ஜோ டி குரூஸ் வழக்கும் தமிழக கருத்து சுதந்திரமும்


சென்னை புத்தகக் கண்காட்சிக்குச் சிலநாட்கள் தொடங்கிய அந்தப் பிரச்சினைக்குத் தான் எத்தணை ஆதரவு! ஒவ்வொரு டிவிக்கும் மாறி மாறி ஓடி ஓடி பிரச்சினையைக் கொழுந்து விட்டு எரியச் செய்த ஜோல்னா பை காரர்கள், தலை முடி கொட்டி தாடி வளர்த்தவர்கள், குர்தா அணிந்தவர்கள் செய்த கலாட்டக்கள் எத்தணை? எங்களுக்குத் தோன்றும் இதுதான் நியாயம் என்று ஆர்பாட்டங்கள் என்ன? மனிதச்சங்கிலிகள் என்ன? இணையத்தில் அவர்களுக்கு ஆதரவாய் எழுதப்பட்ட பதிவுகள் என்ன?

காரணம் என்ன? கருத்து சுதந்திரம்! அதாவது அவர்களுக்கு மட்டும் கருத்து சுதந்திரம்.

Perumal Murugan

அது என்ன அவர்களுக்கு மட்டும் கருத்து சுதந்திரம்? இதே எழுத்தாளர் ஜோ டி குரூஸ் எழுதிய நாவலின் ஆங்கிலப் பதிப்பை நவயானா பதிப்பகம் நிறுத்திய போது கருத்து சுதந்திர தாகம் தணிந்து விட்டது. நிறுத்திய காரணம்தான் விந்தையானது. அது எப்படி மோடிக்கு ஆதரவாக கருத்து சொல்லலாம். அந்தக் கருத்து எங்களுக்குப் பிடிக்கவில்லை. பதிப்பிப்பதும் பதிப்பிக்காததும் எங்கள் விருப்பம். எனவே பதிப்பிக்க மாட்டோம்.

இங்கே கருத்து சுதந்திரம் உள்ளது. அதாவது பிரசுரிக்க மாட்டோம் என்று சொல்லக்கூடிய கருத்து சுதந்திரம்.

பெருமாள் முருகன்

இப்ப இந்த பாதி கருத்து சுதந்திரம் இப்ப மறுபடி வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

குரூஸ் எழுதிய கொற்கை நாவல் மன்னார் வளைகுடாவின் பாகவதர் வாழ்க்கை வரலாறைக் காணத்தருகிறது. அதில் தங்கள் இனத்தை – குறிப்பாக பெண்களை, கன்னியாஸ்திரிகள், பாதிரிகளைப் பற்றி தவறாக சித்திரித்துள்ளது என்று சொல்லி ஜோ டி குரூஸ் மீது மீனவர் விடுதலை இயக்கப் பொது செயலாளர் வழக்குப் போட்டுள்ளார்.

இந்த கலாட்டா டிவி கூட்டம், அவர்கள் பேச்சைக் கேட்டு ஜால்ரா தட்டிய பலியாடுகளான இணைய பதிவாளர்கள் எல்லாம் பாவம் ஓய்ந்து போய் கிடக்கிறார்கள். மீதி உள்ள தமிழின தலைவர்கள், இணைய பதிவாளர்கள் அனைவரும் ஒரே அடியாக விசா வாங்கிக்கொண்டு எங்கோ போய்விட்டார்கள் போல.

இந்நிலையில் கொஞ்சமாவது ஜோ டி குரூஸ் அவர்களுக்கு நாமாவது ஆதரவு கொடுப்போம் என்று சிலர் முன் வந்துள்ளனர்.

‘டி குரூஸின் இந்த சட்டப் போராட்டதிற்கு எங்களது முழு ஆதரவினைத் தெரிவிக்கிறோம். குற்றவியல் அவதூறு வழக்கு நிச்சயம் தோல்வி அடையும் என்பதில் சந்தேகமில்லை. மனுதாரர் மலிவான விளம்பரத்திற்காகவும் எழுத்தாளரை மனரீதியாக துன்புறுத்தவுமே இந்த வழக்கைப் போட்டுள்ளார் என்பதிலும் சந்தேகமில்லை’ என்று கையெழுத்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

கல்வியாளர் வசந்தி தேவி, எழுத்தாளர் கீதா, பத்திரிகையாளர் ஞானி, நடனக்கலைஞர் லீலா தாம்சன், கர்நாடக இசைப் பாடகர் டி எம் கிருஷ்ணா, சினிமா தயாரிப்பாளர் ஆனந்த் பட்வர்தன், பேராசிரியர் அரசு மற்றும் நாடகவியலாளர் மங்கை ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

தான்தோன்றித்தனமான மதம் மற்றும் அறநெறிக் காவலர்கள் திரும்ப இன்னொரு எழுத்தாளரின் எழுத்து உரியையும், அதனிலும் ஆபத்தான வகையில், அரசியலமைப்புச் சட்டப்படியான கருத்து சுதந்திரத்தையும் முடக்கப் பார்க்கின்றனர் என்று அவர்களின் அறிக்கை கூறுகிறது.

இந்த நாவல் கத்தோலிக்க நம்பிக்கையை காயப்படுத்தியது என்பது உண்மை அல்ல, அது விவாதத்துக்கு உரியது. நாவல் என்பது பல்வேறு வாசிப்புக்குரிய இலக்கியப் படைப்பு என்று அந்த அறிக்கை கூறுகிறது.

Capture

மேலும் கொற்கை மற்றும் ஆழி சூழ் உலகு நாவல்கள் பல காலமாக பொது வெளியில் வாசிப்பில் உள்ளன. இது வரை மீனவர் சமூகத்திற்குப் புகழையும் பெருமையுமே பெற்றுத் தருகின்றன என்று அந்த அறிக்கை கூறுகிறது.

இது வரை செய்தி. இனி நான் சொல்ல விளைவது.

சில மாதங்களுக்கு முந்தி ஜோ டி குரூஸ் சிங்கைக்கு வந்திருந்தார். உட்லேண்ட்ஸ் நூலகத்தில் அவரது எளிமையான உரையையும், அடுத்த நாள் அங் மோ கியோ நூலகத்தில் ஒரு செரிவான உரையாடலிலும் பங்கு கொண்டார். உரையாடல் நிகழ்ச்சிக்கு தாமதமாகிவிடுமோ என்று காலையில் எழுந்து உணவு கூட உட்கொள்ளாமல் டாக்சியைப் பிடித்து குறித்த நேரத்திற்கு கால் மணி முன்னரே போய் ஆஜரானேன். அதற்கு முன்னரே நூலகத்திற்கு வந்திருந்தார். உரையாடலில் பங்கு கொள்ள இனிமையானவர். அணுக எளிமையானவராகவும் தோன்றினார்.

நூலக உரையாடலில் எழுத்தாளர் ஜோ டி குரூஸ்
நூலக உரையாடலில் எழுத்தாளர் ஜோ டி குரூஸ்

மீனவர் சமூகம் என்று வரும்போது மட்டும் போராளியாக பொங்கி எழுகிறார். ஆனால் அவரது உரைக்கு சிங்கை மக்களிடையே பேசியதில் என்ன பலன் வரும் என்ற தெரியாது. ஆனால் இந்தியாவில் பலன் இருக்கும் என்பது உறுதி. அதற்கேற்ற வகையில் அரசினால் மீனவர் பிரச்சினைகளை ஆராயும் குழுவில் நியமிக்கப்பட்டிருக்கிறார் (இவர் சொன்னதைக் கேட்டு அரசு என்ன செய்தது என்பது நமக்குத் தெரியாது).

கத்தோலிக்க சமூகமாக இருந்தாலும் இன்னும் கைவிடாத மச்சான் சாமி வழிபாடு (திருச்செந்தூர் முருகன்), குமரி அன்னை வழிபாடுகளைப் பற்றி அவர் எடுத்து வைக்கும் கருத்துக்கள் நிச்சயம் பாதிரி மார்களுக்கு எரிச்சலைத் தரும். ஆனால் முதலில் இந்தியன் பிறகுதானே கிறித்தவன். இந்தியா ஒருங்கிணைந்திருப்பதற்கு ஜோ டி குரூஸ் மாதிரியானவர்கள் தொடர்ந்து இந்த மண்ணில் பிறந்து வந்திருப்பது காரணம் என்று நம்புகிறேன்.

மீனவர் பிரச்சினைக்கும் அயராது பாடுபட்டாலும் மீனவர் தலைமைகளிடையே உள்ள ஒற்றுமை இன்மையும் இந்த வழக்கின் பின்னால் இருக்குமோ என்றும் சந்தேகிக்க வேண்டி உள்ளது.

எது எப்படி இருந்தாலும், இந்த வழக்கு நிற்காது என்றே தோன்றுகிறது.

தொடர்புள்ள பக்கங்கள்
கொற்கை பற்றி ஜெயமோகன்

ஆழி சூழ் உலகு பற்றி ஜெயமோகன்

(#வம்பு: ஆமா, பெண்கள் மது அருந்துகிறார்கள். ஆண்களைப் பாலியல் துன்புறுத்துகிறார்கள்.  யாரென்று தெரியாத ஆணுடன் 4 குழந்தை பெறுகிறாள். ஒரு பெண் 5 பேரை மணக்கிறார். கந்தர்வன் நீரில் மீனாய் வந்து மார்பைக் கவ்வுகிறான். இவ்வளவு கலாட்டாக்கள் வெண்முரசில் தினசரி நடந்து கொண்டு உள்ளன. ஜெயமோகன் மீது எந்த பெண்ணீயவாதிகள் யாரும் வழக்குத் தொடுக்கவில்லையா?)

வளர்க பாரதம்

4 thoughts on “ஜோ டி குரூஸ் வழக்கும் தமிழக கருத்து சுதந்திரமும்

    1. அப்ப கேஸ் போட்ர வேண்டியதுதான் :-). வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அம்மா.

  1. ஜோ டி`க்ரூஸ் நல்ல எழுத்தாளர். மனப்பக்குவமுள்ள மனிதர். நீங்கள் சொல்வது போல் முதலில் இந்தியர், பின் எழுத்தாளர். பிறகுதான் எல்லாமும். அரசியல், மத ஆதாயங்களுக்காகக் குப்பையைக் கிளற கேஸ் போடும் ஆசாமிகள் , அவர்களுக்கு ஆதரவு தரும் அமைப்புகள் இவைகளிலிருந்து தமிழ்நாட்டுக்கு, ஏன் இந்தியாவுக்கும் விமோசனமில்லை எனத் தோன்றுகிறது

    1. அன்பின் ஏகாந்தனாரே. தங்கள் வருகையால் மகிழ்ச்சி அடைகிறேன். இன்றைய செய்திப்படி இந்த வழக்கு விசாரணைக்கு மேல்கோர்ட் தடை விதித்துள்ளது. அவர்களுக்குத் தேவையே அலைக்கழித்துப் பார்ப்பதுதான். அம்புதான் வழக்குப் போட்டுள்ளது. வில் எது என்று அனைவருக்கும் தெரியும். நன்றி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s