களைத்துப் போயிருந்தான் இடும்பன். மலையைத் தூக்கித் தூக்கி தோள்பட்டை எல்லாம் முறுக்கிக் கொண்டது போல கடுத்தது. ‘u there. u there’ என்று வாட்ஸாப்பில் அகத்தியரின் செய்தி மினுங்கிக் கொண்டு இருந்தது. டபிள் டிக் வந்தாலும் நீல கலராக மாறதது கண்டு அகத்தியர் குழம்பிப் போயிருந்தார்.
கொஞ்ச நாள் முந்திதான் கயிலை மலைக்குப் போய் சிவகிரி, சக்திகிரி என்கிற இரு மலைகளைப் பெயர்த்து எடுத்துக்கொண்டு ஏர் இந்தியா கார்கோவில் போட்டுக்கொண்டு வரும்படி பணித்திருந்தார். அந்த மலைகளைப் பொதிகை மலைகளுக்கு அருகில் போட்டுவிட தீர்மாணித்து, அதற்கான ஏற்பாடுகளைப் பார்த்துக்கொணடிருந்தார்.
சென்னையில் அப்பவென்று மழை கொட்டோ கொட்டென்று கொட்ட எல்லா கார்கோ பிளைட்டு. லாரிகளும் கான்சல் ஆனதால் இடும்பன் காலை நடையாகப் புறப்பட்டார், பாவம். இரு மலைகளையும் எடுத்து கட்டி தன் தோளின் இரு புறமும் தொங்கவிட்டுக் கொண்டு வந்து கொண்டிருந்தார்.
பாரம் கணக்க நடந்து வந்த இடும்பன், திருச்சி தாண்டி திண்டுக்கல் அருகில் வரும்போது வழி தவறியது போன்று குழம்புகிறார் இடும்பன். அப்போதைக்கு என்பீல்டு பைக்கில் வந்த ஒருவர் இடும்பன் மேல் கரிசனம் கொண்டு, ‘என்னாப்பா தம்பி. இப்படி வேர்த்தப் போச்சே.. கொஞ்சம் ஓய்வெடுத்துப் போகக்கூடாதா’ என்று ஆவினன்குடி பக்கமாகத் திருப்பி விடுகிறார். அத்தோடு இடும்பனுக்கத் தெரியாமல் தான் வைத்திருந்த மொபைல் ஜாமரை இயக்க, இடும்பனுடன் அகத்தியருக்கு இருந்த தொடர்பு அறுந்து போனது.
அகத்தியரின் வாட்சாப்பு தொல்லை இல்லாத நிம்மதியில் ஆவினன்குடியில் வந்து களைப்பு தீர தூக்கம் போட்டுவிட்டு, சரவணப் பொய்கையில் முகம் கழுவி வந்து பார்க்கையில் என்பீல்டையும் காணோம். அதில் வந்தவரையும் காணோம். ஜாம் அகி இருந்த வாட்சாப் செய்திகள் எல்லாம் இடும்பன் மொபைலில் வந்து கொட்டின.
‘என்ன தவறு செய்துவிட்டேன். சரி சீக்கிரம் கிளம்புவோம்’ என்று மலையைத் தூக்க, இடும்பனால் முடியவில்லை. திரும்ப… முடியலை. திரும்ப முடியலை..
ஒரு ஏர் இந்தியா காரனோ, நேசனல் பர்மிட் லாரியோ ஓடியிருந்தா எவ்வளோ நல்லா இருந்திருக்கும். இதென்ன சோதனை என்று பார்க்கையில் ஒரு மலை மீது ஒரு கோமணம் கட்டிய சிறுவன் உட்கார்ந்திருப்பதைப் பார்க்கிறான்.
‘இவனா… இருக்காது.. சரி ஒருவேளை இருந்துவிட்டால்?’
‘தம்பி கொஞ்சம் இறங்கறியா. நான் மலையைத் தூக்கனும்’ என்று என்று அதட்டினார் இடும்பன்.
‘என்னை அதட்டறியா. ரெண்டு மலையைத் தூக்கற உனக்கு என்னை வெச்சு தூக்க முடியலையே.’ என்று நக்கலடிக்க, கடுப்பாகி ஒரு கலகலப்பு ஆகிவிடுகிறது. இடும்பன் அந்த கோவணாண்டியைப் பிடித்து நையப் புடைக்க முயல, நடந்ததோ வேறு, இடும்பன் சண்டையில் தோற்றுவிடுகிறான். ‘நான்தான் ஜெயித்தேன். என்ன பண்ணலாம்கிற’ என்கிறான் முருகன் வடிவான கோவணாண்டி.
‘அப்பனே நீயா..’
சீர்வளர் பசுந்தோகை மயிலான்,- வள்ளி
செவ்விதழ் அலாதினிய தெள்ளமுதும் அயிலான்,
போர்வளர் தடங்கைஉறும் அயிலான் – விமல
பொன்னடியை இன்னலற உன்னுதல்செய் வாமே.
குஞ்சர வணங்கு ஆவல் வீடா – தபடி
கொஞ்சிமரு வும்சரச ரஞ்சிதவி சேடா!
பைஞ்சர வணம்காவல் வீடா – வளரும்
பாலன்என மாலையொடு காலைநினை வாமே.
வல்அவுணர் வழியாதும் விட்டு, – வெருள
வன்சமர்செய் கந்தனிடம் வழியடிமைப் பட்டு
நல்லஉணர் வழியாது மட்டு – மிஞ்சு
ஞானபர மானந்த மோனம் அடை வாமே.
ஒருதந்த மாதங்க முகத்தான், – மகிழ
உத்தம கனிட்டன்என உற்றிடு மகத்தான்,
வருதந்த மாதங்க முகத்தான் – எவரும்
வாழ்த்துகுக நாயகனை ஏத்துதல்செய் வாமே.
ஐ டியூன்சில் பரவிக் கிடந்த காவடிச்சிந்து பாடல்கள் தானாக பாட, இடும்பன் முருகனிடம் வரம் பெற்றார். நான் இரு மலைகளைத் தூக்கி வந்தது போல உன்னை வழிபடுபவருக்கு முருகன் எல்லா வரங்களையும் அருளவேண்டும் என்று வேண்டிக் கொண்டான். காவடி பிறந்தது. சுமை மறக்க காவடிச் சிந்துவும் பிறந்தது.
‘Sorry sir, there is a scope change in your project’ என்று தெண்டபாணி அகத்தியருக்குக்கு டுவிட்டரில் செய்தி தர, லொகேஷன் பழநி என்று இருந்தது.

—-
தைப்பூச சிறப்பு பதிவு
நன்றி – http://www.chennailibrary.com/mis/kavadichindhu.html
வளர்க பாரதம்