தாய்வான் கொடியை ஒரு ஒளிபரப்பில் வைத்திருந்ததன் காரணமாக பதின்ம வயது தாய்வானிய பாடகி ச்சௌ த்ஸுயு பகிரங்க மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டார் என்பதைப் பார்த்தோம்.
தாய்வானிய தேசீயம் என்பது பிரதான நிலம் என்று தன்னை அழைத்துக்கொள்ளும் சீனாவால் எதிர்க்கப்படுவது வரலாறு. தேர்தல் நெருங்கிய சமயத்தில் இப்படி ஒரு சிறுபெண் இரும்பு மனிதர்களின் மூக்கிற்குள் புகுந்து தும்மல் வர வைத்து வைத்திருக்கிறார். விடுவாரா வஸ்தாது? நேரே வந்து குடிமியைப் பிடித்துவிட்டார். விளைவு. பகிரங்க மன்னிப்புக் கடிதத்தை இறுகிய முகத்துடன் வந்து வாசிக்க வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
இதன் ஆங்கில வடிவம் பின்னே உள்ளது.
மாட்டுப்பொங்கல் அன்று நடந்த தாய்வான் தேர்தலில் இந்தப் பெண்ணின் இந்த பகிரங்க மன்னிப்பு சாசனம் புயலைக் கிளப்பு உள்ளதாக தெரிகிறது.
ஆனால், இது புதிதல்ல. ஏற்கனவே சென்ற வருட மிஸ் எர்த் போட்டியில் ஒரு சர்ச்சை நிகழ்ந்துள்ளது. மிஸ் தாய்வான் டிங் வெண்-யின் தாய்வான் ROC பட்டியுடன் அரங்குக்கு ஏற அனுமதி மறுக்கப்பட்டுள்ளார்.
அவிங்க கிட்ட முப்பதாயிரம் தடவை சொல்லிட்டேன். தாய்வான்னா தாய்வான். அங்கதான் பெறந்தேன். அந்தப் பேரோடதான் அலங்கார அணிவகுப்பிற்கு வருவேன் என்று தன் இணக்கமின்மையைத் தெரிவித்துள்ளார்.
அவர்களுடைய பதில் – இந்தாம்மா வேணும்னா மிஸ் சீன தய்பேய் என்று பட்டியுடன் மேடை ஏறு. இல்ல நடையைக் கட்டு என்று என்று மல்லுக்கட்டி உள்ளனர்.