புஷ்பாஞ்சலி | யத்தனபூடி சுலோசனாராணி


"யாரிடமாவது வெறுமே பெற்றுக் கொண்டால்தான் தவறு. திருடினால் குற்றம். அநியாயமாக சம்பாதித்தால் பாவம். பணம் சம்பாதிப்பதற்காக நம் குணத்தை இழந்தால்தான் நாம் வெட்கப் படணுமே தவிர உழைத்துப் பிழைப்பதால் நாம் யாருக்குமே தலை வணங்கத் தேவையில்லை என்பாள் எங்க அக்கா" -வாசு புஷ்பாஞ்சலி - திருமதி யத்தனபூடி சுலோசனாராணி மொழிமாற்றம் – கௌரி கிருபானந்தன் (தெலுங்கு Vijeta - విజేత) பதிப்பு வானவில் புத்தகாலயம் – முதல்பதிப்பு செப் 2015 NLB முன்பதிவு – Puṣpāñcali / [...]

ஜனநாயகக் கடன் – மியான்மர்


Update: 2016 March 23 6:20 PM. Suu Kyi would take Foreign Affairs, President's Office, Education and Energy ministries. https://twitter.com/STcom/status/712259673806667776 ‘ம்ஹூம். அவன் அதுக்கெல்லாம் சரிப்படமாட்டான்’. வாஜ்பேயி வந்தாரு. கிழக்கைப் பாருன்னாரு. ‘நீ வேலையைப் பாரு’ அப்டின்னு கீழ இறக்கி உட்டாங்க. பின்னே ஒரு பத்தாண்டு மன்மோகன் அரசில கிழக்கைப் பார்த்தால், ‘சுசுவா’ ‘சுசுவா’ என்று கண்ணத்தில் போட்டுக்கொள்வதோடு சரி. கிழக்கைப் பார் என்றால் பாரம்பரிய இந்தியாவின் பார்வை சிங்கப்பூரைத் தாண்டாது. [...]

பர்மா நம்ப பயடா.. பேசும்போது காது ஆடிச்சி பாத்தியா


“மன்னர் 'லெவன்' பிங் அவர்களே, தங்களைக் காண ஒற்றர் வாத கோடாரி வந்துள்ளார்.” “வரச் சொல்” சீன பங்குச் சந்தை வரைபடத்தைப் பார்த்துக் கொண்டிருந்த ஜின் பிங் காவலாளியின் முகத்தைப் பார்க்காமலே பதில் சொன்னார். ஜின்- “வாய்யா கோடாரி, என்ன விசேசம்?” கோடாரி - “விசேசம் இருந்தால் ஏன் வரப்போறேன் தலிவரே? இந்தப் பிக்காளி பயபுள்ளைக பன்ற அக்குருமம் நாளுக்கு நாள் ஜாஸ்தி ஆயிட்டே போகிறதே. அதைத்தான் காதில போட்டுட்டுப் போகலாம்னு பார்த்தேன்” ஜின் - “நமக்கு [...]

ரகுபதி ஈ – மியான்மர் கூத்து – 1


இன்று காலையில் எழுந்து பில்டர் காப்பி போட்டுக் குடித்துக் கொண்டிருந்த பெரியவர் யூ தின் க்யாவ் ஐ, மியான்மர் தனது மக்கள் ஜனாதிபதியாக ஏற்றுக்கொண்டுள்ளது.  'மியான்மரின் ஓ.பன்னீர் செல்வம் வாழ்க' என்கிற கோஷம் முழங்க உலக நாடுகளும் இதனை ஏற்றுக்கொண்டுள்ளன. தின் கியாவ், சூ கி யோடு எந்த பள்ளியில் படித்தார், எந்த கார் ஓட்டினார் என்பதெல்லாம் நமக்குத் தேவையில்லாத விசியம். நமக்கு இது எப்படி இருக்கும் என்பதே எனக்கு ஆர்வமாக இருக்கிறது. மக்களாட்சி முன்னேற்றக் கூட்டணியின் [...]

ஆலாஹாவின் பெண் மக்கள் | சாரா ஜோசஃப்


“கஞ்சி அண்டா என்ன ஓடியா போயிடும்? வெறி புடிச்ச மூதேவி” என்றாள் மார்த்தா டீச்சர். “பசி வெறி, இதுங்க ஜென்ப சுபாவம்!” அம்மிணியம்மா டீச்சர் சொன்னாள். பின்னர் அவர்களிருவரும் குரோதத்துடன் ஆன்னியை வெறித்தார்கள். “கையை சுத்தமா கழுவிக்க மார்த்தா, கோக்காஞ்சறவுலேர்ந்து வர்ற பிசாசுகள்” அம்மிணியம்மா டீச்சர் உபதேசித்தாள். ஆலாஹாவின் பெண் மக்கள் - சாரா ஜோசஃப் தமிழ் மொழி மாற்றம் - நிர்மால்யா (மூலம் - மலையாளம் - ആലാഹയുടെ പെണ്മക്കള്‍) பதிப்பு - சாகித்திய அகாதெமி, [...]