மியான்மரின் மண்டலே நகரின் இர்ரவாடி ஆற்றங்கரையில் அமைந்துள்ள தொன்மையான நகரம் பகான். கிபி 9 தொடங்கி 23ஆம் நூற்றாண்டு வரை பகான் அரசின் தலைநகரமாக இருந்த பகான், பின்னாளில் தற்கால மியான்மராக ஆகியிருக்கும். இந்தக் காலகட்டத்தில் மகானில் மட்டும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பல கோயில்கள், பகோடாக்கள், மடாலயங்கள் கட்டப்பட்டன.

பகானின் எழுச்சி
அவற்றில் 2200 கோயில்களும் பகோடாக்களும் தற்காலத்தில் காணக்கிடக்கின்றன. தேராவத பௌத்த மதத்துடன், மஹாயான பௌத்தம், தந்திரீக பௌத்தம் மற்றும் பிற இந்துப் பள்ளிகள் (சைவம், வைணவம்) இங்கு இருந்தன.
நேற்று இரவு ஆசிய நாகரீக அருங்காட்சியகத்தில் ‘பகானின் தினசரி வாழ்க்கை, 1000-1300’ என்கிற தலைப்பில் தேசீய தொழில்நுட்பக் கல்லூரி இணைப் பேராசிரியை கோ கியொக் யிவான் உரையாற்றினார். நானும் கண்ணனும் போயிருந்தோம்.
அங்கு நடந்த அகழாய்வுப் பணியில் ஈடுபட்டவர் என்பதால், அந்தச் செயல்திட்டத்தைப் பற்றியும் அதில் கிடைத்த பொருட்களைப் பற்றியும் புகைப்படங்களுடன் உரையைத் தயாரித்திருந்தார்.அதில் நான் புரிந்து கொண்டவை இவை.
புத்தமதமும் பழங்கால வியாபாரமும் இந்தப் பகுதிகளை இந்தியாவுடன் நெருக்கமாகப் பிணைத்திருந்தன. எனவே இது போன்ற நிகழ்வுகளில் துண்டு போடுவது இங்குள்ள இந்தியர்கள் வழக்கம். எதிர்பார்த்த படி, இந்தியாவின் தொடர்பு பற்றிய எந்தப் பேச்சும் இவர் உரையில் ஈடுபடவில்லை. ஆனால் விக்கியில் கொடுத்துள்ள தகவலின் படி,
– இந்தியா, இலங்கை மற்றும் கெமெர் பேரரசிலிருந்து பகானுக்கு துறவிகள் சென்றிருக்கின்றனர்.
– ஆந்திராவின் அமராவதி மற்றும் நாகார்ஜுனகொண்டா, இலங்கையின் சில பகுதிகளின் புத்த ஸதூபிகளின் சாயலில் இருந்து தோற்றுவிக்கப்பட்டவையாக இருக்கலாம்.
– பகானின் தொன்மையான பெயர் அரிமதனபுரம் (Arimadanapura)
உரையின் இறுதியில், ஒர இந்தியர் பகானின் ஆலயங்களை, வங்காளத்தின் பாலர் பேரரசின் ஆலயங்களோடு ஒப்பிட்டு வினவினார். அப்போது, இந்தியாவிற்கும் பகானிற்கும் வியாபார, கலாச்சார கொடுக்கல் வாங்கல் இருந்ததாக பதில் அளித்தார்.
இதில் எனக்கு விதான ஓவியங்களைப் பற்றிய செய்திகள் ஆர்வமூட்டுவதாய் இருந்தன. தவிர. இன்று பகான் சென்றால் என்ன பார்க்கவேண்டிய ஆலயங்கள் பற்றியும் கூறினார்.
பகானின் சிறப்பான காலகட்டம்
கியான்சித்தா அரண்மனை – அகழாய்வு
பத்தாம் நூற்றாண்டில் பகானின் பேரரசின் அரசராக இருந்தவர் கியான் சித்தா. தனது தந்தை அனவிரதரைப் பின்பற்றி, சமூக, பொருளாதார, கலாச்சாரப் பரிமாற்றங்களைத் தொடர்ந்தார். பகான் அரண்மனை என்று இன்றைய பிரதான சுற்றுலா மையத்தில் இருந்து எடுத்த அகழாய்வுப் படங்கள் ஆர்வமூட்டுவதாய் இருந்தன.
சீனாவுடன் நெருக்கமான உறவு இருந்ததை அகழாய்வு காட்டுகிறது. நிறைய சீன கலன்கள், தென்கிழக்கு ஆசிய பொருட்கள், மண்பாண்டங்கள், சிதலமடைந்த புத்தர் தலை சிற்பங்கள் கிடைத்திருக்கின்றன.
வட்ட வடிவமான நிறைய கட்டுமானங்கள் கிடைத்துள்ளன. படங்களில் பார்த்தாலே தெரிகிறது.
பௌத்தத்தின் விதான ஓவியங்களை வியக்காதவர் யார். ஏற்கனவே அஜந்தா பற்றி சுருக்கமாக இந்தப் பதிவில் எழுதியிருக்கிறேன். அதனைப் போன்ற அழகான விதான ஓவியங்கள் பகான் ஆலயங்களில் இருக்கின்றன. கூகிள் படங்களில் தட்டிப் பாருங்கள்.
ஆற்றங்கரையில் அமைந்துள்ள நகரம் என்பதால், நீர் வழிப் பயணங்கள் விதான ஓவியங்களில் வரையப் பட்டிருக்கின்றன.

பகானில் பார்க்கவேண்டியவை
பகானில் பார்க்க வேண்டியவையாக இதனைக் குறிப்பிடுகிறார்கள்.
ஆனந்த ஆலயம் (Lozong Ananada Temple)

தம்மயங்கி ஆலயம் (Dhammayangyi Temple (Old Bagan))
தத்பியின்யூ ஆலயம் – இருப்பதிலேயே உயரமான ஆலயம் (Thatbyinnyu Temple (Nyaung U & Wetkyi-In)-Tallest Temple)
ஆமா, அதென்ன பகானின் தினசரி வாழ்க்கை –
மடாலயங்களில் மலரிட்டு வழிபாடு
புத்த மத மந்திரம் ஓதுதல்
விவசாயம்
இப்படிப் போய்கொண்டிருந்திருக்கவேண்டும்.
பகானின் வீழ்ச்சி
பத்தாம் நூற்றாண்டில் தொடங்கி 11, 12ல் உச்சத்தை அடைந்து விளங்கியிருக்கிறது பகான். அனவிரதரின் ஆட்சியில் கலாச்சாரம் பொருளாதாரம் சிறந்து விளங்கியிருக்கிறது. பகான் என்றாலே பணம் படைத்த நகரம் என்கிற பெயர் விளங்கியிருக்கிறது. தீராது சேர்ந்த பணம் அதனுடன் பிரச்சினைகளையும் கொண்டு வந்து சேர்த்தது. செல்வத்தைப் பார்த்து மதி மயங்கிய சேவகர்கள், இராணுவ அமைப்பினர் பகானின் அரசியலமைப்பைச் சீர் குலைத்தனர். இந்தியாவின் கஜினி முகமது படையெடுப்பைப் போல, மங்கோலியர்கள் மீண்டும் மீண்டும் படையெடுத்து கொள்ளையடித்துள்ளனர். அத்துடன் பர்மாவின் இனக்குழுக்களான அரக்கனீயர்கள், மான்கள், தென்கிழக்கு ஆசிய இனக்குழுவான ஷான்கள் (அஸ்ஸாம் பகுதியைச் சேர்ந்தவர்களின் வழி வந்தவர்கள்) என்று பலரால் இந்த நகரம் சிதைக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு ஒரு சிற்றூராக இருப்பதாகத் தெரிகிறது. எனக்கு கொடும்பாளூர் நினைவிற்கு வருகிறது.
படங்களுக்கும் உரைக்கும் –
அருமை
வருகைக்கு நன்றி திரு பாரதி.