குடியரசு தின நிகழ்வுகள்


அன்பின் நண்பர்களே, அனைவருக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துக்கள். இந்த முறை தூதரகத்தில் தேசீய கீத ஒலிப்பதிவை உபயோகப்படுத்தாமல், எல்லோருமே சேர்ந்து பாடியது மனதிற்கு நிறைவைத் தந்தது. அடுத்தடுத்த பணிகள் இருந்ததால் ஏற்பாடு செய்திருந்ததால் அதிக நேரம் கொடியேற்றுதலில் செலவிட இயலவில்லை. விரிவாக எழுதும் அளவிற்கு இன்று உடலில் வலுவில்லை. எனவே - நன்றி வணக்கம் நண்பர்களே. வளர்க பாரதம். பள்ளிச் செல்வங்கள் - குடியரசு தினம் 2016 - Img (c) Indian Embassy Singapore

குடியரசு தின வாழ்த்துக்கள்


நண்பர்களுக்கும் சக பதிவர்களுக்கும், குடியரசு தின வாழ்த்துக்கள். அவசியம் அருகில் உள்ள பள்ளி கல்லூரிகளில் கொடியேற்று விழாவில் கலந்து கொள்ளுங்கள். செல்பி எடுத்தால் அவசியம் காணத் தாருங்கள் :-). வளர்க பாரதம்! வெல்க பாரதம்!

இந்திய ஜப்பானிய கூட்டுப் பயிற்சி


Malabar Exercise: இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் கடற்படைகளுக்கிடையேயான முத்தரப்பு கடற்படை ஒத்திகை Exercise Malabar எனப்படுகிறது. இந்தியா மற்றும் அமெரிக்கா மட்டும் இந்தியக் கடல் பகுதியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இந்தப் பயிற்சியில் 2015ல் ஜப்பானும் கலந்து கொண்டுள்ளது. 1992ல் தொடங்கப்பட்ட இந்தப் பயிற்சியில் சில சமயங்களில் ஆஸ்திரேலியாவும் சிங்கப்பூரும் கலந்து கொண்டுள்ளன. Malabar 2009, 2011, 2014 ஆகியவை ஜப்பானுடன் இணைந்து செயல்படுத்தியிருந்தாலும், அவை அனைத்தும் ஜப்பானிய கடலிலேயே நடைபெற்றன.  இத்தணைக்கும் அந்த சமயத்தில் இந்தியப் பெருங்கடல் பகுதியில் [...]

இடும்பனும் இறைவனும் வாட்சாப்பும் – தைப்பூச சிறப்புப் பதிவு


களைத்துப் போயிருந்தான் இடும்பன். மலையைத் தூக்கித் தூக்கி தோள்பட்டை எல்லாம் முறுக்கிக் கொண்டது போல கடுத்தது. 'u there. u there' என்று வாட்ஸாப்பில் அகத்தியரின் செய்தி மினுங்கிக் கொண்டு இருந்தது. டபிள் டிக் வந்தாலும் நீல கலராக மாறதது கண்டு அகத்தியர் குழம்பிப் போயிருந்தார். கொஞ்ச நாள் முந்திதான் கயிலை மலைக்குப் போய் சிவகிரி, சக்திகிரி என்கிற இரு மலைகளைப் பெயர்த்து எடுத்துக்கொண்டு ஏர் இந்தியா கார்கோவில் போட்டுக்கொண்டு வரும்படி பணித்திருந்தார். அந்த மலைகளைப் பொதிகை [...]

நீரிணை ராணி – தாய்வான் தேர்தல் சிறப்புப் பதிவு 5


தாய்வானில் பாலின தடையை தாண்டிய முதல் பெண் மட்டும் அல்ல - ஆசிய கண்டத்தில் அரசியல்வாதிகளின் பரம்பரைகளில் வராத ஒரு பெண் வாகை சூடியிருக்கிறார் என்றால் அவர் தாய்வானின் அடுத்த ஜனாதிபதி ஸாய் இங்-வென் தான் என்று புகழாரம் சூட்டி உள்ளன. ஆசிய நாரிஷக்தி! ஆசியாவின் பெரிய பதவிகளைப் பெற்ற பெண்கள் யாரென்று பார்ப்போமே. சிரிமாவோ பண்டாரநாயகே, இலங்கை - 1916-2000 இந்திரா (காந்தி), இந்தியா - 1917-1984 கோல்டா மேயர், இஸ்ரேல் - 1898-1978 கொரோஸோன் [...]