காக்கா முட்டை


நேற்று காக்கா முட்டை பார்த்தேன். பிறரைப் போலவே எனக்கும் பிடித்திருந்தது. குறிப்பிட்டுச் சொல்லும்படி ஒரு காட்சி என்றால்... பசங்க ரெண்டு பேரும் காணாமல் போகிறார்கள். பதபதைப்புடன் போலீசுடன் வருகிறாள் அம்மா. ரயில்வே பணியாளர் பழரசத்துடன் தவளைக் கறி பற்றி பேசிக்கொண்டிருக்கின்றனர். இவர்தான் எங்க பிரண்டு. பழரசம் என்று அறிமுகப் படுத்துகின்றனர். அவள் பழரசம் கையில் உள்ள தவளையைப் பார்க்க, அவர் வழிந்து கொண்டே தவளையை பின்புறம் மறைக்கும் இடம்.. குபீர் சிரிப்பு! நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம், [...]

உப்பு வேலி – ராய் மாக்‌ஸம்


இந்தியாவிற்கு மூன்று பயணங்களை மேற்கொண்டேன். தொலைதூர கிராமங்களையும், கொள்ளையர் பயம் மிகுந்த பகுதிகளையும், அசாதாரண மனிதர்களின் சந்திப்புகளையும் உள்ளடக்கியதாக இந்தப் பயனங்கள் அமைந்தன. ருசிகரமான நிகழ்வுகள், ஆனால் நிறைய ஏமாற்றங்கள் இருந்தன. கிட்டத்தட்ட சுங்கப் புதர் வேலியின் அனைத்து தடையங்கள் மற்றும் நினைவுகளும் அழிந்துவிட்டதாகவே தோன்றியது, 1998ல் மேற்கொண்ட கடைசிப் பயணம் என் விடாமுயற்சிக்குப் பலன் கொடுக்கும் வரை. -ராய் மாக்ஸம் http://www.roymoxham.com/page4.htm இந்தியாவில் உப்புக்கு ஒன்றும் பஞ்சமில்லை. சாதாரணமாகக் கிடைப்பது அது. மூன்று பக்கம் கடல் [...]

ஏம்பா சீப்பிஐ! அந்த பிரபுல் படேல் கேஸ் என்னாச்சு!


பழைய காங்கிரஸ் அரசின் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் பிரபுல் படேல், அவரது காலத்தில் எடுத்த பல முடிவுகளைக் கேள்வி கேட்டு பிரஷாந்த் பூஷன் தொடுத்திருந்த பொது நல வழக்கில் நீதிமன்றம் சிபிஐ யிடம் இந்தக் கேள்வியைக் கேட்டுள்ளது. 'அப்படி ஏதும் வழக்கு நடக்குதா? விசாரணை செய்றியளா?' என்கிற கேள்விக்கு 'ஆமாமா' என்று பதிலளித்துள்ளது சிபிஐ. அப்படி பூஷனின் மனுவில் என்ன இருந்தது? நிக்கவே முடியாதவனுக்கு முப்பத்தெட்டு பொண்டாட்டி மாதிரி, ஏற்கனவே தள்ளாடிக்கொண்டிருந்த ஏர் இந்தியாவிற்கு 700000000000 (எழுபதாயிரம் [...]