க்ளீன் ஸ்வீப். தாய்வானின் முதல் பெண் ஜனாதிபதியாக ஸாய் இங்-வென் வென்றுள்ளார். இந்தப் பெரு வெற்றியை சீனாவிற்குக் கிடைத்த அடியாக உலகம் பார்க்கிறது.

தாய்வானின் சுருக்கமான வரலாறையும், பாப் பாடகி மற்றும் மிஸ் தாய்வான் போன்ற சர்ச்சைகளையும், ஸாய்யின் வெற்றி உரையையும் முன்னர் எழுதிய பதிவுகளில் பார்த்தோம்.
அந்தப் பொம்மனாட்டி ஜெயிச்சாலும் ஒரு ‘கேசமு’ம் மாறப்போவதில்லை. தாய்வான் எங்களது ஆளுகைக்குட்பட்டது என்று சீனா அறிவித்துள்ளது. பெரிய வெற்றி பெற்ற மிதப்பில் சுதந்திரதைப் பெற முயலலாம் என்று பிரம்மையில் அலையாதீங்கடா அப்பிரசண்டிகளா என்கிறது.
தாய்வான் தீவில் எதிர்கட்சி DPPக்கு ஆதரவாக தேர்தல் முடிவுகள் வந்த பிறகே சீன ஊடகம் வாயிலாக எச்சரித்துள்ளது சீனா. சுதந்திரத்தை நோக்கி எடுக்கப்படும் எந்த ஒரு பாலும் விஷமாக மாறும் என்று அச்சுருத்தியிருக்கிறது. சுதந்திரத்துக்கு எதிராக இருப்பதை உறுதிப்படுத்திய தாய்வானிய விவகாரங்களைக் கவனிக்கும் சீன கேபினெட் பிரிவு, தாய்வானிய வளைகுடாப் பகுதியில் அமைதியைப் பாதுகாக்க முயலும் என்றும் தெரிவித்துள்ளது.
தாய்வானும் சீனாவும் ஒரே நாட்டின் இரு பிரிவுகள், இறுதியில் ஒன்றாக இணைக்கப்பட வேண்டியவை என்கிற கொள்கைக்கு ஒப்புதலை மறுத்த த்ஸாய், தாய்வான் இன்று சந்திக்கும் சங்கடங்கள் ஒரு நாள் காணாமல் போய்விடும் என்று தன் உரையில் குறிப்பிட்டுள்ளார்.
நாலு பேருக்கு நல்லது நடக்கும்னா எதுவுமே தப்பில்லை.
தைவான் வெற்றிக் கனியைக் கொய்வான்
தம +
வருக திரு மது அவர்களே. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசு வெற்றிக் கனியைக் கொய்யவேண்டும் என்பதே நமது விருப்பமும்.