நிகழ்வுகள்

இந்திய ஜப்பானிய கூட்டுப் பயிற்சி


Malabar Exercise:

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் கடற்படைகளுக்கிடையேயான முத்தரப்பு கடற்படை ஒத்திகை Exercise Malabar எனப்படுகிறது. இந்தியா மற்றும் அமெரிக்கா மட்டும் இந்தியக் கடல் பகுதியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இந்தப் பயிற்சியில் 2015ல் ஜப்பானும் கலந்து கொண்டுள்ளது.

INS Shakti replenishing USS Carl Vinson
அமேரிக்கக் கப்பலுக்கு எரிபொருள் ஏற்றும் இந்தியக் கப்பல் (படம் விக்கி)
1992ல் தொடங்கப்பட்ட இந்தப் பயிற்சியில் சில சமயங்களில் ஆஸ்திரேலியாவும் சிங்கப்பூரும் கலந்து கொண்டுள்ளன. Malabar 2009, 2011, 2014 ஆகியவை ஜப்பானுடன் இணைந்து செயல்படுத்தியிருந்தாலும், அவை அனைத்தும் ஜப்பானிய கடலிலேயே நடைபெற்றன.  இத்தணைக்கும் அந்த சமயத்தில் இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. இலங்கையில் சீனா வலுவான உறவு கொண்டிருந்தது. 2015 அக்டோபரிலிருந்துதான் ஜப்பான் இந்தப் பயிற்சியில் நிலையான பங்குதாரராகச் சேர்ந்தது.

இந்தியாவின் ‘கிழக்கைப் பார்’ கொள்கையும், ஜப்பானின் ‘தென்சீனக் கடல் சுதந்திரமும்’ மற்றும் அமெரிக்காவின் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் மறுசமநிலைக் கொள்கையும் ஓரிடத்தில் குவிந்து இந்தப் பயிற்சியை நடத்தி உள்ளதாகப் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

மலபார் பயிற்சி சீனாவைக் குறிவைத்து நடத்தப்பட்டதல் என்று ஒரு அமெரிக்க கடற்படை உயர் அதிகாரி கூறியிருந்தாலும் பெய்ஜிங்-குக்கு அதில் எந்த சந்தேகமும் எழ வேண்டிய அவசியம் இல்லை.

Sahyog-Kaijin:

மலபார் பயிற்சி முடிந்த 3 மாதத்திலேயே அடுத்த பயிற்சி ஜப்பான் மற்றும் இந்தியா இடையே நடந்துள்ளது. பொங்கலுக்கு சென்னை வர்ணக் கோலம் போட்டுக் கொண்டிருந்த போது கடலுக்கு வர்ணம் பூசின அணி வகுத்து வந்த கடற்பாதுகாப்பு கப்பல்களும், சீறிப் பறந்து வந்த ஹெலிகாப்டர்களும். ஜப்பானிய மற்றும் இந்திய துருப்புகளுக்கிடையேயான ஒருங்கிணைப்புப் பயிற்சியாக இது கருதப்பட்டது.

Sahyog-Kaijin. Photo (c) The HIndu
Sahyog-Kaijin. Photo (c) The HIndu

பின்னர் பத்திரிகையாளர்களை இந்திய துணை அட்மிரல் பிஷ்த் மற்றும் ஜப்பானிய துணை அட்மிரல் ஹனா மீஷு ஆகியோர் சந்திதனர். ஹனா தமது கூட்டு ஒத்திகையில் தமது முழு திருப்தியைத் தெரிவித்தார். என்றாலும் தென்சீனக் கடல் பற்றிய கேள்விகளுக்கு இருவருமே நேரடியாக பதிலளிக்கத் தவிர்த்துவிட்டதாகத் தெரிகிறது.

இவ்விரு பயிற்சிகளும் அமெரிக்காவின் சீனக் கட்டுப்பாட்டுக் கொள்கையின் கீழ் வருகிறது என்று யாராவது சொன்னால் அதில் உண்மை உள்ளதா என்று நமக்குத் தெரியாது.

இதெல்லாம் எங்க கொண்டு போய் சேர்க்குமோ?

ஆசியாவில் சீனா பற்றவைத்த புகை படர்ந்து கொண்டே இருக்கிறது. சுற்றி உள்ள அவ்வளவு நாடுகளுடனும் வாய்க்கால் தகறாரு. அதனால் அதைச் சுற்றி உள்ள நாடுகள் ஓரணியில் திரள வாய்ப்புகள் அதிகமானது. அது அமெரிக்காவிற்கு வேலையை எளிதாகவும் ஆக்கியது.

கடல் நடமாட்ட சுதந்திரம் (FoN – Freedom of Navigation) என்கிற செயல்பாட்டின் கீழ் தென்சீனக் கடலின் ஒவ்வொரு சீனப் பகுதியிலிருந்தும் 12 நாட்டிகல் தொலைவில் ஒரு போர் கப்பலை நீந்தச் செய்கிறது அமெரிக்கா.

சமீபத்தில் தென்சீனக் கடலில் மண்ணைக் கொட்டி ரொப்பி ஒரு ஏர் ஸ்ட்ரிப்களைக் கட்டி வைத்துள்ளதை அறிவீர்கள். அந்தத் தீவின் மேல் ஒரு அமெரிக்க விமானம் பறந்ததற்கு சீனாக் காரன் தையா தக்கா என்று குதிப்பதையும் படித்திருப்பீர்கள்.

China builds military airstrip on disputed Woody Island Picture (c) http://newsandupdates.com

அதே பகுதியில் அதிகரிக்கும் சீன நடமாட்டத்தை எதிர்த்து குரல் கொடுக்கிறது ஜப்பான். போதாக்குறைக்கு சென்காகு மற்றும் டயாயு தீவுகளிலும் ஜப்பானுக்கு சீனாவின் கழுத்தறுப்பு தொடர்கிறது

ஆனால் அணி சேருவது என்பது கொஞ்சம் சங்கடத்திற்கிடமான செயல். அதை இந்தியா உணர்ந்தே எச்சரிக்கையாக இருக்கும் என்று நம்புவோமாக.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s