“மன்னர் ‘லெவன்’ பிங் அவர்களே, தங்களைக் காண ஒற்றர் வாத கோடாரி வந்துள்ளார்.”
“வரச் சொல்” சீன பங்குச் சந்தை வரைபடத்தைப் பார்த்துக் கொண்டிருந்த ஜின் பிங் காவலாளியின் முகத்தைப் பார்க்காமலே பதில் சொன்னார்.
ஜின்- “வாய்யா கோடாரி, என்ன விசேசம்?”
கோடாரி – “விசேசம் இருந்தால் ஏன் வரப்போறேன் தலிவரே? இந்தப் பிக்காளி பயபுள்ளைக பன்ற அக்குருமம் நாளுக்கு நாள் ஜாஸ்தி ஆயிட்டே போகிறதே. அதைத்தான் காதில போட்டுட்டுப் போகலாம்னு பார்த்தேன்”
ஜின் – “நமக்கு நிறைய பிக்காளிகள் இருக்காய்ங்க. எந்தப் பிக்காளியைப் பத்திப் பேசற நீயி”
கோடாரி – “பர்மா பத்திதான் சொல்றேன் தலிவரே. நம்ப கண்ட்ரோல்ல இருந்த பயக, இப்ப மேற்குப் பக்கமா சாய்ஞ்சிட்டு இருக்காய்ங்க. த்தான் ஷ்வே பிரசிடெண்டா இருக்கறப்ப, கடைசில இந்தியாவுக்கு சாமி கும்பிடப் போறேன்னு கிசும்பு பண்ணினான். அவனுக்கு அப்புறமா வந்து, இந்த மாசம் பதவி விலகப் போகிற த்தேய்ன் ஸெய்ன் தொடர்ந்து நம்மிடமிருந்து விலகிப் போயிட்டே இருக்கான் தலிவரே. ரிஃபார்ம் பண்றேன் அப்டின்னு கூத்தடிச்சிட்டு இருக்கான். மீடியா மீதான சென்சார்சிப்பைக் குறைத்தான். அரசியல் கைதிகளை விடுவித்தான், ஆங் ஸான் சூ கி உட்பட. 2012 பை எலக்சன்ல சூ கி தலைமையிலான எதிர் கட்சி NLDஐ எலக்சன்ல நிக்க வெச்சான்.”
ஜின் – “மீடியா, எதிர் கட்சி, எலக்சன் இந்த வார்த்தை எல்லாம் கேட்டால் குடலைக் குமட்டுது கோடாரி”

கோடாரி – “அதுக்குள்ளயேவா, இந்தப் பிக்காளிப் பயபுள்ள, இன்னொரு வெவகாரத்தையும் செஞ்சிட்டு இருக்குறான்ங்க. அவிய்ங்க ஊருல மையிட்சோன் அணை கட்டி அதில புனல் மின்சாரம் உற்பத்தி செய்து, `உனக்கு உமி எனக்கு அரிசி’ ன்னு ஒரு அஜ்ஜீஸ்மெண்டுல கரண்டு வாங்கிட்டு இருந்தோம். ‘வெள்ளம் சாஸ்தியா இருக்குது. பர்மாவுக்குக் கரண்டு வரலை. நாம் அதிகமா மின்சாரம் எடுத்துக்கிறோம். சுற்றுப் புறச் சூழல் பாதிக்கப்படுகிறது’ அப்டின்னு பல கரச்சல் பண்ணிட்டு இருந்தாய்ங்க. நீங்களே சொல்லுங்க தலை. ஆப்பிரிக்காவில நாம பண்ணாத அழிச்சாட்டியமா. அவிங்க எல்லாம் எப்புடி காசு வாங்கிட்டு கம்முன்னு இருக்கறாய்ங்க. இந்த பயகளுக்கு மாத்திரம் ஏன் இவ்வளவு சண்டித்தனம்? இந்தத் த்தேய்ன் ஸெய்ன் நம்ப அணை திட்டத்தை நிறுத்திபிட்டான் தலிவரே.”
ஜின் பிங்குக்கு கும்பியோடு சேர்த்து உடலே எரிய ஆரம்பிக்கிறது. மேலும் வெறியேற்றிக் கொள்ள, சூடான சீன டீயை உள்ளே இறக்கிக் கொண்டார்


கோடாரி – “போதாக் குறைக்கு கொக்கான் பகுதி பிரச்சினை வேற நமக்கு எதிரா போயிருச்சு. இந்தியாவோட அருணாச்சல் பிரதேசமும், பர்மாவோட கொக்காங் பிரதேசமும் நம்பளோட பகுதிகள்தானே தலிவரே. பர்மா கம்யூனிஸ்ட் தோழர் கட்சிகளோட சார்பில MNDAA படைகள் ரொம்ப காலமா வாய்ப்பு எதிர்பார்த்திட்டு இருந்தானுக. மித்த புரட்சிப் படைகள் மாதிரியே கடத்தல் செய்து வயிறு கழுவிட்டு இருந்தானுக. அந்தப் பசங்கள ‘கொக்காங் எல்லைப் பாதுகாப்பு படையா, மிலிட்டரிக்குக் கீழ இருங்கடா’ன்னு பர்மா பேசப்போக ரோசம் வந்து பொங்கி, போன வருசம் பிப்ரவரி மாசம் கொக்கான்ல தாக்குதல் நடத்தினாய்ங்க.”

“கிட்டத்தட்ட 40 லேருந்து 50 ஆயிரம் பேரு வீடு வாசல விட்டு சீனா பார்டர் தாண்டி அகதியா போனாங்க. 4500 பேரு மட்டும் பர்மாவோட ஷான் மாநிலத்துக்கு வந்தாய்ங்க. அந்த சமயத்தில அவிய்ங்க கூட சண்டை போடுறேன்னு சொல்லி இந்த பர்மாகாரய்ங்க நம்ப ஊரு கரும்புக் காட்டுல பாம் போட்டு 8 பேரைக் கொன்னு போட்டாய்ங்க. அப்புறமா நாம் மிரட்டப்போக, மன்னிச்சிருங்க சாமின்னு கால்ல விழுந்தாய்ங்க.”
“ஆனா தலிவரே, பர்மா மிலிட்டரி உளவு பார்த்து சொன்ன ரிப்போர்டு வேற மாதிரி இருந்தது. முன்னாள் சீன ராணுவத்தினரை கூலிக்கு வைத்துக்கொண்டு, MNDAA படைகள் ஆதரவு தேடிகிட்டதா சொல்லுது. ஆனா அதெல்லாம் கிடையாது அப்டின்னு இந்தியாவில இருந்து வந்த கற்பூரத்தை அணைச்சி சத்தியம் பண்ணிட்டோம். பின்னால பிரச்சினை ஏதும் வந்தா, அது இந்தியா கற்பூரம், சத்தியம் செல்லாதுன்னு சொல்லிக்கலாம் பாருங்க.”
ஜின் – “ப்ப்ப்பூ….” என்று ஊதிக் கொண்டார்.
ஜின் – “இந்த லட்சணத்தில இந்த சூ கி பொம்பளை வேற அடுத்த மாசம் வரப்போகுது. அவிங்க ஊரு பசங்க அம்புட்டு பயலும் ஒட்டு மொத்தமா இந்த அம்மாவுக்கே ஓட்டு குத்திப்பிட்டாய்ங்க. அந்த அம்மாக் கண்டாலே குமட்டுது கோடாரி. அதென்ன மக்களாட்சி மண்ணாங்கட்டி. 2011க்குப் பிறகு அங்க மேற்கத்திய ஆதிக்கம் அதிகமாயிருக்கு. வெளிநாடுகள் பணம் போட ஆரம்பிச்சிருக்காய்ங்க. அது நமக்கு தலைவலி. நாமதான் முதல்ல அங்க முதலீடு பண்ணியிருக்கோம். இத்தணைக்கும் பர்மா மீதான தடையை அமெரிக்கா நீக்கனும்னு சொன்னதே நாமதான். முதல் அறுவடை நாம செய்யவேண்டாமா. ”

ஜின் – “டோன்ட் ஒரி. எவ்வளவோ ஆடல்களைப் பார்த்திட்டோம். இதையும் பார்ப்போம். இப்ப இருக்கர பர்மா கவுருமெண்டு அவிங்க ஊரு மக்களாட்சி மெம்பருக, ஆய்வாளருக, பத்திரிகையாளருகளை நம்ப ஊருக்கு சமீபத்தில அனுப்பினாய்ங்க. நல்லா வந்து சுத்திப் பாத்தானுக. குளிப்பாட்டி அனுப்பிருக்கோம். ராவ் ஹுய்ஹுவா வை வெச்சி வேணும்கிறத பேசியிருக்கோம். One Belt, One Road திட்டத்தால பர்மாவுக்கு என்ன என்ன போஷாக்கு கிடைக்கும் என்பதை எல்லாம் அவிக மண்டையில ஏத்தி அனுப்பியிருக்கோம்.”

கோடாரி – “அப்பவும், நம்ம திட்டம் வெளிப்படையா இருக்கணும்னு பர்மாக் காரனுக சொல்லியிருக்கானுக தலிவரே. நாம சீனாக் காரங்களுக்கே வெளிப்படையா இருக்கிறதில்ல. இந்தப் பர்மா பதர்களுக்கு நாம ஏன் தாழ்ந்து போகனும்னு கேக்கறேன். உள்ளுர் மக்களுக்கு நன்மை நடக்கனும்னு சொல்றானுக. ஆப்பிரிக்காகாரன் அப்டியா கண்டிசன் போட்டு நம்பள உள்ள விடுறான். அவன் பாட்டுக்கு குடுக்கற பணத்தை வாங்கிட்டு கம்முன்னு, இரும்பு ஈயம் எல்லாத்தையும் நமக்கு அனுப்பி விடலை? இவனுகளுக்கு என்னா? பர்மா காரனுக டூர் வந்த சமயத்தில மைஸ்டோன் டாம் பத்தி பேசினானுக. நம்ப ஆளுக வாயத் தொறக்கல. அதனால புது அரசு அமைஞ்ச பின்னர், இது நல்லபடியா போகுமான்னு தெரியலை. திரும்பவும் பர்மா பத்திரிகையாளர்கள சீனாவுக்கு கூட்டி வந்து, ‘புனல் மின்சாரம்’ என்றால் என்ன என்று கற்றுத்த தந்தால், நம்ப பக்கம் திரும்பினானும் திரும்புவாய்ங்க அப்டின்னு நினைக்கிறேன்.
ஜின் – “பண்ணலாம். ஜாஸ்தி செலவு வராம பார்த்துக்க..” (பங்குச் சந்தை கிராஃபைப் பார்த்துக்கொண்டே முனங்கிக் கொள்கிறார்)
கோடாரி – “நீங்க One Belt, One Road பத்தி பேசறீங்க. அப்பால ஒருத்தன் இருந்திட்டு இந்தியா-பர்மா-தாய்லாந்து முத்தரப்பு சாலைன்னு குறுக்கு சால் ஓட்றான் தலிவரே. மணிப்பூருல அட்டாக் நடந்தா பர்மாவில வெடி வெடிக்கிது.”
ஜின் – “பர்மா நம்ப பயடா.. பேசும்போது காது ஆடிச்சி பாத்தியாலே.. கண்டிப்பா சொல்றேன். அவன் நம்ப சாதிக்காரப் பயதான்”
பிற பதிவுகள் –