அம்மா கேட்டது:
“நீ ஏன் மற்ற காளைகளோடு ஓடிக்குதித்து விளையாடுவதில்லை? தலையால் முட்டிக் குதிப்பதில்லை? ஏன் இப்படித் தனித்திருக்கிறாய்?”
உடனே பெர்டினன் ‘மாட்டேன்’ என தலையை அசைத்தது. பிறகு, பதில் சொன்னது. “இந்த அமைதியான சூழலில் வாழ விரும்புகிறேன். மர நிழலில் உட்கார்ந்து பூக்களின் வாசனையை முகர்வது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.”
பெர்டினன் (கன்றுக்குட்டியின் கதை)
ஆசிரியர் – மன்ரோ லீப்
ஓவியம் – ரிச்சர்டு லாசன்
மொழி மாற்றம் – கொ. மா. கோ. இளங்கோ.
பதிப்பு – முதல் பதிப்பு செப் 2015 – Books for children, பாரதி புத்தகாலயம், சென்னை.
வணக்கம் நண்பர்களே.
நான் இப்பொழுது பெர்டினன் கதையைப் பற்றி எழுதப்போகிறேன். இந்த நூல் எனக்கு என் பெரியப்பா கொடுத்தது.
கதாபாத்திரங்கள்:
- பெர்டினன்
- பெர்டினன் அம்மா
- Cow boys நண்பர்கள்
கதைச் சுருக்கம்:
ஸ்பெயினில் நடக்கும் கதை இது. ஒரு சோம்பேறி மாட்டின் கதை. அதன் பெயர் பெர்டினன். அந்த மேய்ச்சல் நிலத்தில் வளர்கின்ற எல்லாக் காளைகளையும் போல இல்லை. நெட்டி மர நிழலில் அமர்ந்து பூக்களின் நறுமணத்தை நுகர விரும்புகிற வித்தியாசபிறவி. ஆனால் சந்தர்பமும் சூழ்நிலையும் பெர்டினன் ஸ்பெயின் தலைநகர் மேட்ரின் நடைபெறும் காளைச் சண்டையில் cow boy முன் நிறுத்துகிறது.
இந்த நூல் மிகவும் பிடித்திருந்தது. ஏன் என்றால் இது ஒரு நகைச்சுவை கதை.