“அப்புறம் அந்தப் பேய்?” ஆனி கேட்டாள்.
“அது மேலும் கீழும் போய் சுற்றிவரும். இவ்வழியாக செல்பவர்களை பயமுறுத்தும்” என்றாள் விள்ளா. சகோதரிகள் இருவரும் அமைதியானார்கள், ஒளிர்ந்து கொண்டிருந்த நீர் பரப்பையே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
Storm – குறுநாவல்
ஆசிரியர் – Kevin Crossley-Holland பிரிட்டிஷ் மொழி பெயர்ப்பாளர், சிறார் இலக்கிய ஆசிரியர்
விக்கி – Storm (novella)
NLB முன்பதிவு – Storm / Kevin Crossley-Holland ; illustrated by Alan Marks.
கன்னிமாரா முன்பதிவு – NA
வணக்கம் நண்பர்களே,
நான் இன்று புயல் என்று ஒரு கதையைப் பற்றி எழுதப்போகிறேன். எனக்கு இந்தக் கதை மிகவும் பிடித்திருந்தது. ஏன் என்றால் –
- இது ஒரு பேய் கதை.
- எப்படி கதையை விளக்கி எழுதுவது என்று நான் புரிந்து கொண்டேன்.
முக்கியமான கதாபாத்திரங்கள்
- ஆனி – ஒரு சிறிய பெண்
- விள்ளா – ஆனியின் அக்காள்
- திரு. கார்ட்டர் – ஆனியின் தந்தை
- திருமதி. கார்ட்டர் – ஆனியின் தாயார்
- திரு எல்க்கின் – வயல் வைத்திருப்பவர்
- ஸ்டார்ம் – மர்ம மனிதர்
- குதிரை – ஸ்டார்மின் குதிரை
- டாக்டர் கிராண்ட் – ஒரு டாக்டர்
எனக்கு 22, 23 ம் பக்கங்கள் மிகவும் பிடித்திருந்தன. ஆனி ஓர் சதுப்பு நிலத்தின் பக்கத்தில் வாழ்ந்து வந்தாள். ஆனியின் சிகை அலங்காரம் ஏபிஜே அப்துல் கலாம் மாதிரி இருந்தது. திரு எல்க்கினின் வயலை குத்தகைக்கு வைத்திருந்தவர், ஒரு சிலரால் கொல்லப்பட்டார். அதன் பிறகு அவர் பேயாக அங்கே அலைந்தார். அந்தப் பேய்க்கு கடவுள் மாதிரி ஒரு மனசு.
ஆனி பேய்க்குப் பயப்படுவாள். அவள் ஒரு மோசமான ராத்திரியில் அந்த சதுப்பு நிலத்தைக் கடக்க வேண்டிய சூழ்நிலை வந்தது. ஒரு மோசமான புயலில் ஆனியின் அக்காவிற்கு ஒரு மருத்துவ அவசரம் வந்தது. யாராலும் போகமுடியாத சூழலில், சிறிய பெண் ஆனி வீட்டிலிருந்து புறப்பட்டாள். அவ்வளவு பயப்படுகிற சிறிய பெண், ஒரு மோசமான புயலில் தனியாக டாக்டர் கிராண்டைக் கூட்டி வருவதாகச் சொன்னாள். அவள் எப்படிச் சொன்னாள், பேய்தான் சொல்ல வைத்திருக்குமோ என்று நினைக்கிறேன். அங்கே பேய் வந்ததா? ஆனியால் டாக்டர் கிராண்டைக் கூட்டி வர முடிந்ததா என்பதுதான் கதை.
தீபாவளி வாழ்த்துக்கள் 🍪 🍮 🎆 🎇