வணக்கம்!
இன்று நான் BOMB! புத்தகத்தை ஒரு மனிதன் வெடிகுண்டைப் பார்த்த மாதிரி பதட்டத்துடன் படித்தேன். இது ஒரு சாகசக் குறுநாவல்.
BOMB!
ஆசிரியர்: Jim Eldridge
படங்கள்: Dylan Gibson
பதிப்பு: Edinburgh : Barrington Stoke, 2011.
- NLBயில் முன்பதிவு
- கன்னிமாராவில் முன்பதிவு செய்ய – காணோம்.
- அருஞ்சொற்கள் பட்டியல்
இந்தப் புத்தகத்தில் ராப் என்பவன் குண்டை செயல் இழக்க வைக்க வந்தான். ஆனால் டாம் என்பவன் ரயில் நிலையத்தில் வெடிகுண்டைச் செயல் இழக்க வைக்கப் போயிருந்தான். அங்கே அவன் தவறான ஒயரை வெட்டியதால் அங்கேயே இறந்துவிட்டான்.
ராப் ஒரு இராணுவத்திலிருந்து வந்திருந்தான். அவன் வெடிகுண்டு செயல் இழக்க வைப்பதில் கிள்ளாடி. அவன் AC cleaner வேடத்தில் வந்தான். அது அவனால் செய்ய முடியுமா? அவன் இறந்துவிட்டானா என்பதுதான் கதை.