உங்கள் சுட்டிக் குழந்தைக்கு சுவையான குட்டிக் கதைகள் 75 – கமலா கந்தசாமி


தமிழ் படிக்கத் தெரிந்த 9-13 வயது சிறுவர் சிறுமியருக்குத் தரவேண்டிய நூல். சிறுவர் கண்களுக்கு ஏற்ற எழுத்துக்களில், கதைக்கு ஒரு படம் என அவர்களுக்கேற்ற வகையில் அச்சுக் கோர்த்துள்ளனர். பாராட்டுக்கள். கண்ணன் வயதுக்கு இந்தக் கதைகளை நேரடியாக சொல்ல முடியவில்லை. வர்ணனைகளைச் சேர்க்க வேண்டி இருந்தது. இத்துடன் கடைசி பெஞ்சுக்கு திரும்பவும் விடுப்பு விட எண்ணுகிறேன். மாமூல் வாழ்க்கைக்குத் திரும்பிய பிறகு  வருவேன். மீண்டும் சந்திப்போம் நண்பர்களே. வளர்க பாரதம்

ரப்பர் – ஜெயமோகன்


பிறகு காடே ரப்பரால் நிறைந்தது. வாழைத் தோட்டங்கள் வெட்டிச் சரிக்கப்பட்டன. அங்கெல்லாம் மாமிச வாடையுடன் ரப்பர் மரங்கள் தளிர்த்தன. மனித அருகாமையையும் பராமரிப்பையும் அன்பையும் வேண்டாத மரம் அது. இன்று காடுகள் இல்லை. மலைச்சரிவு முழுக்க கண்ணுக்கெட்டிய தூரம் வரை இலை சலசலக்க சருகு மெத்தை மீது, அணி அணியாக ரப்பர் மரங்கள் நாகரீகம் செழிக்க அவை காடுகளில் நின்று ரத்தம் சொட்டுகின்றன. அவற்றின் உடல் முழுக்க ரத்தக் காயங்கள். கருகின காயங்கள். வடுக்கள், தடங்கள் நகரத்தின் [...]

அன்னை – கிரேஸியா டெலடா


ஏன்? ஏசுவே ஏன்? கேள்வியை முடிக்கக் கூட அவளுக்குத் துணிவு வரவில்லை. கிணற்றுக்குள் கிடக்கும் கல்லைப் போல, இதயத்தின் அடியில் கிடந்தது அது. ஏசுவே, ஒரு பெண்ணைக் காதலிக்க  அவள் பாலுக்கு ஏன் இந்தத் தடை? காதல் எல்லோருக்கும் உரிமை. வேலையாட்கள், இடையர்கள், குருடர்கள், சிறையில் கிடக்கும் குற்றவாளிகள் யாருக்கும் அது உரிமை. அவள் குழந்தை பால் ஒருவனுக்குத்தானா அந்த உரிமை கிடையாது? அன்னை - கிரேஸியா டெலடா மொழி பெயர்ப்பு - தி ஜானகிராமன் பதிப்பு [...]