“அவமானம்! அது என்ன அவமானம்? அவமானம்!”
“அவமானம்! இந்தக் கால இளைஞர்கள் யோசிக்கும் விதமே கோணலா இருக்கு. அவமானம்கிற கத்தியை எடுத்துக்கிட்டு உங்களை நீங்களே கொலை செய்துக்கறீங்க. என்ன அவமானம்? பரீட்சையில பெயிலாயிட்டா அவமானம்! வேலை கிடைக்காவிட்டா அவமானம்! கல்யாணம் ஆகலைன்னா அவமானம்! நண்பர்கள் கேலி செய்தா அவமானம்! கணவன் தள்ளி வைச்சா அவமானம்! மை காட்!” அவன் உள்ளங்கையை கோபத்துடன் மடக்கிக் கொண்டான்
-ஹரிகிருஷ்ணா
சொப்பன சுந்தரி – யத்தனபூடி சுலோசனா ராணி
மொழிமாற்றம் – கௌரி கிருபானந்தன்
வானவில் புத்தகாலயம் – முதல்பதிப்பு செப் 2015
NLB முன்பதிவு – Coppan̲acuntari / Yattan̲apūṭi Culōcan̲ārāṇi.சொப்பனசுந்தரி / யத்தனபூடி சுலோசனாராணி.
கன்னிமாரா முன்பதிவு : காணோம்
கதைச் சுருக்கம் பின் அட்டையிலேயே உள்ளது. கீழே கொடுத்துள்ளேன். தேவைப்படுவோர் எடுத்துக்கொள்க.
தொடர்கதை டைப் நாவல். மிகவும் ஏழ்மையான நிலையில் விவரிக்கப்படும் நிகழ்வுகள், எதையும் பாராமல் ஒருவன் தலையில் கட்டிவிட்டால் போதும் என்று ‘பழகவிடப்படும்’ மேனகா, அதன் மூலமான மான அவமானப் பிரச்சினைகள் என்று போகிறது (சென்னையில் கதை நடக்கிறது என்கிறார்கள். குறைந்தபட்சம் ரேசன் கார்டு கூட இல்லாமல் அரிசிக்கு அவதிப்படுகிறார்கள்!). நாவலின் முதலில் இருந்து கடைசி வரை காரம் குறையாமல் வந்துள்ளாள் மேனகா.
ஒருவரின் நேர்மையை சோதிக்கவேண்டுமானால் இரு நிலைகளில அவரை வைக்கவேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. தரித்திரமான ஏழ்மைத்தனம், கொழிக்கும் பணக்காரத்தனம். அதிலிருந்து மீண்டு வருபவர்கள்தான் மேனகாக்கள் என்று நாவல் சொல்கிறது.
பெண் மையப்படுத்தப்பட்ட நாவலாக இருந்தும் நம்பிக்கையான ஆண்கள் வருகிறார்கள் – ஹரிகிருஷ்ணா, ராமநாதன், நாகலிங்கம். ஆனாலும் நாவலின் முக்கிய சில நிகழ்வுகள் நாடகத்தனமாக உள்ளதை மன்னித்துவிட்டுத் தொடரலாம்.
வாழ்க்கையை உணர்த்த சிலர் இந்த நாவலில் இருக்கிறார்கள்.
பாட்டி மங்களம் – எப்படியாவது பேத்திகளுக்குத் திருமணம் முடித்துவிடவேண்டும் என்பதற்காக இவள் செய்யும் ‘அல்பாயிசு’ கொண்ட முயற்சிகள், இறுதி வரை மேனகாவிற்கு அவள் தரும் ஆதரவு
ஹரிகிருஷ்ணா – ரேகா பிரச்சினைக்கான காரணங்கள் கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்டு இருக்கலாம். ஆனால் வெவ்வேறு காரணங்களுக்காக சில குடும்பங்கள் இன்றும் அப்படித்தான் உள்ளன. Soft spoken and well paid ஆண்கள் பலர் குடும்ப வன்முறைக்கு ஆட்படுத்தப்பட்டு வருவது 2016ஆன இந்த ஆண்டுகளில் நிஜம். அது ஒரு நிரந்தர இருள் உலகம். வெளிவருவது என்பதற்காக மனம் நிறைய பொறுமையும், பர்ஸ் நிறைய பணமும் தேவைப்படுகிறது (மேனகா காந்திகளுக்குத்தான் புரியாது!!)
தங்கை மாதவி, பலராமன் – கிட்டத்தட்ட சாருண்ணி வகையைச் சேர்ந்து கொண்டு, நிரந்தரமாக உழைப்பினையும் பணத்தையும் சுரண்டிவிட்டு, வேண்டியது கிடைத்ததும் துண்டை உதறி தோளில் சென்றுவிடுவது
அம்மா ரஞ்சனி – ‘பைத்தியக்கார அம்மா’ என்று இரு முறை திட்டுகிறாள் மேனகா. நான் கூட வாசிக்கும்போதே ஓரிடத்தில் கெட்டவார்த்தை சொல்லியும் திட்டிவிட்டேன்.
தெலுகு மொழிமாற்றம் என்றாலும் சரளமாக நம்மை அலேக்காகத் தூக்கிச் சென்றுவிடுகிறது கௌரி கிருபானந்தனின் எழுத்து நடை. இது போன்ற பல கதைகளுக்கு நாம் பழக்கப்பட்டு விட்டதால் இந்த நூலை வாங்குவேனா என்று தெரியலை. ஆனால் நூலகத்தில் படிப்பதற்குத் தடை ஏதும் இல்லை.
இன்னுமொரு பதிவில் சந்திப்போம் நண்பர்களே
வளர்க பாரதம்
யத்தனபூடி சுலோசனா ராணி அவர்களின் “சொப்பன சுந்தரி” பற்றிய விரிவான கட்டுரையைக் கண்டேன். மிக்க மகிழ்ச்சி. அட்டைப் படம் வேறு விதமாக இருந்திருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும்.
எழுத்தாளருக்கு வணக்கம். இக்காலை வேளையில் தங்கள் பின்னூட்டத்தைப் பார்ப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. அட்டைப்படம் பற்றி சொன்னீர்கள். கடைசி அட்டையின் தலைப்பில் எழுத்துப் பிழையும் உள்ளது. சுந்தரியை சுந்திரி ஆக்கியிருக்கிறார்கள் :-). எங்களைப் போன்ற கடைநிலை வாசககர்களிடம் தொடர்ந்து உரையாடி ஊக்குவித்துக் கொண்டு இருங்கள். வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.