சுதந்திர தின நிகழ்வுகள் – படங்கள் சொல்லும் கதைகள்


(இந்தப் பதிவு முழுக்க படங்களாலும், சமூகவலை பதிவுகளாலும் ஆனது என்பதால் மின்னஞசலில் பார்க்கும் நண்பர்களுக்கும், RSS ஓடை வழி பார்க்கும் நண்பர்களுக்கும் முழுதாக தெரியாமல் போகலாம்)

எந்த ஒரு நாடும் நான் இப்படித்தான் என்கிற சமிஞ்ஞைகளை தன் நாட்டு மக்களுக்கும் உலகுக்கும் அனுப்பிக்கொண்டே இருக்கிறது. உதாரணமாக சிங்கையை எடுத்துக்கொண்டால், நான் உங்களை எவ்வளவு வசதியாக வைத்துக்கொண்டுள்ளோம்; பிற அண்டை நாடுகளில் எப்படி அடிப்படை  வசதிகள் கூட இல்லை என்று திரும்ப திரும்ப மக்களுக்குச் சொல்லிக்கொண்டே உள்ளது. நான் உங்களுக்கு எவ்வளவு சுதந்திரம் கொடுக்கிறேன் பாருங்கள் என்று இந்தியா சொல்லிக்கொண்டே இருக்கிறது.

ஆனாலும் தொடர்ந்து உலகத்திற்கு எதிர்மறை சமிஞ்ஞைகளை இந்தியா தந்து வந்தது என்பதை மறுக்க இயலாது.

என்றாலும் சுதந்திரத்தை முழு உற்சாகத்தோடுதான் கொண்டாடினோம். இன்றும் அப்படியே. விடுமுறை நாள் என்பதால் தூதரகத்தில் நல்ல கூட்டம். புல்வெளியில் இருந்து தளிர் வதங்கும் வாசனை குப்பென்று அடிக்கும் அளவிற்கு. சென்ற முறை போல மழையின் ஆசீர்வாதம் இல்லை. காற்றும் இல்லை. ஒரே நீராவி.

2015-08-14

 

 

வார இறுதி நாள் ஆனதால் சரியான கூட்டம்
வார இறுதி நாள் ஆனதால் சரியான கூட்டம்

ஊடக தர்மமும் அதர்மமும்

தமிழக மற்றும் இந்திய ஊடகங்களுக்கு என்று தர்மங்கள் அல்லது அதர்மங்கள் உள்ளன. இதில் நான் டிவிக்களைச் சேர்க்கவே இல்லை. அவற்றில் நான் ஒட்டு மொத்தமாக நம்பிக்கை இழந்துவிட்டேன். உதாரணமாக எந்த ஒரு இந்திய தேசீய செய்தியையும் விவாதப் பொருளாக்க இவை விரும்புவதில்லை. ஆனால் ஏனோ சில காரணங்களுக்காக –

 • தனது முதலாளியின் விருப்பமாகவோ
 • மறைமுகமாக தான் பெற்ற பலனுக்காகவோ

தமிழகத்தின் இனப் பிரச்சினையை சூட்டிலேயே வைத்திருக்க அவை முயல்வதாக நான் குற்றம் சாட்டுகிறேன். இந்திய பங்களாதேஷ் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தம் நடந்து கொண்டிருக்கும்போது சாதி தாண்டிய காதலையும், சாராயக் கடை பிரச்சினையையும் தாண்டி மக்கள் பார்வையில் எதையும் பட இந்த ஊடகங்கள் விரும்புவதில்லை. சிரங்கைச் சொறிவது போன்ற சுகம் தருவதால் நமது மக்களும் அந்த நமைச்சலை அனுபவிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள் பாவம். தேசீயத்தில் இணைந்து விடாமல் பார்த்துவிடும் இந்த ஊடகங்களின் வலிமை குறித்து நான் சிந்தித்துப் பார்க்கையில் ஒன்றுதான் தோன்றுகிறது.

இந்த ஊடகங்கள் சொல்வது அனைத்தும் உண்மை என மக்கள் நம்பியிருந்தால், நரேந்திர மோடி பிரதமராக ஆகியிருக்க இயலாது.

இந்திய – பங்களாதேஷ் நிலப் பங்கீடு

Straits times editorial on India Bangladesh land agreement
Straits times editorial on India Bangladesh land agreement

நான் இந்தியனா, பங்களாதேஷியா என்று குழம்பியிருந்த கூட்டம் இருந்திருப்பது சத்தியமாக எனக்குத் தெரியாது. 69ஆவது சுதந்திர தினத்தில் அந்தப் பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது. கத்தியின்றி, ரத்தமின்றி நிலப் பங்கீடு நடந்து முடிந்திருக்கிறது. (அன்றைக்குக் கூட பாகிஸ்தானின் DAWN பத்திரிகை, உறவுகளைத் தொலைத்த மூதாட்டி குறித்து கரிசனப்பட்டு எழுதியிருந்தது;) ) இந்த நிலப் பங்கீடு மூலம் இந்தியா உலகம் முழுக்க (உங்க வீட்டு RJக்கள் சொல்லும் பாணியில் புரிந்து கொள்ளாதீர்கள். நிஜமாகவே உலகம் முழுக்க) நேர்மறையான சமிஞ்ஞைகளை அனுப்பியிருக்கிறது. அதில் ஒன்றுதான் நான் மேலே கொடுத்த Editorial.

பிரதமரின் சீனப் பயனத்திற்கு சில நாட்கள் முன்பு இந்த ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டது ஒரு முத்தாய்ப்பு என்று உலக பார்வையாளர்கள் கருதுகிறார்கள். ‘நான் பெரியவன், என்னை விட சிறியவர்களுடன் வம்பு வைத்துக்கொள்வதில்லை. தீர்த்துக்கொள்ள விரும்புகிறேன்’ என்கிற செய்தி சொல்லப்பட்டிருக்கிறது. தென் சீனக்கடல் முழுக்க வம்புகளை வளர்த்திக்கொண்டிருக்கும் சீனாவிற்கு அளிக்கப்பட்டிருக்கும் இந்த செய்தியின் வலிமைதான் நான் மேலே தந்துள்ளது.

இந்திய பங்களாதேஷ் உறவு மேம்பாடு

சர்ச்சைக்குரிய கடல் பகுதியை பங்களாதேசுக்குச் சொந்தம் என ஐநா நீதிமன்றம் அறிவித்தது. இந்தியாவும் ஏற்றுக்கொண்டுள்ளது.

தென்சீனக் கடல் விவகாரங்களில் பிலிப்பீன்சுத் தீவுகளுக்கோ பிற நாடுகளுக்கோ ஆதரவாக தீர்ப்பு வந்தபோது சீனா அதனை எதிர்த்துள்ளது, தவிற, இவன் சொல்றதை எல்லாம் ஏத்துக்க முடியாது என்று எல்லை முழுக்க பஞ்சாயத்துக்களை வைத்துள்ளது.

இவை தவிர, போக்குவரத்து, மின்சார உற்பத்தி என்று அடுத்தடுத்த ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.

வட கிழக்கு மாநிலங்கள்

மக்கள் ஒன்று கலக்காமல் அங்கே பிரச்சினைகள் குறைய வாய்ப்பு இல்லை. ஏனைய இந்தியப் பகுதிகளைப்போல் பிழைக்கவும், அதற்காக பயணங்கள் மேற்கொள்ளவும் எளிதானாலே அவர்கள் தானாக பறந்து விரிந்த இந்தியதேசத்தில் தனக்கான பங்கினை எடுத்துக்கொள்ள முடியும்.

மூன்று பெரிய நிகழ்வுகள் நடந்துள்ளதாக உணர்கிறேன் நண்பர்களே.

 • ஒன்று, போக்குவரத்து.
 • இரண்டு நாகா ஒப்பந்தம்.
 • மூன்று மணிப்பூர் தாக்குதல்.

இதோ மிண்ட் ஏசியா (மலேசியா & சிங்கப்பூர்) இதழில் வந்த வடகிழக்கு இந்தியாவின் திட்டங்கள் பற்றிய ஒரு வரைபடம் (src MEA). உடனே நடக்குமா, சில பல வருடங்கள் தள்ளி நடக்குமா, நடக்காமல் போகுமா என்றெல்லாம் தெரியாது. ஆனால் இதுவரை இல்லாத அளவில் திட்டங்களில் முன்னேற்றம் இருக்கிறது என்பது உண்மை.

reconnecting north east - mint asia
reconnecting north east – mint asia

அடுத்ததாக நாகா ஒப்பந்தம்.

இந்த ஒப்பந்தம் போடப்பட்டது என்று திடுக் என்று செய்தி வந்தது. என்ன சொல்கிறார்கள் என்று பார்த்தால் மிகப்பெரிய வேலைகள் திரை மறைவில் ஓடியிருக்கின்றன. சொல்லப்போனால், அவ்வளவு ரகசியமாக நடந்த இந்த வேலை பற்றி இன்றைய பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பிறருடன் தகவல் பகிர்ந்திருப்பதாக அறிய முடிகிறது.

நான் வட கிழக்கு செல்ல ஆர்வமாய் உள்ளேன். எனது அட்டவணையில் உள்ளது. அதற்கான காலம் கூடி வரவேண்டும் அவ்வளவே.

மூன்றாவதாக மணிப்பூர் தாக்குதலுக்கு இந்தியா அளித்த பதிலடி.

எல்லை தாண்டிய தாக்குதல் என்கிறார்கள், இல்லை எல்லைக்குள்ளான தாக்குதல் என்கிறார்கள். என்ன வேணும்னாலும் இருக்கட்டும். பதிலடிகள் சாத்தியமாகியிருக்கிறது என்பது வரவேற்க வேண்டிய விசியம். காஷ்மீரில் ஒருவனைக் கைது செய்திருக்கின்றனர். கடல் பகுதியில் பாகிஸ்தான் படகு மூழ்கடிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கில் சாலை மற்றும் தண்டவாளம் போடப்படுகின்றன. வானூர்தி நிறுவனங்கள் வடகிழக்கு நகரங்களுக்கு சேவை அளிக்கத் தூண்டப்படுகின்றன.

வெளியுறவுகள்

நேபாள நில நடுக்கத்தில் அளித்த உதவி, (அங்கு இந்திய ஊடகங்கள் பெற்ற அவமானம்), ஏமனிலிருந்து மக்களைத் தூக்கிய அற்புதம் என்பன எல்லாம் ஒரு இந்தியனாக எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

நாம் செய்யக்கூடியது என்ன?

 • Help yourself against paid agenda: ஜாதி, இனப்பிரச்சினை இந்தியாவில் தீர்ந்துவிடக்கூடாது என்று பணத்தை வாரி இறைக்கும் கும்பல் இருக்கிறது. அவர்களிடமிருந்து காத்துக்கொள்ள குறைந்த பட்சம் நேர் மறை சிந்தனை கொண்டிருப்பது அவசியம்.
 • Help yourself against linguistic politics: தமிழ்தான், இந்தி எதிர்ப்பு, ஆக்கிரமிப்பு என்கிற மிகை வாசகங்களைப் புறம் தள்ளுங்கள். உங்கள் நண்பர்களே ஆனாலும் புறக்கணியுங்கள். தமிழகம் விட்டு வெளியே வந்து வேலை செய்யும் எங்களுக்குத் தெரியும் ஒரு பொது மொழியின் அவசியம். அது இந்தியாக இருந்தாலும் சரியே. தமிழ் மொழி தவிர வேறு தெரியாது என்பதனால் வெளி நாடுகளில் தமிழர்கள் பிற இந்தியர்களுடன் கலக்க முடியாதிருக்கிறார்கள் என்பதை உணருங்கள். ஹிந்தியும் தெரியாது, தமிழும் தெரியாது என்கிற கேவல தமிழர் கூட்டத்தில் நீங்களோ உங்கள் குழந்தைகளோ தவறியும் சேராதீர்கள். இந்தி எதிர்ப்பு என்பது காவிரி அரசியல், இலங்கை அரசியல் மாதிரி ஒரு அரசியல் அஜெண்டா என்பதை உணருங்கள்.
 • Help yourself against social media: சமூக வலை என்பது சீழ் பிடித்து நாறும் மனங்களின் மன்று கூடுகைகளாக மாறி வருகிறது. தள்ளி இருங்கள். அவசியமில்லாத ஒன்று கண்ணில் பட்டால் அதற்கெதிரான நடவடிக்கை எடுங்கள்.  பிறர் உங்களுக்குத் தரவேண்டிய மரியாதையை பிறருக்கும் அளியுங்கள். இனிய இணையம் என்பது ஒவ்வொருவரின் பங்களிப்பு.
 • Help yourself against negative publicity: எதிர்மறை கருத்துகள் கூறி புகழ் பெற ஒரு கும்பல் துடிக்கிறது. இந்தியாவிற்கெதிரான எந்த உணர்வையும் வளர்த்துவிட இவை காத்திருக்கின்றன. இந்தியாவிற்கு எதிராக பணம் தரும் எவனாவது பிச்சை போடமாட்டானா என்று காத்திருக்கின்றன. பிச்சை கிடைத்துவிட்டால தன்னைச் சுற்றி ஒரு 10 பேரை மனம் மாற்ற, மதம் மாற்ற விளைகின்றன. துஷ்டனைக் கண்டால் தூரவிலகு.
 • Help yourself against anti-nationalists: மன்மோகனைப் பிடிக்கும் பிடிக்காது. மோடியைப் பிடிக்கும் பிடிக்காது. யாருக்காகவும் தேசீயத்தை விட்டுக்கொடுக்கலாகாது. மதம் வேறு தேசியம் வேறு. அதைக் கலக்கி, கலகம் விளைவித்து, குளிர் காய காத்திருக்கும் வீணர்களிடம் சிக்காதீர்கள்.
 • Help your kids against evil minds: பேசுங்கள். கதை பேசுங்கள். அவர்களுக்கு தங்கள் அடையாளத்தைக் கதையாகச் சொல்லிக் கொடுங்கள். டிவி டிவியாக இருக்கட்டும். உங்கள் குழந்தைகளின் செவிலி ஆக வேண்டாம்.

வளர்க பாரதம். வந்தே மாதரம்

ஆடுவோமே பள்ளு பாடுவோமே – ஆனந்த

சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று

ஆடுவோமே பள்ளு பாடுவோமே.

https://twitter.com/aashutoshvatsa/status/632474558654615554https://twitter.com/Swapnilkhound/status/632474525972566016

https://twitter.com/candidkin/status/632472805984964609

https://twitter.com/ChidanandKumar/status/632388075021144064

https://twitter.com/Wajji_/status/632408653782323201

 

Advertisements

11 thoughts on “சுதந்திர தின நிகழ்வுகள் – படங்கள் சொல்லும் கதைகள்

 1. ranjani135 August 15, 2015 / 10:11 pm

  நாம் செய்ய வேண்டியது என்ன என்று மிகத் தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள். நிறைய விஷயங்கள் புரிந்தன. அவற்றை மட்டும் என் தளத்தில் பகிர்ந்து கொள்ளுகிறேன், உங்கள் அனுமதியுடன்.

  இந்தியாவில் இருந்து கொண்டு இந்தியாவைப் பார்ப்பதற்கும், வெளிநாட்டிலிருந்து உங்களைப் போன்றவர்கள் பார்க்கும் பார்வைக்கும் எவ்வளவு பெரிய வித்தியாசம் என்று உணர்ந்தேன். உலகநாடுகளில் இந்தியாவைப் பற்றிய கருத்து என்ன என்பதை உங்கள் மூலம் இன்று தெரிந்து கொண்டேன். அற்புதமான் ஒரு பதிவு, பாண்டியன். உண்மையான இந்தியன் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் இந்தப் பதிவில் நிறைய இருக்கின்றன.

  ஊடகங்களை சாடியிருப்பது மனதிற்கு ஆறுதலாக இருக்கிறது. அதுவும் தமிழ் தொலைகாட்சி நிலையங்கள் தேசிய செய்திகளுக்கு முன்னுரிமை கொடுப்பதில்லை என்பதுடன் அவைகளை ஏதோ போகிற போக்கில் சொல்லுவது வருத்தத்துக்குரியது. யார் இவர்களைத் திருத்துவது?

  உங்களது உலகப் பார்வை மனதிற்கு இதத்தை கொடுக்கிறது. இதுபோன்ற பதிவுகளை நிறைய எழுதுங்கள். வாழ்த்துக்கள்!
  வாழ்க பாரதம்!

  • Pandian August 16, 2015 / 7:32 am

   அம்மா, அனைவரும் விருப்பமும் தேசீயம்தான். அதிகமாக படிக்காத என் தாயார் உட்பட. அதனால்தான் தேசியத்தை குலைக்க இந்த மைனாரிடி கும்பல் படாத பாடு படுகிறது. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

 2. aekaanthan August 16, 2015 / 10:20 pm

  சுதந்திர தினத்தன்று அருமையான கருத்துக்களை சிந்திக்க என நமது நாட்டவருக்கு, நாட்டின் வெளியிலிருந்து கொடுத்திருக்கிறீர்கள். உண்மையில் தேசியம் நமக்குப் பெருமை. தேசியம் நம்மை, இந்தியர்களை, குறிப்பாக தமிழர்களை அவர்கள் எங்கிருந்தாலும், வாழவைக்கும். வெளிப்பிரதேசங்களிலும் நன்றாக நம் பெருமை பேசவைக்கும். மற்றதெல்லாம் வெறும் ஈயம். உணர்வார்களா நம்மவர்கள்? சில்லரை அரசியல்வாதிகள், சமூகவிரோதிகள், தேசத்துரோகிகளின் சூழ்ச்சிகளிலிருந்து, மாய வலையிலிருந்து விடுபடுவார்களா?
  தொடருங்கள் இத்தகைய ஆக்கபூர்வமான, அறிவுபூர்வமான பதிவுகளை.

  • Pandian August 17, 2015 / 6:36 am

   அன்பின் ஏகாந்தரே,
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
   பாமரன் செய்தாலாவது ஏதோ அறியாமல் செய்கிறான் எனலாம். ஆனால் இவர்கள் படித்தவர்கள். NGO நடத்துகிறார்கள், டிவிசேனலில் கோட்டு போட்டுக்கொண்டு உட்கார்ந்திருக்கார்கள், ஏதோ ஒரு விபரீத சித்தாந்தத்தை உடையவர்கள். மக்களாட்சியும் இவர்களை வாழவும், வளரவும், காசு பார்க்கவும் அனுமதித்துள்ளது.

   பாரதம் வளரட்டும்.

 3. vanusuya August 17, 2015 / 8:22 am

  அடாது சுனாமி அடித்தாலும், விடாது ​தொடர்​வோம்…

  • Pandian August 17, 2015 / 8:48 am

   நீங்க கடைசியாக வந்த பிறகு சப்பானில் நான்கு ஐந்து சுனாமி வந்து போய்விட்டது. எனவே நீங்கள் சுனாமியிலும் அரிதானவர். வருக. தங்கள் வரவு நல்வரவாகுக. நன்றி.

 4. narayanan September 8, 2015 / 12:29 am

  “இந்தியப்” பித்து பிடித்திருகிறதுபோல …… உண்மைலயே பாண்டியனா? பார்த்தாவா?…..ஜெயமோ ஜால்ரா….waste of time…

  .நாராயணன்

  • Pandian September 8, 2015 / 5:04 am

   வாங்க நாராயணன். சாயம் பார்ப்பது என்பது சமூகத்தில் உள்ள பழக்கம். அதை மாற்ற யாரால் இயலும். சரி விடுங்க. உங்களுக்கு ஜால்ரா தட்டினால் துட்டு தேறுமா என்று உங்க குழுவில் கேட்டு சொல்லுங்கள். தட்டிவிடுகிறேன்..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s