விக்கிரமாதித்தன் பதில் அளிக்காமல் இருந்த பொழுது வேதாளம் சொன்னது –
நீ பேச பயப்படுகிறாய். சரி பரவாயில்லை. உனக்கு ஒரு கதை சொல்கிறேன். கதையின் முடிவில் உன்னிடம் ஒரு கேள்வி கேட்பேன். அதற்குப் பதில் கூற மறுத்து அமைதியாக இருந்தால், உன் தலையை ஆயிரம் துண்டுகளாக உடைத்துவிடுவேன்.
Vikramaditya’s Throne
கதை: கமலா சந்திரகாந்த்
ஓவியம்: நானா வாக்
எடிட்டர்: ஆனந்த் பாய்.
பதிப்பு: அமர் சித்ர கதா பி லிட், மும்பை.
அருஞ்சொற்கள்: பார்க்க
நல்ல குணமுடைய உதாரணமான மன்னராக இருந்ததால் விக்கிரமாதித்தனை எனக்குப் பிடிக்கும். இந்தக் கதையின் தலைப்பைப் பற்றி சொலகிறேன். விக்கிரமாதித்தன் என்பது அரசனின் பெயர். அரியணை என்பது சிவன் இந்திரனுக்கு அளித்த அரியணை.
ஒரு சமயம் இந்திரன் சிவனை மகிழ்வடைய வைத்தான். எனவே அதற்குப் பதிலாக சிவன் அவனுக்கு மிகவும் அழகு வாய்ந்த அரியணை ஒன்றைப் பரிசளித்தார்.
சிவன் மீது சில தேவலோகப் பெண்கள் காதல் கொள்வதைப் பார்வதி பார்த்தாள். கோபம் கொண்டு அவர்களைச் சபித்தாள். அதனால், அவர்கள் இந்திரனின் அந்த அரியணையில் பாவைகளாக மாறினார்கள். “பல நூறாண்டுகள் கழித்து இந்த அரியணை இராஜா விக்கிரமாதித்தனின் நாட்டுக்குப் போகும். போஜராஜா இதைக் கண்டுபிடிப்பான். அவன் அந்த அரியணையில் அமரும்போது அவனிடம் விக்கிரமாதித்தனின் கதையைக் கூறுங்கள். நீங்கள் சொல்லும் கதையை அவன் கேட்டால், உங்களுக்குச் சாப விமோசனம் கிடைக்கும்.”
சாகாவரம் பெற ஒரு பழத்தை ஒரு பிராமணனுக்குத் தருகிறாள் பார்வதி. அதை அவன் ராஜாவிடம் கொடுக்க அந்தப் பழம் பலரிடம் கை மாறுகிறது. அது மிகவும் நகைப்புக்குரிய வகையில் இந்தக் கதையில் சொல்லப்பட்டுள்ளது.
அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய சித்திரக் கதை.