ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் – ஜெயகாந்தன்


"ஏந்துரை? அவர் கிறிஸ்துவரா மாறிட்டாரா?" என்று கேட்டான் துரைக்கண்ணு, "இல்லை மம்மாதான் கிறிஸ்டியன். அவர் எப்பவும் போல இருந்தார். பிள்ளையார் கோயிலுக்குப் போவார். ஹிந்து பிரேயர் ஸாங்.... எல்லாம் பாடுவார். என்னைக் கூடக் கிறிஸ்தவன் ஆக்கணும்னு மம்மா சொல்லிச்சுது. 'அதெல்லாம் அவன் இஷ்டத்துக்கே விட்டுடணும்'னு பப்பா சொல்லிட்டார். ஸ்டில் ஐ ஹாவ் நோ எனி ரிலிஜன். எனக்கு மதம் இல்லே." "ஆனா சாமி கும்பிடுறியே.." என்று குறுக்கிட்டான் துரைக்கண்ணு. "எஸ் அதுக்கென்னா? சாமிக்கும் மதத்துக்கும் என்னா சம்பந்தம்" [...]

இப்படியாக ஒரு சினேகிதி – பிரபஞ்சன்


"தலைவலி இப்போ இல்லை. சரியா போச்சு" என்ற அவளை அர்த்தமுடன் பார்த்து தன் படுக்கையைக் காட்டி "இப்படி வந்து உட்காரேன்" என்றான். சுமதி அவனை, அவன் கண்களைக் கூர்ந்து கவனித்தாள். அவன் கண்கள் விடுத்த அழைப்பைப் புரிந்து கொண்டாள். "வேணாம். நீங்க தூங்குங்க." "ஏன்?" "வேணாம். எனக்கு வேணாம்." "கோவமா" "நான் கோபப்பட முடியுமா? நான் உங்க சோத்தை சாப்பிடுகிறவள். உங்களுக்கு ஆக்கிப் போட்ட வீட்டைப் பார்த்துக்கிற வேண்டியவள். நான் எப்படி கோவப்பட முடியும்?" சுமதியின் குரலில் [...]

சுதந்திர தின நிகழ்வுகள் – படங்கள் சொல்லும் கதைகள்


(இந்தப் பதிவு முழுக்க படங்களாலும், சமூகவலை பதிவுகளாலும் ஆனது என்பதால் மின்னஞசலில் பார்க்கும் நண்பர்களுக்கும், RSS ஓடை வழி பார்க்கும் நண்பர்களுக்கும் முழுதாக தெரியாமல் போகலாம்) எந்த ஒரு நாடும் நான் இப்படித்தான் என்கிற சமிஞ்ஞைகளை தன் நாட்டு மக்களுக்கும் உலகுக்கும் அனுப்பிக்கொண்டே இருக்கிறது. உதாரணமாக சிங்கையை எடுத்துக்கொண்டால், நான் உங்களை எவ்வளவு வசதியாக வைத்துக்கொண்டுள்ளோம்; பிற அண்டை நாடுகளில் எப்படி அடிப்படை  வசதிகள் கூட இல்லை என்று திரும்ப திரும்ப மக்களுக்குச் சொல்லிக்கொண்டே உள்ளது. நான் [...]

அன்னைக்கு வயதோ 69. இன்றைக்கும் தோற்றமோ 19.


"எல்லாரும் இந்தியாவுக்கு ஓடி வந்தோம். மைக்கேலுக்கு நல்ல காயம். இவரை நான் முதுகுலே தூக்கிக் கிட்டேன். மம்மாவும் தலையில ஒரு பெரிய மூட்டையைத் தூக்கிக்கிட்டாங்க. எங்களை மாதிரி எவ்வளவோ பேர்.. ரயில், குட்ஸ், வண்டி, நடை எப்படியெல்லாமோ.. உயிர் பொழைச்சால் போதும்னு மனுஷங்க ஓடறப்போ அவன் எவ்வளவு நல்லவனா, அடக்கமானவனா, நெறைஞச அன்பு உள்ளவனா இருக்கான் தெரியுமா...!" "........ அப்பாடான்னு மூச்சு விட்டோம். அவ்வளவுதான்... மறுபடியும் குண்டு விழுந்தது." "... மைக்கேல் அந்த நிலையிலே கூட உன்னைக் [...]