கல்கத்தாவின் புத்த மதப் பொக்கிஷங்கள் சிங்கப்பூரில் – விரைக!


கோடானு கோடி வாசகப் பெருங்குடி மக்களே!!! ஆசியாவின் பழமையான அருங்காட்சியகத்தின் பொக்கிஷங்கள்: கல்கத்தா அருங்காட்சியகத்திலிருந்து புத்தமத கலை அம்சங்கள் சிங்கப்பூருக்கு வந்துள்ளன. நண்பர் நேற்று மாலை அழைத்துச் சென்றார். குகைகளைத் தேடிய பழைய நினைவுகளை மீட்டெடுக்க உதவியது. https://www.facebook.com/kadaisibench/photos/a.1573619632923855.1073741829.1374905046128649/1606532889632529/?type=1&permPage=1 காந்தாரக் கலை மற்றும் பாலப் பேரரசின் எழில் மிகுந்த போதிசத்வர் மற்றும் புத்தர் சிற்பங்களைக் காணும் வாய்ப்பைத் தவற விட்டுவிடாதீர். ஜாதகக் கதைகளைச் சொல்லும் சிற்பங்கள் மற்றும் ஓவியங்கள், புத்தரின் வாழ்க்கை நிகழ்வுகள் மற்றும் புத்தமத சின்னங்கள் [...]

சப்தமாதரும் பாமாவும் – வெண்முரசு கன்னித் தெய்வங்கள் – 2


பாரத கதை பேசினால் பேசிக்கொண்டே இருக்கலாம். ஆம். பேசிக்கொண்டுதான் இருக்கிறேன். என் நண்பரிடத்தில், என் மனைவியிடத்தில், என் மேலாளரிடத்தில். அவ்வளவு ஏன். உங்களிடத்தில் கூட. வெண்முரசு தரும் வீச்சு அத்தகையது. நீலம் நாவல் கிருஷ்ணனுக்கானது என்றார் ஜெயமோகன். எழுதியும் நீல தாகம் தீரவில்லை போலிருக்கிறது. இந்திர நீலமும் நீலனைப் பற்றியே பேசி கிறங்கடிக்கிறது. நீலனுக்காக உருகினாள் ராதா. இங்கே நீலனை இயக்குகிறாள் பாமா. சரி தலைப்புக்கு வருவோம். வெண்முரசின் கன்னித் தெய்வங்கள் வரிசையின் இரண்டாவது பதிவு இது [...]

International Yoga Day – Simple solution for your enragement


Amidst of infuriating, one-sided, sometimes stubborn arguments to 'prove' that International Yoga Day is a 'Brahmin dharma' (Please note, to gain political gain, it is being positioned as a brahmin dharma rather than a Hindu dharma.), I want to register my 'conditional' support for the same. Conditional? yes it is conditional. Unless you make the [...]

வெண்முரசு கன்னித் தெய்வங்கள் – 1


வெண்முரசு காட்டும் பெண்கள் வலிமையோடு நடமாடுகின்றனர். பல பெண்கள் பிறந்துள்ளனர். சிறுமியாக கன்னியாக இல்லாளாக மூதாட்டியாக இது வரை வாழ்ந்துள்ளனர். கன்னிமை காலத்து நிகழ்வுகளை அழகுற சொல்லும் சில இடங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்தப் பதிவு. கன்னிமை காலத்தைக் காத்து நிற்கும் தெய்வங்கள் மற்றும் தேவதைகளை வெண்முரசு காட்டும் ஒவ்வொரு தருணமும் இனம்புரியா ஒரு மன எழுச்சிக்கு ஆளாவது தவிர்க்க முடியாது போகிறது. அது தரும் அமானுட உணர்விலா, தினசரி பார்த்து வணங்கிய கன்னி தெய்வங்கள் [...]

ஜோ டி குரூஸ் வழக்கும் தமிழக கருத்து சுதந்திரமும்


சென்னை புத்தகக் கண்காட்சிக்குச் சிலநாட்கள் தொடங்கிய அந்தப் பிரச்சினைக்குத் தான் எத்தணை ஆதரவு! ஒவ்வொரு டிவிக்கும் மாறி மாறி ஓடி ஓடி பிரச்சினையைக் கொழுந்து விட்டு எரியச் செய்த ஜோல்னா பை காரர்கள், தலை முடி கொட்டி தாடி வளர்த்தவர்கள், குர்தா அணிந்தவர்கள் செய்த கலாட்டக்கள் எத்தணை? எங்களுக்குத் தோன்றும் இதுதான் நியாயம் என்று ஆர்பாட்டங்கள் என்ன? மனிதச்சங்கிலிகள் என்ன? இணையத்தில் அவர்களுக்கு ஆதரவாய் எழுதப்பட்ட பதிவுகள் என்ன? காரணம் என்ன? கருத்து சுதந்திரம்! அதாவது அவர்களுக்கு [...]