இந்தியாவுக்கு அசுர வல்லமை அளித்த ராக்கெட் விஞ்ஞானி


அமரர் அப்துல் கலாம் அவர்களுக்கான சிறந்த அஞ்சலிகளில் ஒன்று.

. . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா

டாக்டர் அப்துல் கலாம்

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

++++++++++

https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=vw9tYzAkctU

https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=q57FCLQUR94

https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=h15J9jF7cEk

https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=J8XJjkA5NuQ

https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=9CKCfiX3uO0

https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=TnX7SvAbf5k

+++++++++++++++++++

“உன் விதியை ஏற்றுக்கொண்டு, வாழ்க்கையில் முன்னேறிச் செல்;  விமானப் படையில் நீ சேர்ந்து வேலை செய்யக் கூடாதென்று விதி யுள்ளது.  நீ என்ன செய்யப் போகிறாய் என்பது இன்னும் நிர்ணயமாக வில்லை.  ஆனால் என்ன நீ பண்ணப் போகிறாய் என்னும் விதி ஏற்கனவே நிச்சமாக்கப் பட்டுள்ளது.  நீ புரிய வேண்டிய பணிக்கு அவசியம் இருப்பதால் விதியிட்ட பாதைக்கு உன்னை அழைத்துச் செல்கிறது.  ஆகவே உனது இந்த தோல்வியை மறந்திடு.  உனது பிறப்பின் மெய்யான காரணத்தை எண்ணித் தேடிச் செல்.  உன்னோடு நீ ஒன்றாய் ஒன்றிக்கொள்!  கடவுளின் விருப்பத்திற்கு நீ சரணடைவாய்”.

சுவாமி சிவானந்தா (ரிஷிகேஷில் டாக்டர் அப்துல் கலாமுக்குக் கூறியது)

“கனவு காண், கனவு காண், கனவு காண்,  பின்னால் கனவுகளை எண்ணங்கள் ஆக்கிப் பிறகு செய்கையாக்கு.  சிந்தனை செய்வது பேரளவில் இருக்க வேண்டும்.  நமது தேசத்தின் ஜனத்தொகை நூறு கோடி.  ஆகவே உன் சிந்தனைகள் நூறு கோடி மக்களுக்குத் தகுதி பெற்றதாய் அமைய வேண்டும்.  அப்படிச் செய்தால்தான் பேரளவில் நாம் முன்னேற முடியும்.”

டாக்டர் அப்துல் கலாம், பாரத ஜனாதிபதி (இளைஞருக்குக் கூறியது )

அக்கினி இடித் தாக்கம்!
அசுர வல்லமை ஊக்கம்!
பொறுமை யற்ற புயலிலே
புதுநெறி படைக்க
புறப்படும் எமது கனவுகள்!

டாக்டர் அப்துல்…

View original post 1,849 more words

அப்துல் கலாம்


அன்பின் அய்யா, நாட்டுக்கென பாதுகாப்பையும், மாணவர்களுக்கு சுய நம்பிக்கையும் வளர்ப்பதையே நோக்கமாகக் கொண்ட உங்கள் வாழ்க்கை பெறுமை அடைகிறது. தாங்கள் வாழ்ந்த காலத்தில் நாங்களும் வாழ்ந்தோம், பூனை போன்ற சாதுவான முகமும் குரலும், புலி போன்ற நெஞ்சுரமும் கொண்ட நீங்கள் அடுத்த தலைமுறைக்கென பல மாணவர் சங்கத்தில் உரையாற்றி உள்ளீர்கள். அவர்களில் கலாம்கள் உருவாக வேண்டும் என்று இறை வடிவாகிவிட்ட உங்களிடம் வேண்டுகிறேன். வாழ்க பாரதம். (கலாம் மறைவுக்கு விடுப்பு விட்டதில் பலருக்கும் உவப்பில்லை, எனக்கும். கருப்பு [...]

பிரபல பதிவர் விடுப்பில் செல்வதால் பதட்டம்


கோடானு கோடி வாசகப் பெருங்குடி (சிறுகுடி, கொட்டாம்பட்டி, கருங்காலக்குடி....) மக்களே, ஒரு செயல்திட்ட வேலைக்காக மூழ்கி முத்தெடுக்கப் போவதால் எதிர் வரும் சில மாதங்களுக்குப் பெரிசா பதிவுகள் வராது. (டேய். யாருடா அங்க சீட்டி அடிக்கிறது..) இத்தகு கடுமையான முடிவை எதிர்கொள்ள முடியாமல் யாரும் தீக்குளிக்கக் கூடாது. பால் வண்டி, குப்பை லாரிகள் வேலை நிறுத்தம் செய்யக்கூடாது. இதுவும் மோடியின் சதி என்று புதிய கொலைமுறை மற்றும் தொந்தி டிவிக்கள் செய்தியைத் திரித்து மக்களைப் பதற்றத்தில் ஆழ்த்தக்கூடாது. [...]

சிசுபாலனை எதிர் கொண்ட சப்த கன்னிகைகள்


பாமாவின் சித்தப்பாரு செய்த கூத்தின் காரணமாக நிச்சயம் செய்யப்பட்ட கிருஷ்ணன் - பாமா திருமணம் நின்று போகிறது. 'என் அப்பாவைப் பார்த்து கன்யா சுல்கம் கொடுத்து என்னை அழைத்துச் சென்றால் மட்டுமே வருவேன்' என்று பாமா அமைதியாக ஆனால் உறுதியாகத் தெரிவித்துவிட்டு ஆயர் குடி திரும்புகிறாள். தவறு என்று தெரிந்தும் பாமாவின் தந்தையாருக்கு தம்பியைத் தட்டிக்கேட்க முடியவில்லை. சியமந்தகம் படுத்தும் பாடு. ஜராசந்தருக்குத் மணத்தூது விடுகிறார் சித்தப்பாரு. தூது நிராகரிக்கப்படுகிறது. இறுதியாக, சிசுபாலன் பாமாவை மணக்க சம்மதிக்கிறான் [...]

பாபநாசம்


சில வருடங்களுக்கு வந்த இந்தியா டுடே கவர் ஸ்டோரியின் box matter இது. சராசரியாக உங்கள் வீட்டுக்கு வரும் நபர் 20 நிமிடங்களுக்கு முன்னர் ஒரு பாலியல் அசைபடம் பார்த்திருக்கலாம். 'ஒரு பையன் கெட்டுப் போறதற்குறிய அனைத்தும் உன் மகனிடம் இருக்கிறது. இண்டர்நெட், கார், செல்போன்..' இதைத் தழுவிய வயிற்றில் புளி கரைக்கும் கதை. கமல், கலாபவன் மணி, நிவேதா, எஸ்தர், கவுதமி என்று அனைவருக்கும் நடிப்பில் போட்டா போட்டி நடக்கிறது. பார்க்கவேண்டிய பதைக்கவேண்டிய படம். எனக்குப் [...]