போன வருடம் மியான்மர் தேர்தல் முடிந்தது. போன மாதம் தாய்வான் தேர்தல் முடிந்தது. ஆசியாவின் இந்த முக்கியமான தேர்தல்கள் உங்களைப்போன்ற உலகப் பார்வையாளர்களின் கவனத்தை ஈரத்துள்ளது. உங்களைப் போலவே நானும் ஆர்வமாக இருந்தேன்.
பிள்ளையார் சுழி
தாய்வான் தேர்தலில் எதிர் கட்சிக்கான முதல் பெரிய வெற்றி இது. ஒட்டு மொத்த ஸ்வீப்!
மியான்மர் தேர்தலில் 60களில் ராணுவ ஆட்சி கைக்குப் போன பிறகு முதன் முறையாக ஒரு ஜனநாயக அரசு நடந்துள்ளது.
பெரியண்ணன்
சீனா என்கிற மிரட்டல் நிழலில் தாய்வான் உள்ளது.
இராணுவம் என்கிற அரட்டல் நிழலில் மியான்மர் உள்ளது.
ஸ்வீப்!
முன்னர் ஆளும் கட்சியாக இருந்த இருந்த சீன ஆதரவுக் கட்சி தாய்வானில மண்ணைக் கவ்வியுள்ளது.
ஆப் பாயில் ஜனநாயகத்தை நடத்திய மியான்மர் கம்யூனிச கட்சி மண்ணைக் கவ்வியுள்ளது
மகளிர் மட்டும்!
தாய்வானில் ஸாய் இங்-வென்
மியான்மரில் சூ கி
2016ல் ஆசிய மக்களாட்சியை இரு பெண்மணிகளும் துவக்கி வைத்துள்ளனர். இருவருமே அரசியல் அனுபவம் பெற்றவர்கள். (நம்ப ஊர் ‘காந்தி’ குடும்பம் போல் இல்லாமல்).
பிச்சிடுவேன் பிச்சு
சுதந்திரமா. கனவு காணாதே. கண்ணா முழியத் தோண்டிடுவேன் என்று தாய்வானை எச்சரிக்கிறது சீனா. தாய்வான் முழுக்க முழுக்க எங்கள் உள்நாட்டுப் பிரச்சினை என்கிறது.
எந்த ஒரு அரசியல் மாற்றத்தையும் நிர்ணயிக்கப்போகும் 25 சத இடங்களை நானே வைத்துக்கொள்வேன். வெளிஉறவு, எல்லைப் பாதுகாப்பு, இராணுவத்துக்கு அமைச்சரை நியமிக்க விடமாட்டேன். எப்பவேணா ஆட்சியைக் கலைப்பேன் என்று மிரட்டுகிறது மியான்மர் இராணுவம்.
சவால்
மிரட்டும் சீனா, வேலையில்லாத் திண்டாட்டம், தன் பொருளாதாரத்தில் சீனாவின் பங்கு, அதைப் பாதிக்காத மக்களாட்சி சீர்திருத்தம் என்று ஸாய்-க்கு தாய்வானில் நிறைய வேலைகள் காத்துள்ளன.
இனவெறி தாக்குதல்கள், தன்னாட்சி கூவல்கள், எதிர்பார்க்கப்படும் மெதுவான பொருளாதார வளர்ச்சி, அனுபவமே இல்லாத அமைச்சர்கள் என்று கூடை நிறைய பிரச்சினைகள் சூ கி-க்கு.
இரு நாடுகளிலும் பதவியேற்புக்குப்பின் நிலநடுக்கம் வந்தது!!!
முக்கியமான ஒற்றுமை
இந்த இரண்டு நாடுகளுக்குமே நான் போனதில்லை!!!
இன்னுமொரு பதிவில் சந்திப்போம் நண்பர்களே. வளர்க பாரதம்.