புஷ்பாஞ்சலி | யத்தனபூடி சுலோசனாராணி


“யாரிடமாவது வெறுமே பெற்றுக் கொண்டால்தான் தவறு. திருடினால் குற்றம். அநியாயமாக சம்பாதித்தால் பாவம். பணம் சம்பாதிப்பதற்காக நம் குணத்தை இழந்தால்தான் நாம் வெட்கப் படணுமே தவிர உழைத்துப் பிழைப்பதால் நாம் யாருக்குமே தலை வணங்கத் தேவையில்லை என்பாள் எங்க அக்கா”
-வாசு

புஷ்பாஞ்சலி – திருமதி யத்தனபூடி சுலோசனாராணி

எங்க பேட்டை நூலகத்தை மூடிவிட்டார்கள். 4 மாதம் ஆச்சு. பக்கத்து வட்டார நூலகத்தில் சில வாரங்கள் முந்தி சுற்றிக் கொண்டிருந்த பொழுது, புதிய வரவுகள் தட்டில் கிடைத்தது. பக்கத்திலேயே, புஷ்பாஞ்சலி கிடைத்தது. அனேகமாக, இரண்டு நாவலுக்குமே நான்தான் முதல் வாசகன் என்று நினைக்கிறேன். புத்தம் புது காகித மணம்.

wp-1458563111475.jpeg

240 பக்கங்களில் எளிதான தொடர்கதை டைப் நாவல். கடகடவென பக்கங்கள் ஓடிவிடுகின்றன.

கதைச்சுருக்கம் படிப்பவர்கள் கீழே படித்துக் கொள்ளலாம்.

புஷ்பாஞ்சலி
புஷ்பாஞ்சலி

யத்தனபூடியின் இந்த நாவலிலும், திருப்பங்கள், நாடகத்தனமாகவே இருக்கின்றன. எதேச்சையாகத் தெருவில் பார்த்தவள் திடீரென ரயிலில் வருகிறாள். பணக்காரப் பெண் திடீரென ஏழையாகிக் கந்தல் கட்டுகிறாள். மாதவனின் முறைப் பெண்ணின் கணவன் திடீரென சந்தியாவின் வகுப்புத் தோழன் ஆகிறான். இப்படி நிறைய திடீரென!… சரி போகட்டும்.

Vijethaசுதாவின் மீதான மாதவனின் குற்றச்சாட்டுடன் தொடங்குகிறது கதை. காதலித்த பெண், காதலித்தவன் செத்துப் போனான் என்று தெரிந்த பின் பின் மனது மாறுவது பாவமா என்ன? அவன் சாகாமல் திரும்பி வரும்போது, அடுத்தவரின் மனைவியாக இருந்துகொண்டு கையைப் பிடித்து ‘அய்யோ அத்தான்’ என்று கதறத்தான் முடியுமா? மாதவன் வழி இந்த கதை சொல்லப் படுகிறது. அவன் அவனுக்குள்ளயே வாழ்கிறான். அவனே என்னென்னவோ நினைத்துக்கொண்டு செய்கிறான். அது என்னென்னவோ சிக்கலை உண்டாக்குகிறது.

குழந்தை விபரத்தை நேரடியாக சொல்லாமல், ஒரு கடிதத்தில் எழுதி, அதை இரும்புப் பொட்டியில் போட்டுவிட்டு, தன் அறைப் பக்கம் புழங்காத சந்தியா அதை எடுத்துப் பார்க்கவேண்டும் என்றெல்லாம் எதிர்பார்ப்பது எல்லாம் என்று மாதவனின் தடுமாற்றம் எனக்கு அவன் மீது அதிருப்தியை உண்டாக்கியது.

ஒன்று நினைக்கிறேன். ஒரு பார்வையில் – யத்தனபூடியின் இந்த மாதவனும், ஜெயகாந்தனின் பிரபுவும் (பார்க்க ) ஒரு தன்மையைக் கொண்டவர்களே. ஆனால் மாதவனிடம் இல்லாத பக்குவம் பிரபுவிடம் உள்ளது. இத்தணைக்கும் மாதவன் நல்லவன். பிரபு ஒரு பணக்காரப் ‘பொறுக்கி’. அவனா இவனா என்று வரும்போது மாதவனை ஏறி மிதித்து நம்மை வாழ்க்கையைக் காட்டுபவன் பிரபுதான். இருவரிடமும் குழப்பங்கள் உள்ளன. ஆனால், மாதவனிடம் சிறுபிள்ளைத்தனம் அதிகம். சுயவதையும் அதிகம்.

ஒரு ஆணின் உணர்ச்சிகளை மையமாகக் கொண்ட நாவல். எளிமையான வாசிப்புக்கு உகந்த நூல். (மதியம் ஆந்திரா மீல்சை முடித்துவிட்டு, சாயங்கால காபிப் பொழுது வருவதற்குள் முடிந்துவிட்டது). அதற்கு முக்கிய காரணம் இதன் மொழிபெயர்ப்பு. சொப்பன சுந்தரியும் சரி, புஷ்பாஞ்சலியும் சரி, கடகட வென படிக்க வைக்கிறது கௌரி கிருபானந்தனின் மொழிபெயர்ப்பு.

இன்னுமொரு பதிவில் சந்திப்போம் நண்பர்களே.

வளர்க பாரதம்.

 

2 thoughts on “புஷ்பாஞ்சலி | யத்தனபூடி சுலோசனாராணி

  1. தெலுங்கு எழுத்தாளர் சுலோசனாராணி நம்ப சிவசங்கரி, ரமணி சந்திரன் டைப்போ? கதைச் சுருக்கத்திலிருந்து அப்படித்தான் தெரிகிறது. கௌரி கிருபானந்தன் ஒரு திறமையான மொழிபெயர்ப்பாளர் போலும்.

    1. இது வரை வாசித்த இரண்டு நாவல்களை மட்டும் கணக்கில் வைத்துப் பார்த்தால், உங்கள் கேள்விக்கு ஆம் என்றுதான் பதில் சொல்லவேண்டும்.
      வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி ஏகாந்தரே.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s