற ஆடையை காற்றில் பறக்கவிடுவதில் வஞ்சம் புகைகிறது.

யாரும் எதிர்பாரா வண்ணம் துரியோதனன் மிளிர்கிறான் நண்பர்களே. இந்த நூலின் ஆகச்சிறந்த கதாபாத்திரம் இவன். பானுமதியைக் கடத்தி வரும்போதும் சரி, இனி வேறொரு பெண்ணைக் கட்டமாட்டேன் என்பதிலும் சரி, இவள் இருந்தால்தான் நீ கட்டுப் படுவாய் என்று தன் மனைவியை கர்ணனின் தங்கையாக ஆக்குவதிலும் சரி, உண்மையை அறிந்து அதை வெளிப்படுத்த இயலாத தந்தையிடம் அடி வாங்குவதிலும் சரி, இறுதியில் தருமனைத் தழுவி தன் மனபாரத்தை நீக்குவதலும் சரி – துரியோதனன் மிக உயர்வான இடத்திற்குப் போகிறான்.

பானுமதி, திடீரென வருகிறாள். துரியோதனை மணக்கிறாள். ‘நீ சொன்னா நான் கட்டணுமா’ என்று துரியோதனனிடம் சீறிய கர்ணனை, திருமண நிகழ்விற்குச் சம்மதிக்க வைக்கிறாள். துரியன்-பானுமதி-கர்ணன் நட்பு வெகு சிறப்பாக வரப்போகறது எனபதை நான் அவர்களது முதல் சந்திப்பிலேயே உணர்கிறேன். ‘பின்னாளில் என்ன நடந்தாலும் என்னைக் காரணம் கேட்காதே, எனக்குத் தெரியாது. ஆனாலும் இந்த உலகில் எனக்கு அணுக்கமான தங்கையாக உணர்வது உன்னைத்தான்’ திரௌபதி இவளுக்குத் தூது அனுப்புவது மனத்தைப் பதைக்க வைக்கும் ஒரு தருணம்.

பூரிசிரவஸ், சாத்யகி – இவர்களில் பூரிசிரவஸின் பாத்திரம் மிக கணம். தேவிகையைக் கண்டதும் காதல், மலை மேல் ஆதிவாசிப் பெண்ணுடன் மணம், விஜயையைப் பார்த்ததும் சலனம், துச்சளை கூட அவளை மணந்து கொள்ளச் சொல்கிறாள். ஆனால் அத்தணை வாய்ப்புகள் இருந்தும் அனைவரையும் இழப்பது என்பது துக்கம். அதிலும் இவனது பிழைகளால் இழப்பது இன்னும் துக்கம். அடிக்கடி அவன் காணும் கனவுகள் கொடூரமானவை, ஆம், அவன் முடிவு அவ்வாறே ஆகப்போகிறது.

கிருஷ்ணனைப் பற்றி எழுதப்போவதில்லை. ஜெயமோகனின் கிருஷ்ணன் தமிழ் இலக்கிய உலகில் தனித்துவம் வாய்ந்தவன். மிக இனிமையானவன், மிக அண்மையானவன், மிக கொடூரமானவனாக இருக்கப் போகிறான்.

இப்படி ஒரு தரமான இலக்கியத்தில் ஜெயமோகன் போடும் உழைப்பு போற்றத்தக்கது. மனிதர் விளையாடுகிறார்..

வாழ்க பாரதம்!

Advertisements

1 thought on “வெண்முகில் நகரம் நிறைவு”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s