இந்தியா

Kanhaiya Kumar FIR No. 110/2016 – பாகம் 1


இந்தப் பதிவை எழுதக் காரணம், மீடியாக்களும் அரசியல் கட்சிகளும் உண்மை மீது ஒரு திரை எழுப்புவதாக நான் உணர்கிறேன். எனவே பிணை மனுவின் மீதான நீதிபதியின் தீர்ப்பின் முக்கிய அம்சங்களை தமிழில் மொழி மாற்றியிருக்கிறேன் (நான் புரிந்து கொண்ட வகையில்). என்னுடைய உணர்வுகள் சார்ந்து எதையும் எழுதிவிடாமல் இருக்க முயன்றிருக்கிறேன்.

இனி தீர்ப்பில் என்ன எழுதியிருக்கிறது என்று பார்ப்போம்.

23 பக்கங்கள்தான். யாரும் எளிதாக படித்துவிடலாம் http://www.scribd.com/doc/301714554/Delhi-High-Court-s-Bail-Order-for-JNU-President-Kanhaiya

என்ன பண்ணப்போகிறீர்கள் என்று  JNU படிவத்தில் கேட்டதற்கு இவர்கள் சொன்ன பதில் – ‘செய்யுள் வாசிப்பு – தபால் ஆபீஸ் இல்லாத நாடு’ (Poetry Reading – The Country Without A Post Office)

அனுமதி வாங்கியவர் – உமர் காலீது
அனுமதிக்கப்பட்ட நேரம் – 5 – 7:30PM (Sibal & ASG)

2016 sedition case 4
2016 sedition case 4

***

அஃப்சல் குரு தூக்கிலிடப்பட்டதைக் கண்டிக்கும் நிகழ்வாக இந்த நிகழ்வுக்கான போஸ்டர்கள் ஹாஸ்டல்களில் ஒட்டப்பட்டன. சர்ச்சைக்குரியதாகவும் வளாகத்தின் அமைதிக்கு பங்கம் விளைவிப்பதாகவும் (9ஆம் தேதி அன்று தாமதமாக) அறிந்த JNU நிர்வாகம் அனுமதியை ரத்து செய்தது. பல்கலைப் பாதுகாவலர்களுக்கும் மாணவர் குழுவிற்கும் வாக்குவாதம் வந்திருக்கிறது. உள்ளுர் போலீசுக்குத் தகவல் போயிருக்கிறது. (ASG)

***

தேசத்திற்கெதிரான கோஷங்கள் தடையின்றி முழங்கிக் கொண்டிருந்த நேரத்தில், தேசத்தை ஆதரித்து அடுத்த கோஷ்டியினரால் கோஷங்கள் எழுப்பப் பட்டன. (ASG)
இரு குழுவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. (ASG)
8:30 – 9:00 மணிக்குள் நிலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது (ASG)
பிப்ரவரி 10 – Zee டிவியில் சர்ச்சைக்குரிய அந்த வீடியோ ஒளிபரப்பாகிறது. அந்த அலைவரிசையிடமிருந்து எடிட் செய்யாத வீடியோ பெறப்பட்டு 124-A/120-B/34/147/149 IPC படி வசந்த் குஜ் காவல் நிலையத்தில் FIR பதியப்படுகிறது.

***
போட்டோக்களில் உள்ள சிலர் முகமூடி அணிந்துள்ளனர். அவர்கள் யாரென்று இன்னமும் உறுதிப்படவில்லை. (State Report)
அஃப்சல் குருவின் ஒளிப்படம் உள்ள பதாகைகளைத் தாங்கிய மாணவர்கள் படம் கொடுக்கப்பட்டுள்ளது. (State Report)
Feb 9 கூட்டத்திற்குத் தயாரிக்கப்பட்ட போஸ்டரின் தலைப்பு Against the judicial killing of Afzal
Guru & Maqbool Bhatt என்று உள்ளது

2016 sedition case 1
2016 sedition case 1

***

zee டிவி காட்டிய வீடியோவில் உள்ள ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்கிற கோஷம், அங்கு எழுப்பப்பட்ட கோஷங்களாக State ஆல் பட்டியலிடப்பட்ட கோஷங்களில் இல்லை.

9ஆம் தேதி மேற்சொன்ன பிரச்சினைக்குப் பிறகு 11ஆம் தேதி கண்ணையா உரையாற்றிய போது இந்திய அரசியல் அதிகாரத்தில் தனக்கு நம்பிக்கை உள்ளது என்கிறார். தவிர JNU மற்றும் இந்தியாவை உடைக்க முயலும் சக்திகளைப் பற்றித்தான் பேசுகிறார். (சிபல்)

***
மனுதாரர் (கண்ணையா)  இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தற்கும் நடத்தியதற்குமான சாட்சியங்கள் பதியப்பட்டுள்ளன.

அனுமதி கோரிய படிவத்தில் நான் கையெழுத்துப் போடவில்லை என்பதால் நான் குற்றவாளி அல்ல என்று ஆகாது (ASG)
11ஆம் தேதி கண்ணையா பேசிய உரை என்பது 9ஆம் தேதி நடந்த குழப்பத்திற்காக சட்டத்தின் கைகளிலில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கானது. (ASG)
பெயில்ல விட்டுவிடலாம் – Rahul Mehra, Standing Counsel (Criminal) for Government of  NCT of Delhi

***
JNU வில் போடப்பட்ட தேசவிரோத கோஷங்கள் –

2016 sedition case 2
2016 sedition case 2
 • அப்சல் குரு, மக்பூல் பட் வாழ்க
 • இந்திய முழுதாக ஒழியும் வரை போர் தொடரட்டும் போர் தொடரட்டும்
 • போ இந்தியா திரும்பிப் போ
 • இந்திய ஆர்மி – ஒழிக
 • இந்தியா துண்டு துண்டாக சிதறும், இன்ஷா அல்லா இன்ஷா அல்லா
 • அப்சல் கொலையை பொறுத்துக் கொள்ள மாட்டேன் பொறுத்துக் கொள்ள மாட்டேன்
 • கண்டிப்பாக  சுய சுதந்திரம் கொடுக்கவேண்டும்

***

மனுதாரர் JNU மாணவர் யூனியன் தலைவர். தான் அங்கு இருந்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.  போட்டோக்களும் அவர் அங்கே இருந்ததை உறுதிப்படுத்தி உள்ளன.
நடந்து கொண்டிருந்த தேச விரோத செயல்களில் கலந்து கொள்ளச் சென்றாரா,  இரு பார்ட்டிகளுக்கிடையே பிரச்சினை ஏற்படுவதைத் தடுக்க சென்றாரா என்பதில்தான் மாற்றுக்கருத்துகள் நிலவுகின்றன. சாட்சிகளின் படி மனுதாரர் அந்த நிகழ்வுகளில் முழுமையாக பங்கெடுத்துக்கொண்டுதான் இருந்திருக்கிறார்.

2016 sedition case 3
2016 sedition case 3

இந்திய அரசியலமைப்புக்கு ஒத்துப்போவதாகவும், இந்தியாவை உடைக்கப் பாடுபடும் சக்திகள் பற்றியும் 11ஆம் தேதி பேசுவதன் மூலம், மனுதாரர் தனக்கு ஒரு தடுப்பை ஏற்படுத்திக் கொள்கிறார்.

இந்தியா உடையக்கூடாது என்று மனதார பேசினாரா, 9 ஆம் தேதி நடந்த பிரச்சினையிலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ள ஒரு பாதுகாப்பு கவசத்தை ஏற்படுத்த பேசினாரா என்பதையெல்லாம் இந்த தருணத்தில் கோர்ட் ஆராய முடியாது

***
தேசவிரோத சட்டம் 124ஏ என்ன சொல்கிறது?
யாரொருவர் பேச்சு அல்லது எழுத்து வார்த்தைகளாலோ, அல்லது குறியீடுகளாலோ, அல்லது பார்வையில் படக்கூடியவைகளாலோ அல்லது சட்டத்தால் அமைக்கப்பட்டுள்ள இந்திய அரசின் மீது வெறுப்பையோ, மறுப்பையோ ஏற்படுத்தினாலோ அல்லது ஏற்படுத்த முயன்றாலோ,
– ஆயுள் தண்டனை (அபராதமும் சேர்த்து விதிக்கப்படலாம்)
– 3 வருட சிறை தண்டனை (அபராதமும் சேர்த்து விதிக்கப்படலாம்)
– அபராதம்

இவர் எந்த வகையில் வருவார் என்பது விசாரணையின் முடிவைப் பொருத்தது.

State பட்டியல் தந்துள்ள ஆவணங்களின் படி, மனுதாரர் சிறையில் இருக்கவேண்டியவரே.

***
இந்த பிணை மனுவைப் பார்க்கும்போது, நமது எல்லைகளை மிலிட்டரி மற்றும் பாரா மிலிட்டரி படைகள் காப்பதால்தான், இவர்களுக்கு பேச்சுரிமையை அனுபவிக்க முடிகிறது என்பதையும், கவனத்தில் கொண்டாகவேண்டி உள்ளது.

உலகத்தின் கடினமான பகுதிகளாக விளங்கும் சியாச்சின் பனி ஆறுகளிலும், கட்ச் வளைகுடாப் பகுதிகளிலும் நமது படைகள் நமக்காக காவல் காக்கின்றன.

எந்தத் தவறுமே செய்யவில்லை. தான் செய்த எதுவுமே நீதிக்குப் புறம்பானது இல்லை என்று மனுதாரர் குறிப்பிடுகிறார். (கண்ணையாவின் பெயில் பெட்டிசனிலிருந்து மேற்கோள் காட்டப்பட்டுள்ளது) நமது படைகள் உலகின் மிக உயரமான போர் மையங்களிலிருந்து, ஆக்ஸிஜன் கூட கிடைக்காமல் அவதிப்பட்டு காவல் காப்பதால்தான், இப்படிப்பட்ட கோஷங்களை எழுப்பும் சுதந்திரத்தை இவர்களால் உணரமுடிகிறது, பாதுகாப்பாக ஒரு பல்கலை வளாகத்தினுள் இருக்க முடிகிறது என்று இவர்கள் உணரவில்லை.

அப்சல் குரு, மக்பூல் பட்டின் படங்களை நெஞ்சில் தொங்கவிட்டு, அவர்களை தியாகிகளாக்கி, தேசவிரோத கோஷங்களைப் போடும் இவர்கள்
படைகள் இருக்கும் கடினமாக சீதோஷன சூழலில்  ஒரு மணிநேரம் கூட இவர்கள் தாக்குப் பிடிக்க மாட்டார்கள்.

எழுப்பப்பட்ட கோஷத்தின் தன்மைகள், நாட்டைப் பாதுகாக்கப் போய், சவப் பெட்டியில் திரும்பி வந்த தியாகிகளின் குடும்பத்திற்கு மனச்சோர்வை ஏற்படுத்தியிருக்கிறது.

***
Part-III under Article 19(1)(a)ன் படி மனுதாரர் பேச்சுரிமையைக் கோருகிறார். Part-IV under Article 51Aன் படி ஒவ்வொரு குடிமகனின் கடமை என்பது உரிமைகளையும் கடமைகளையும் ஒரே நாணயத்தின் இரு புறங்களாக வைத்தே வரையறுக்கப்பட்டுள்ளன என்பதை அவருக்கு நியாபகப்படுத்த வேண்டி உள்ளது.

***
அறிவாளிகளின் மையம் என்று அறியப்படுகிற ஜவஹர்லால் பல்கலைக் கழகத்தின் சர்வதேச பள்ளியில் Ph.D பயிலும் அறிவாளிகள் வர்க்கத்தைச் சேர்ந்தவர் மனுதாரர்.  அவருக்கு எந்த விதமான அரசியல் தொடர்போ, கொள்கையோ இருக்கலாம். அதை அவர் தொடர எந்தவிதத் தடையும் இல்லை, அது அரசியலமைப்புச் சட்டத்தில் வரையறைக்குள் இருக்கும் வரை. வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கு இந்தியா ஒரு நல்ல உதாரணம். பேச்சுரிமை என்பது நமது அரசியலமைப்பின் Article 19(2)ன் தேவையான வரையறைக்குட் பட்டது.  ஆவணங்களின் படி, அப்சல் குரு, மக்பூல் பட்டின் படங்களை ஏந்திக்கொண்டு கோஷம் எழுப்பும் இந்த மாணவர் அமைப்பு தனது போராட்டத்தையோ அல்லது உணர்வையோ சுயபரிசோதனை செய்து கொள்ளவேண்டும்.

JNU நிர்வாகமும் இவர்களை நல்வழிப் படுத்தி நாட்டின் வளர்ச்சிக்கும், JNU பல்கலை ஏற்படுத்தப்பட்ட நோக்கம் நிறைவேற்றப்படுவதற்கும் வழி செய்யவேண்டும்.

பாராளுமன்ற தாக்குதலில் குற்றவாளி என்று உறுதிப்படுத்தப்பட்ட அப்சல் குருவின் இறந்த நாளில், கோஷங்களை எழுப்பிய மாணவர்களின் தேசவிரோதக் கொள்கைகளைக் கண்டறிவதுடன் அதைக் கலையவும் வேண்டும். இதே போன்ற இன்னொரு நிகழ்வு நிகழாமல் தடுக்கவேண்டும்.

***
JNUவின் சில மாணவர்கள் ஒருங்கிணைத்து ,நடத்திய நிகழ்வில் எழுப்பிய கோஷங்களில் உள்ள உணர்வுகள், பேச்சுரிமையின் கீழ் பாதுகாக்கப்பட்டது என்று உரிமைக் கோரிக்கை வைக்க முடியாது. இது போன்ற மாணவர்களிடம் காணப்படும் இந்த தொற்று, ஒரு தொற்றுநோயாகப் பரவும் முன்னர் இது கட்டுப்படுத்தப் படவோ குணப்படுத்தப் படவோ வேண்டும்.

Whenever some infection is spread in a limb, effort is made to cure the same by giving antibiotics orally and if that does not work, by following second line of treatment. Sometimes it may require surgical intervention also. However, if the infection results in infecting the limb to the extent that it becomes gangrene, amputation is the only treatment.

முழங்காலில் தொற்று ஏற்பட்டால், மருந்து கொடுத்து குணப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். அது வேலை செய்யவில்லை என்றால் இரண்டாவதாக அடுத்த மருத்துவம் செய்யவேண்டும்.  ஒரு சமயம் அறுவை சிகிச்சை கூட தேவைப்படலாம். அதே சமயத்தில் கால் அழுகும் நிலை வந்துவிட்டால் ஊனம்தான் ஒரே மருத்துவம்.

***
அவருடைய முக்கியப் பணிகளைச் செய்வதற்கு ஏதுவாக நான் பழமையான சிகிச்சை முறையைச் செய்ய விரும்புகிறேன். 6 மாதம் பிணையில் விடுவிக்கிறேன்.

பிணைக்கு பணப் பாதுகாப்பாக எவ்வளவு நிர்ணயிப்பது என்கிற கேள்வி எழுகிறது. 11அம் தேதி உரையாற்றிய போது, மனுதாரர் தன் தாய் அங்கன்வாடியில் 3000 மாத சம்பளத்திற்கு வேலை பார்ப்பதாக சொன்னார். இதை கவனத்தில் கொண்டால், தனிநபர் மற்றும் உறுதிப் பத்திரத்திற்கான தொகை அதிகமாக இருந்தால் அவரால் பிணையைப் பெற இயலாது போகலாம்.

மனுதாரருக்குக் கடடணத்தில் சலுகை தருவதால், தேசவிரோத காரியங்களில் முழுமையாகவோ, மறைமுகமாகவோ அவர் ஈடுபடக்கூடாது. மாணவர் சங்கத் தலைவராக, வளாகத்தினுள் தேச விரோத காரியங்கள் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இவருக்குன் ஜாமீன் கொடுப்பவர் ஆசிரியர்களில் ஒருவராகவோ, மனுதாரரின் உறவினராகவோ இருக்கலாம். அவர் கோர்ட்டின் பார்வைக்கு மனுதாரர் மீது கட்டுப்பாடு செலுத்துவதாகக் காண்பித்தால் மட்டும் போதாது, அவருடைய எண்ணங்கள் மற்றும் சக்தியை உருப்படியான வழிகளில் உபயோகிக்குமாறு மாற்றவேண்டும்.

***

 

தென்னாடுடைய சிவ.. (ம்ம் சொல்லுங்க) சிவன் சொல்றான். நான் செய்யறேன்.. (பிணை கிடைத்த அடுத்த நாள்)
தென்னாடுடைய சிவ.. (ம்ம் சொல்லுங்க) சிவன் சொல்றான். நான் செய்யறேன்.. (பிணை கிடைத்த அடுத்த நாள்)

 

தீர்ப்பைப் பற்றிய என் பார்வை அடுத்த பதிவில் (முடித்துவிடுவேன். அஞ்சற்க!)

வளர்க பாரதம்

Advertisements

8 thoughts on “Kanhaiya Kumar FIR No. 110/2016 – பாகம் 1”

 1. உங்கள் பதிவை முகநூலில் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.
  வாழ்த்துகள்!

  1. நன்றி அம்மா. நம்மால் ஏதும் நடத்தமுடியும் என்று தெரியவில்லை. ஆனாலும் இந்தக் குரல் பதிவு செய்யப்பட்டாகவேண்டும் என்று தோன்றுகிறது.

  2. விளையாட்டைப் பாருங்கள். இப்போதுதான் பார்த்து முடித்தேன். அதற்குள் This video has been removed by the user.
   அருமை.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s