மச்சி.. கொஞ்சம் காசு தரியா? பட்டுப் பாதை போடனும்!


யுரேசியா மற்றும் ஆப்ரிக்கா உடனான பழைய பட்டுப் பாதையைப் புதுப்பிக்கும் திட்டமானது கடுமையான நிதிப் பிரச்சினையை எதிர்நோக்குகிறது என செஞ்சீனத்தின் வங்கியாளர்களும் அரசு ஆய்வாளர்களும் எச்சரித்துள்ளனர்.

(c) Sheng Li - Reuters
(c) Sheng Li – Reuters

OBORல் உள்ள நாடுகளால் தங்கள் நாடுகளில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்குக் காசு கொடுக்கும் நல்ல நிதி நிலைமையில் இல்லை.

பாதிபேர் ஏற்கனவே அதிக கடனில் மூழ்கி உள்ளனர். யாராவது பிற அரசுகளோ தனியார்களோ முதலீடு செய்வார்களா என்று ஏற்கனவே தவிக்கிறார்கள். அவர்களின் கடன் விகிதங்கள் 35லிருந்து 126 சதம் வரை உயர்ந்துள்ளன. (உலக அளவில் ஒத்துக்கொள்ளப்பட்டது 20 முதல் 100). இந்நிலையில் நாட்டின் வளர்ச்சிக்காக பணம் புரட்டுதல் என்பது மிகக் கடினமான செயல்.

CPEC Projects in Pakistan (c) http://www.riazhaq.com/2017/07/cpec-financing-is-pakistan-being-ripped.html
CPEC Projects in Pakistan (c) http://www.riazhaq.com/2017/07/cpec-financing-is-pakistan-being-ripped.html

சர்வதேச நிதி நிறுவனங்கள், வர்த்தக கடன் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற பெய்ஜிங் ஆர்வமாக உள்ளது. அதன் மூலம் இத்திட்டத்திற்கான நிதியாளர்களைப் பரவலாக்கலாம் என நினைக்கிறது சீனா.

AIIB, புதிய வளர்ச்சி வங்கி, சீன வளர்ச்சி வங்கி, சீன ஏற்றுமதி-இறக்குமதி வங்கி, மற்றும் பட்டுப் பாதை நிதி ஆகியவற்றின் மூலம் பணம் வாரி இறைக்கப்பட்ட போதிலும், இன்னமும் வருடத்திற்கு 500 பில்லியன் அமேரிக்க டாலர் அளவில் நிதி தேவைப்படுகிறது.

தனியார்கள் அதிக அளவில் பங்கேற்காமை, குறுகிய நிதி சேறும் வழிகள், குறைந்த இலாபம் ஆகியவை கவலையை ஏற்படுத்துவதாகக் கூறுகின்றனர்.

நிதித் தேவையை ஈடுகட்ட புதுப்புது வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டி உள்ளது. உலக அளவில் பிற நிறுவனங்கள், தனியார்கள் முதலீட்டில் பங்கேற்க வசதியாக ஒரு நிதி திரட்டும் முகமை அமைக்கப்படவேண்டும் என சீன வங்கியாளர் நினைக்கின்றனர்.

விரைவான நிதி விகிதாச்சாரங்கள் பெற, உள்நாட்டு அரசுகள் சீன அரசைப் போன்று வெளிநாட்டு முதலீட்டாளர்களிடையே சிலருக்குச் சலுகை தர வேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர்.

ஏற்கனவே பலன் தராத சொத்துக்கள் இருக்கின்ற போதிலும், அவை பொறுத்துக்கொள்ளக்கூடிய அளவிற்குள்தான் இருக்கின்றன என்று தற்காத்துக் கூறுகிறார் சீன வளர்ச்சி வங்கியின் முதுநிலை வர்த்தகவியலாளர்.

நாடுகளின் கடனைத் திருப்பிக் கட்டும் நிலைகளைக் கணக்கில் கொண்டதாக அவர் கூறுகிறார்.

(பாகிஸ்தான், நேபாளத்தில் எல்லாம் என்ன கண்டார்கள் என்று அவர்கள்தான் கூறவேண்டும். இததனைக்கும் இமயமலையைக் குடைந்து நேபாளத்திற்கு ரயில், ஆயில் என்று பெரிய பெரிய திட்டங்கள். ஒரு மலையைக் குடைந்து செங்கோட்டையிலிருந்து புனலூருக்கு ரயில் வழித்தடம் போட இந்திய அரசிற்கு ஏழெட்டு ஆண்டுகள் ஆகின்றன)

இதன் பின்னர் கொடுத்த பணத்திற்கு ஈடாக அந்தந்த நாடுகளிடம் எதைப் பெறப்போகிறது செஞ்சீனம் என்பதை பொறுத்திருந்து காண்க.

3 thoughts on “மச்சி.. கொஞ்சம் காசு தரியா? பட்டுப் பாதை போடனும்!

  1. உண்மையை போட்டு உடைத்து விட்டீர்கள்.

    1. எல்லோருக்கும் முன்னரே தெரிந்ததுதானே. ஆனால் சீன மந்திரவாதிகள் இதற்கும் ஏதாவது ஒரு ஊக்க மருந்து கொடுத்து டிராகனை ஓட விடுவார்கள் என்கிற நம்பிக்கை உள்ளது. பார்க்கலாம். வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி. புத்தாண்டு வாழ்த்துக்கள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s